அறிவித்தல்

இலங்கையில் வசித்து வரும் இலங்கை பிரஜாவுரிமையுள்ள திரு. அரியரத்தினம் ஜெகதீஸ்வரன் என்பவரினால், காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா என்ற அமைப்பின் பெயரில் கனடாவில் வசித்து வரும் கனடிய பிரஜாவுரிமையுள்ள தனி நபர் ஒருவருக்கு எதிராக நேற்று முன்தினம் (June 12, 2024) ஒன்டாரியோ உயர் நீதி மன்றத்தில் (Superior Court of Justice-Ontario) முன்னகர்த்தப்பட்ட நீதி மன்ற நடவடிக்கைகள், நர்த்தல் தரப்பான திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரினின் பூரண கட்டுப்பாடில் இயங்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா என்ற தரப்பினரின் சடத்தரணிகளினால் சரியான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் October 3, 2024 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதனையும், திரு. அரியரத்தினம் ஜெகதீஸ்வரினின் பூரண கட்டுப்பாடில் இயங்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா என்ற அமைப்பின் பொறுப்பற்ற இந்த இழுத்தடிப்பு நடவைக்கைகளின் மூலம் கனடா-கரை கலாச்சார மன்றம் தனது சமூக நலப்பணிகளை ஒரு தீர்க்கமான முறையில் முன்நகர்த்த முடியாதவாறு முட்டுக்கட்டைகளை போட்டு வருவது நமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவுள்ளது என்பதனையும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

ஒன்டாரியோ உயர் நீதி மன்றத்தினால் நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரதியினை கீழே காணலாம்.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” – மகாகவி சுப்ரமணிய பாரதியார்

காப்பாளர் சபை
கனடா-கரை கலாச்சார மன்றம்