Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான அறிவித்தல்

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக June 26, 2024 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நீதி மன்ற நகர்த்தல் பாத்திரம் (Notice of Motion) தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல், காரைநகர் செம்பாட்டைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசித்துவரும் பத்தன் என்று அறியப்படும் திரு. பத்மநாதன் மகேஸ்வரன் என்பவரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் குழப்பத்தில் முடிந்தது என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு ஏற்க்கனவே அறியத்தந்திருந்தோம்.

இதனையடுத்தது, குறித்த Retainer Agreement அல்லது Engagement Letter தொடர்பாக, கனடா-கரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினால் Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்திற்கு எழுத்து மூலம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு அறியத்தருகின்றோம்.

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்திற்கு கனடா-கரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினால் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலின் பிரதியொன்று கனடா வாழ் காரைநகர் மக்களின் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள் இருப்பின் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளும்படி மிகுந்த பணிவன்புடன் கனடா வாழ் காரைநகர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

காப்பாளர் சபை
கனடா-கரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

Leave a Reply