Category: Election 2015

கனடா-காரை கலாசார மன்றம் 2015 நிர்வாக செயற்குழு தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும்!

     CKCA LOGO  

       கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாக செயற்குழு  

                    உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 10.05.2015

              கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக  சபை / போஷகர்  சபை
                  2015 -2017 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்.
                                நடைமுறை வழிகாட்டல் ஆவணம்    

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. தலைவர்
2. உபதலைவர்
3. செயலாளர்
4. உபசெயலாளர்
5. பொருளாளர்
6. உபபொருளாளர்
7. நிர்வாக சபை உறுப்பினர்கள்
8. போஷகர் சபை உறுப்பினர்கள்


1.    தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் ( மே 10 , 2015 )  போது நடைபெறும்.

2.    இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2017 ம் ஆண்டு மார்ச் 31 ம் திகதியுடன் முடிவடையும்.

3.    மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும்   மே 8 , 2015 ம் திகதி  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும். 

4.    இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2014, 2015ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. 

5.    பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப் பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்பட மாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

6.    தேர்தலில் போட்டியிட விண்ணப்பவர்களின் பட்டியல் உடனுக்குடன் மன்ற இணைய தளத்தில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

7.    குறித்த பதவிக்கு மூன்று எண்னிக்கைக்கும் குறைவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் தேர்தல் மண்டபத்திலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

8.    குறித்த ஒரு பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு தேர்தல் மண்டபத்தில் வைத்தும் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

9.    விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும்  நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

10.    சகல விண்ணப்பதாரிகளும்  EMAIL , CELL TEXT MESSAGING    வசதி உள்ளவராக இருப்பது  விரும்பத் தக்கது.

11.    விண்ணப்ப படிவங்களை karainagar@gmail.com    என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது P O BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1    என்ற தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கால தாமதமானல் அதற்கு மன்றம் பொறுப்பு ஏற்கமாட்டாது. விண்ண்ப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். மின்ஞ்சல் மூலம் அனுப்புவர்கள் ஒப்பம் இட்ட பிரதிகளை அனுப்பவதில் வசதிக்குறைவு இருப்பின் தேர்தல் மண்டபத்தில் அதனை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

12.    சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யாலாம். இருப்பினும் குறித்த சில பதவிகளுக்கு  பின்வரும் தகைமைகள் உடையவர்களை மன்றம் எதிர்பார்க்கின்றது.

a.    தலைவர்: 

i.    ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு பாஷைகளிலும் சரளமாக  பிரச்சினைகளை கையாளக்கூடிய வல்லமையும், எழுத்தாற்றலும் உள்ளவராக இருத்தல் விரும்பத்தக்கது..
ii.    முகாமைத்துவ கல்வி அறிவும், அனுபவமும் இருத்தல் விரும்பத்தக்கது.

b.    செயலாளர்: 

i.    ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு பாஷைகளிலும் சரளமாக  பிரச்சினைகளை கையாளக்கூடிய வல்லமையும், எழுத்தாற்றலும், அதனுடன் கூடிய தட்டச்சு வல்லமையும் இருத்தல் விரும்பத்தக்கது.
ii.    ஆவணங்களை லாவகமாக கையாளும் திறமையும், பல தரப்பட்ட மக்களூடனும் தொடர்பு பேணி பிரச்சினைகளை மண்ணின் மணம் மாறாது கையாளும் வல்லமையும் இருத்தல் விரும்பத்தக்கது.
iii.    புதியஇ புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆற்றலுடன் கூடிய திறந்த மனப்பான்மையும்  இருத்தல் விரும்பத்தக்கது.

c.    பொருளாளர்:

i.    பண விடயங்களில் திடமான மன உறுதி வேண்டும்.
ii.    அடிப்படையான கணக்கியல் அறிவு அல்லது அனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது.
iii.    கொடுக்கல் வாங்கல் விபரங்களை உடனுக்குடன்  பதிவு செய்து அதற்கான ஆவணங்களினை பதுகாக்கும் பொறுபுணர்வு  இருத்தல் விரும்பத்தக்கது.

d.    போஷகர் சபை உறுப்பினர்:

i.    ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு பாஷைகளிலும் சரளமாக  பிரச்சினைகளை கையாளக்கூடிய வல்லமையும், எழுத்தாற்றலும் உள்ளவராக இருத்தல் விரும்பத்தக்கது..
ii.    முகாமைத்துவ கல்வி அறிவும், அனுபவமும் இருத்தல் விரும்பத்தக்கது.
iii.    பிரச்சினைகள் வரும்போது பிரச்சினைகளை நடுநிலைமையுடன் கையாளும் திறமையும், மன பக்குவமும் உள்ளவராக இருத்தல் விரும்பத்தக்கது.
iv.    மன்றத்தின் வளர்ச்சிக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றலும் சமூகம் சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் உள்ளவராக இருத்தல் விரும்பத்தக்கது.

 

CKCA ELECTION APPLICATION FORM-2015 

CKCA ELECTION APPLICATION FORM-20130001

 

கனடா-காரை கலாசார மன்றம் புதிய நிர்வாக சபைக்கான தேர்தலும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.05.2015 அன்று நடைபெறவுள்ளது

CKCA LOGO (Copy)

 

 

 

இதுவரை புதிய நிர்வாக சபையில் இணைந்து கொள்ள

               விண்ணப்பித்தோர் விபரம் வருமாறு:

 

          விண்ணப்பித்த பதவி

          விண்ணப்பித்தோர்

1.  செயலாளர்

  திரு.இராசதுரை ரவீந்திரன்

2. போஷகர் சபை உறுப்பினர்

  திரு. தம்பையா  உருத்திரலிங்கம்(உருத்தி)

3. பொருளாளர்

 

  திரு. தம்பையா  உருத்திரலிங்கம்(உருத்தி)

4. உப பொருளாளர்

 

திரு. தம்பையா  உருத்திரலிங்கம்(உருத்தி)