Juriansz & Li Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக June 26, 2024 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நீதி மன்ற நகர்த்தல் பாத்திரம் (Notice of Motion) தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் குழப்பத்தில் முடிந்தது..!

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக June 26, 2024 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நீதி மன்ற நகர்த்தல் பாத்திரம் (Notice of Motion) தொடர்பாக இன்று சனிக்கிழமை மாலை 8:00 மணியளவில் Google Meet செயலியின் ஊடக தொடங்கிய கலந்துரையாடல் திரு. பத்மநாதன் மகேஸ்வரன் என்பவரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் குழப்பத்தில் முடிந்தது என்பதனை மிகுந்த மனவேதனயயுடன் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கடந்த கால நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் விசேடமான அழைப்புக்கள் அனுப்பப்படிருந்தபோதிலும், முக்கியமானவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதனை தவிர்த்திருந்தமையானது பல்வேறு சந்தேகங்களை தற்போது தோற்றுவிப்பதற்கு வித்திட்டுள்ளதுடன், கனடா-கரை கலாச்சார மன்றத்தின் எதிர்காலத்தினையும் கேள்விக்குறியாகியுள்ளது என்பதனை மிகுந்த வேதைனைகளுடன் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் நாம் இன்று நிற்கின்றோம்.

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நீதிமன்ற நகர்த்தல் பாத்திரம் (Notice of Motion) தொடர்பாக எமக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறாதது மட்டுமல்லாமல், திரு. பத்மநாதன் மகேஸ்வரன் போன்ற தனி நபர்களினை தூண்டி விட்டு எமக்குத் தொடர்ந்தும் இடையூறுகளை தோற்றுவிப்பதில் மட்டுமே சம்பந்தப்பட்ட தரப்பினர் குறியாக இருந்து செயற்பட்டுவருவதனால் நாம் இன்று ஒரு கையறு நிலையில் நிற்கின்றோம் என்பதனையும் மிகுந்த மனவேதனையுடன் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

என்னினும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பூரணமான ஒத்துழைப்புக் கிடைக்கும் பட்ஷத்தில், Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நீதிமன்ற நகர்த்தல் பாத்திரம் (Notice of Motion) தொடர்பாக உரிய முறையில் நீதிமன்றத்திற்கு பதில் அணைப்பது தொடர்பாக நாம் தொடர்ந்தும் ஆராயத் தயாராகவே உள்ளோம் என்பதனையும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது தொடர்பாக கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருப்பின் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளும்படி மிகுந்த பணிவன்புடன் கனடா வாழ் காரைநகர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

காப்பாளர் சபை
கனடா-கரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

Leave a Reply