வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய இரு பாடசாலைகளின் இரு அடிப்படை குறைபாடுகளையும் நீக்கிவைக்க கனடா காரை கலாசார மன்றம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து இயன்றளவு நிதி உதவியை எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய இரு பாடசாலைகளின் இரு அடிப்படை குறைபாடுகளையும் நீக்கிவைக்க கனடா காரை கலாசார மன்றம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து இயன்றளவு நிதி உதவியை எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து பயணித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலையின் அடிப்படை தேவைகளில் ஒன்றான தண்ணீர் வசதியை மேம்படுத்த உதவியிருந்தது.

தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தினால் அடையாளம் காணப்பட்ட வியாவில் சைவ வித்தியாலய சத்துணவு,மதிய உணவு சமையல்கூடம் பயன்படுத்த முடியாதளவில் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் இருப்பதை 2019ம் ஆண்டு முதல் அவதானித்து வந்தது. ஆனாலும் இதுவரை சீர்செய்ய எடுத்த முயற்சிகள் பயன்ற்று போன நிலையில் தற்போதைய நிர்வாகம் அதனை புனரமைத்து கொடுக்க முன்வந்துள்ளது.
உத்தேச செலவு 6 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் சுப்பிரமணியம் வித்தியாசாலையின் வகுப்பறை கட்டிடங்களிற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை செய்து வழங்கவும் தற்போதைய கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை முன்வந்துள்ளது. காரைநகர் சுப்பிரமணியம் வித்தியாசாலையின் மேற்கு பகுதி வகுப்பறைகள் பாதுகாப்பற்றவகையில் திறந்த வகுப்பறைகளாக இருந்து வந்திருப்பதை யாவரும் அறிந்ததே, அதன் ஒரு பகுதியை பாதுகாப்புடன் கூடிய அழகிய வகுப்பறைகளாக செப்பனிட்டு வழங்க கல்விக்கோட்டம் 2019 இல் ஒரு தொகை நிதியுதவியளித்து இரண்டு வகுப்பறைகளிற்கான பாதுகாப்பினை செயற்படுத்திக்கொடுத்துள்ளது. மேற்படி கட்டிடத்தின் மேலும் மூன்று வகுப்பறைகள் திறந்த நிலையிலும் கதவுகள் அற்ற வகையிலும் உள்ளது. அதனை முழுமைபெற்ற வகையில் செப்பனிட்டு வழங்குமாறு சுப்பிரமணிய வித்தியாசாலையிடமிருந்து கனடா காரை கலாசார மன்றத்திற்கு வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. இந்த ஆண்டு பாடசாலைக்கு விஜயம் செய்த கனடா காரை கலாசார மன்ற நிர்வாக உறுப்பினர்களிடம் அதிபர் நேரில் தெரிவித்தார். அதனை ஆராய்து அதற்குரிய உத்தேச செலவீனங்களை பெற்றுக்கொண்ட தற்போதைய நிர்வாகத்தினர் அச்செயற்பாட்டினை நிறைவேற்றி வழங்க நிர்வாக சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச செலவு 6 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய இரு பாடசாலைகளின் மேற்குறித்த இரு அடிப்படை குறைபாடுகளையும் நீக்கிவைக்க கனடா காரை கலாசார மன்றம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்துஇயன்றளவு நிதி உதவியை எதிர்பார்க்கின்றது.

நிதியுதவி செய்ய விரும்புவோர் மன்ற மின்னஞ்சல் : karainagar@gmail.com அல்லது தொலைபேசி இலக்கம் : 416 418 5697 என்பனவற்றுக்கூடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளில் முக்கியமானதும் காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முக்கியமானதுமான பாடசாலைகளின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயற்பட்டு கனடா வாழ் காரைநகர் மக்கள் மன்றத்திற்கு வழங்கிவரும் அனுசரணைகள் ஊடாக பலவித அத்தியாவசிய அடிப்படை தேவைகள் காரைநகர் பாடசாலைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கனடா காரை கலாசார மன்றத்தின் ‘காரை வசந்தம்’ நிகழ்வின் ஊடாக பெறப்படும் பெருமளவான நிதி காரைநகர் பாடசாலைகளின் தேவைகளிற்காக நிர்வாக சபையின் தீர்மானங்களிற்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டு காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

எதிர்வரும் Dec 02. 2023 சனிக்கிழமை நடைபெறவுள் “காரை வசந்தம் 2023” நிகழ்வில் கலந்து கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளிற்கு ஆதரவு வளங்கி காரைநகர் பாடசாலைகளை மேம்படுத்த அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி.

     நிர்வாகம்
கனடா காரை கலாசார மன்றம்