கனடா காரை கலாச்சார மன்றம் தகவல் வெளியீடு – 02

CKCA LOGO

 

நாம் செல்லுகின்ற பாதையின் அடிச்சுவட்டினை உங்களுடன் பகிர்கின்றோம்.

பாகம் –01Foot step

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டில்  பொது மக்களின் ஈடுபாடு கடந்த காலங்களில் சற்று சரிவடைந்து கொண்டே போகின்றது. அதிலும் குறிப்பாக நிர்வாக சபையில் பங்கு கொள்வதில் இந்த நிலைப்பாட்டினை துலாம்பரமாக காணக்கூடியதாக இருக்கின்றது. இந் நிலையினை கடந்த இரண்டு பொது கூட்டங்களும், தெளிவு படுத்தி உள்ளது. அதன் விளைவாகவே, மன்றத்தின்  நிர்வாக பொறுப்பு  போஷகர் சபையிடம் கையளிக்கப்பட்டது. அக் கூட்டத்தில் வந்திருந்த அனைத்து பொது சபை உறுப்பினர்களும்,  ஏகமனதாக முடிவு எடுத்து  இந்த நடவடிக்கையினை மேற் கொண்டார்கள். மிகச் சிறு தொகையினரே வந்திருந்தனர். எனினும் அக்கூட்டத்தில் இருந்த அனைவரும் பொறுப்பு உணர்வோடு  எடுத்த முடிவினை பராட்ட வேண்டும்.

அதே வேளை பழைய நிர்வாக சபையும், நிர்வாகசபையின் பொறுப்பினை தற்காலிகமாகவேனும் எடுத்து செல்ல முடியாமல் போனதும் பொது மக்களின் இந்த புரட்சிகரமான அல்லது விரக்தியான முடிவுக்கு காரணமாகும்.

இந் நிலையில் ஆலோசகர் சபை (CONSULTATIVE  CAPACITY) அந்தஸ்த்தில் இருந்த போஷகர் சபை, நிர்வாக சபை (EXECUTIVE CAPACITY )  அந்தஸ்த்துக்கு  காலத்தின் கட்டாயத்தில் தள்ளப்பட்டது. இருப்பினும் போஷகர் சபை இதனை ஏற்றுக் கொண்டது. அப்போது ஏற்பட்ட நடை முறை சிக்கல்கள், ஆளணி பற்றாமை போன்ற காரணங்களினால் இரண்டாவது பொதுக்கூட்டத்தினை நடாத்தி அந்த குறை பாடுகள் சீர் செய்யப்பட்டது.  அடுத்து வங்கி நடை முறை பரிவர்த்தனைகள்  போஷகர் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

 அடுத்த கட்டமாக ஒன்று கூடல் பெருவிழாவிற்கு தயாரன போது அது நடை பெற இருந்த  இடத்தில் நிலவிய சுகாதார  குறை பாட்டினால் அதனை அனைத்து போஷகர் சபை / 2015 – ஒன்று கூடல் சிறப்பு குழு இணைந்த , ஏகமனதான முடிவின் பெயரில் இரத்து செய்தோம். அதற்கான காரணத்தை தெளிவாகவும், இரத்தின சுருக்கமாகவும் கூறி இருந்தோம். அதற்கான அந்த வார்த்தைகளை மீண்டும் இங்கே குறிப்பிடுவது மிக மிக அவசியம் என நாம் கருதுகின்றோம். 

“ இதற்கான சாத்திய கூறுகள் குறைவாக இருந்தாலும் , நோய் தொற்றும் பட்சத்தில்  விளைவு பயங்கரமாக இருக்கலாம் என்றும், வாழ் நாள் முழுவதுமே அதன் பக்க விளைவுகளுடன் வாழ வேண்டிய  சந்தர்பங்களும் ஏற்படலாம் என  அறியப் படுகின்றது.  இப்படியான சூழலில் நமது சமூகத்தின்  சார்பில்   Very High Risky  Decisions   எடுக்கும் அதிகாரம் மன்றத்திடம் இல்லை  “

அது மாத்திரம் அல்லாது , நாம் கூறியது போல மாற்று  இடத்தினை கண்டு பிடித்து. நீங்கள் அனைவரும் அதனை குதூகலமாக கொண்டாட மிக சிறந்த இடத்தினை நாம் அனைவரும் தேடி எடுத்து எமது இணைய தளத்தின்  மூலம் அறிவித்து உள்ளோம். இது நாம் அறிந்த வரையில் நமது சமூகத்தினர் மத்தியில், நாம் தான் இந்த இடத்திற்கு விழா உபய காரர்களான முன்னோடிகள் என்பதிலும் உங்களை பெருமை அடைய வைத்துள்ளோம்.

 ஆரம்பத்தில் கூறியது போல சரிந்து வரும் மக்களின் பங்களிப்பினை  எவ்வாறு சரி செய்யலாம் என கலந்து உரையாடினோம் அந்த வகையில் முதற் கட்டமாக நம் மத்தியில் ( கனடாவில்)  இயங்கும் மூன்று இணையத் தளங்களின் சேவையினை நாடி இருந்தோம். கடந்த காலத்தில் மன்றத்திற்கும் சில இணையத் தளங்களுக்கும் முறுகல் நிலை இருந்து வந்ததது அனைவரும் அறிந்ததே. சில நிறுவனங்களுடன் பனிப்போர் பிரகடனம் நடந்தது. ஆனால் நாம் எல்லாவற்றையும் கடந்து, தாய் / சேய் உறவினை நாடி நிற்கின்றோம்    அவர்களுக்கு எழுதிய  விபரங்களினையும் உங்களின் தகவலுக்காக இணைத்து உள்ளோம். CKCA யின் சமூக உறவினை வளர்க்க, நாம் நாடி வைக்கும் முதல் அடி. இதுவே.

எமது அன்பான அரவணைப்பினை இது வரையில் செவிமடுத்த அந்த இரண்டு இணைய தளங்களுக்கும்  எங்கள் சார்பிலும், உங்கள் சார்பிலும் அவர்களுக்கு நன்றிகளினை சமர்பிக்கின்றோம். அவர்களும் நமது நோக்கத்தை புரிந்து கொண்டு, நமது வேண்டுகோளை ஏற்று உள்ளனர். அவர்களின் புரிந்துணர்வினை பராட்டுகின்றோம். வரவேற்கின்றோம்.

 Karaihinducanada.com          karainagar.co  ஆகிய இணையத் தளங்களே நம்முடன் இணைந்து கொண்டவர்கள்.

                                             யாதும் ஊரே, யாவரும் கேளீர் !

                                               ஆயின் இவர்கள் ஏவ்வூரோ !!

                                                            நம்ம ஊர் தானே !!!

 இவ் வண்ணம்

CKCA போஷகர் சபையும், ஒன்றுகூடல் சிறப்பு குழுவும். 

 

இணைய தளங்களுக்கு எழுதிய கடிதம்

07/13/2015

 அன்பின்

திரு.  தீசன் திரவியநாதன், – KaraiNews.com

திரு. பொ.  குழந்தைவேலு, – Karainagar.Co

பழைய மாணவர் சங்கம்- கனடாகிளை Karinagar Hindu College

 வணக்கம்:

கனடா காரை கலாச்சார மன்றமும், அதன் இணையத் தளமும்   கனடா வாழ் காரைநகர் மக்களின் அபிலாஷைகளினை பிரதிதித்துவம் பண்ணும் வகையில் கனடாவில்  ஆரம்பிக்கப்பட்ட  முதலாவது நிறுவனமாகும்.

காலவோட்டத்தில் தங்களுடைய இணையத் தளங்களும் அதற்கான நிறுவனங்களும்  இயங்க ஆரம்பித்து உள்ளது அனைவரும், உலகும் அறிந்த விடயமாகும்.

இங்கே , இந் நிலையில் கடந்த கால கசப்பான  உணர்வுகளை  புறந்தள்ளி, ஒர் சகோதரத்துவ முறையில் தத் தமது கொள்கைகளை பேணியும், அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டும் வாழ கனடா காரை கலாச்சார மன்றம் தன் நேச கரத்தினை நீட்டுகின்றது. தங்களின் அமைப்புகளும் இந்த நல்லண்ண முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி நாம் நீட்டிய நேசக்கரத்தினை இறுக பற்றி பிடிப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

                   வேற்றுமையில் ஓற்றுமை காண்போம் !

                         அயலவனை நேசி !!

                       யாதும் ஊரே, யாவரும் கேளீர் !!!

இந்த வாக்கியங்கள் பேச நன்கு இனிக்கும். நடைமுறையில் அமூல் செய்ய கொஞ்சம் மனம் கூசும். அந்த கூச்சத்தில் தெளிவு பெற்றால், நாம் சமூகத்தின்  உண்மையான வழிகாட்டிகளாக வாழலாலம். நாம் யார் என நம்மை நாமே அடையாளம் காட்டி கொள்வோம் !

நடந்தவைகள் முடிந்தவைகளாக போகட்டும். நடப்பவைகள் நல்லனவாக அமையட்டும். !!!

இன்று முதல் கனடா காரை கலாச்சார மன்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகளின் பிரதி உங்கள் இணையத்தள பிரசுரத்திரற்கு அனுப்பி வைக்கப்படும். அதனை நீங்கள் விரும்பினால் பிரசுரம் செய்யாலாம். அதே வேளை எமது மன்றம் சார்ந்த உண்மைகளற்ற எந்த பிரசுரங்களும் வருவதனை எமது  மன்றம் விரும்பவில்லை. மன்றம் சார்ந்து வரும் வெளியீடுகள் , அதில் பாவிக்கப்படும் வார்த்தைகள் தங்களின்  கண்ணியத்தின், சமூகம் சார்ந்த சிந்தனை விழிப்புணர்வின் தராதரம் அது வென்றும், பக்குவம் அது என்றும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இத்துடன் எமது 2015-ம் ஆண்டிற்கான கோடைகால ஒன்று கூடலுக்கான அறிவித்தல் வருகின்றது. தயவு செய்து பிரசுரம் செய்யவும். இது ஒரு சமூக ஒற்றுமைக்கான முதலாவது படிக்கல்லே ஆகும். மன்றம் சார்ந்த தகவல்கள் தேவைப்படின் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

இவ் வண்ணம் 

போஷகர் சபை – இணைப்பாளர்

கனடா காரை கலாச்சார மன்றம்.