Category: காரை ஒன்றுகூடல்

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும் பெரு விழா! ஞாயிறு காலை ஆரம்பம்!

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும்

பெரு விழா! ஞாயிறு காலை ஆரம்பம்!

 

காரை மக்களை திரண்டு வருமாறு அன்புரிமையோடு  அழைக்கின்றது கனடா-காரை கலாசார மன்றம்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் 29.07.2018 ஞாயிறு காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மனதிற்கு இதமளிக்கும் அமைதியான சூழலில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய Morningside பூங்காவில் காரையின் உறவுகள்  உறவு கொண்டாடி மகிழவுள்ளனர்.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும்  நிகழ்வு

நாம் காரை மண்ணின் மைந்தர்கள் என்கின்ற உறவுத் தொடர்பினைப் பேணவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்து எம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வு

ஊர் சார்ந்த மனப் பதிவுகளைத் தாங்கிய வண்ணம் உரிமையோடு கலந்துகொள்ளும் காரை மக்களின் உன்னதமான நிகழ்வு

தாயக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் BBQ

பாலப்பம், பழஞ்சோற்றுத் தண்ணீர், ஒடியல் கூழ், கொத்து றொட்டி  உள்ளிட்ட பெரியோர், சிறியோர் விரும்பும் பலதரப்பட்ட சுவையான உணவுகளை அனுபவம் மிக்க எமது தொண்டர்களின் உடனடித் தயாரிப்பில்  சுடச் சுட பெற்று சுவைத்து மகிழலாம்

தாயக பாரம்பரிய விளையாட்டுக்கள்

தாய்ச்சி, கால்பந்து, தாம்பிழுவைப் போர் போன்ற விறு விறுப்பான குழு நிலை விளையாட்டுக்கள்

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கவர்ச்சி மிகு விளையாட்டுக்கள்

அனைவரையும் வியப்படைய வைக்கும் வினோத உடைப் போட்டி

போட்டியாளர்களின் வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கிடையிலான போட்டி

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு

ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழவும், உணவு வகைகளை உண்டு சுவைக்கவும், போட்டிகளில் பங்கேற்கவும் அவற்றைக் கண்டு களிக்கவும் ஞாயிறு காலை முதல்  Morningside பூங்காவில் ஒன்று கூடத் தவறாதீர்கள்.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் நடைபெறவும் நிகழ்வை வெற்றிகரமானதாக அமைத்து வரலாற்றில் இடம் பிடித்துக்கொள்ளவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன்கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளம் சந்ததியினரும்  ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் உழைத்து வருகின்றனர்.

காரை மாதாவின் புதல்வர்கள் தத்தமது குடும்பங்களுடன் திரளாகக் கலந்துகொண்டு மகிழ்வது மட்டுமல்லாது  காரை மண்ணை பெருமைப்படுத்துமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றது உங்களுக்கான சேவையிலுள்ள உங்கள் கனடா-காரை கலாசார மன்றம்.

               

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 29.07.2018 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள்  பெயர்களை 28.07.2018 சனிக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

28.07.2018 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com  தொடர்பு கொள்ளவும்.

நன்றி

 

                      நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

 

                                                  “WORKING TOGETHER IS SUCCESS”

 

 

CKCA GET TOGETHER 2018 VOLUNTEER REGISTRATION

 

Verification

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 29.07.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2013ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
4. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 7 – 2011, 2012ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2009, 2010ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2007, 2008ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2005, 2006ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் ஓட்டம்  – ஆண்கள்
26 அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2001 முதல் 2004ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

33.அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்

34.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 19  – 2000 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
35. 200M – ஆண்கள்
36. 200M – பெண்கள்
37. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
38. சாக்கு ஓட்டம் – பெண்கள்
39. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
40. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 60
41. முதியோர் மெதுநடை – ஆண்கள்
42. முதியோர் மெதுநடை – பெண்கள்

 வினோத உடை போட்டி:  

43. சிறுவர் (Under 18)

44. பெரியோர் (Over 18)  

குறிப்பு:

வினோத உடைப்  போட்டியில்  சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு பிரிவுகளாக  இடம்பெறவுள்ளது.  போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து  சிறுவர்களும் , பெரியோர்களும் போட்டிக்கு தேவையான ஆடைஅணிகலன்களை தயார் செய்து கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 

தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 

இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 

மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                
BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

இளைய தலைமுறையினரின் நெறிப்படுத்தலில் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் – ஆடி 29, 2018 Morningside Park Area 1, 2 & 5

இளைய தலைமுறையினரின் நெறிப்படுத்தலில்

கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

ஆடி 29, 2018 Morningside Park Area 1,2 & 5

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இவ்வருடமும் ஆடி மாதம் 29, 2018 அன்று சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இம்முறை உறவுகளின் இளம்சந்ததியினரை முழுமையாக காரை கலாச்சார நீரோட்டத்தில் உள்வாங்கி, அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற வழிவகை செய்யப்படுகின்றது. ஆகையால் இளைய தலைமுறையினராகிய பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், கல்லூரிகளில் கற்கை நெறிகளை மேற்கொள்பவர்கள், பல்கலைக்கழகம்களில் பட்டப்படிப்பை பயில்பவர்கள், உயர் கல்வியின் பின்னரான உள்ளக/வெளிக்கள பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் தொழில்புரிபவர்கள் என்கின்ற வகைகளில் அடங்குகின்ற அனைவரையும் தங்கள் விபரம்களை பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிள்ளைகளுடைய முழுப்பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வி பயிலும் தரம் ஆகிய விபரம்களை  karainagar@gmail.com மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 29,2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

 

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் – 2018

 

 

  இடம்:  MORNINGSIDE PARK AREA 1&2&5

 

390 Morningside Ave, Toronto, ON M1C 1B9 

 

   காலம்: ஜூலை 29,2018 ஞாயிற்றுக்கிழமை 

 

       நேரம்: காலை  8.00 மணி முதல் 

 

            தொடர்புகளுக்கு:

கனடா காரை கலாச்சார மன்றம்

மின்னஞ்சல்: karainagar@gmail.com

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 29,2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் – 2018

 

  இடம்:  MORNINGSIDE PARK AREA 1&2&5

390 Morningside Ave, Toronto, ON M1C 1B9 

 

   காலம்: ஜூலை 29,2018 ஞாயிற்றுக்கிழமை 

       நேரம்: காலை  8.00 மணி முதல் 

 

            தொடர்புகளுக்கு:

கனடா-காரை கலாச்சார மன்றம்

மின்னஞ்சல்: karainagar@gmail.com

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை ஒன்றுகூடல் 2017 காணொளி!

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை ஒன்றுகூடல் 2017 காணொளி!

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடல் 2017 காட்சிகள்!

CKCA logo

[su_slider source=”media: 50639,50640,50641,50642,50643,50644,50645,50646,50647,50648,50649,50650,50651,50652,50653,50654,50655,50656,50657,50658,50659,50660,50661,50662,50663,50664,50665,50666,50667,50668,50669,50670,50671,50672,50673,50674,50675,50676,50677,50678,50679,50680,50681,50682,50683,50684,50685,50686,50687,50688,50689,50690,50691,50692,50693,50694,50695,50696,50697,50698,50699,50700,50701,50702,50703,50704,50705,50706,50707,50708,50709,50710,50711,50712,50713,50714,50715,50716,50717,50718,50719,50720,50721,50722,50723,50724,50725,50726,50727,50728,50729,50730,50731,50732,50733,50734,50735,50736,50737,50738,50739,50740,50741,50742,50743,50744,50745,50746,50747″ limit=”100″ height=”400″]

 

 பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/h9H8UmIT6yJeoNUt1

கனடா வாழ் காரை உறவுகளின் நாளைய வரலாற்றுப் பெரு விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி! கலந்து கொள்ளவுள்ள வாகனப் பாவனையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

CKCA logo

கனடா வாழ் காரை உறவுகளின் நாளைய வரலாற்றுப் பெரு விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கலந்து கொள்ளவுள்ள வாகனப் பாவனையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

கனடாவில் வதியும் காரை. மக்கள் தமது மண் சார்ந்து முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் முன்னணி நிலையினைப் பெற்றவையாக அமைந்தன என்பது மட்டுமல்லாது முன்னுதாரணமானவையாக விளங்கக்கூடியவை என்பதும் வரலாறாகும். அத்தகைய வரிசையில் இவ்வாண்டுக்கான கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும் நாளைய தினம் வெகு சிறப்பாக நடெபெறுவதற்கான முக்கியமான அனைத்து ஏற்பாடுகளும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினால் மிக நேர்த்தியான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

நாளைய தினம் மழையில்லாததும் அதிக வெப்பநிலையற்றதுமான சிறந்த காலநிலையினைக் கொண்டுள்ளது என காலநிலை அவதான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் காரையின் சொந்தங்கள் எவ்வித அசௌகரியங்களையும் எதிர்கொள்ளாது மகிழ்ச்சிகரமாகவும் மனநிறைவாகவும் நாளைய பகற் பொழுதைக் களிப்பதற்கு இயற்கை அன்னை எமக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கின்ற நல்ல செய்தியாகும். பெற்ற தாய்க்கு ஒப்பானதாகப் போற்றப்படுகின்ற பெருமைக்குரிய  காரை மண்ணின் பெயரால் நடாத்தப்படுகின்ற பெருவிழாவில் ஆவலோடு கலந்துகொள்ள நாளைய பகற் பொழுதை ஒதுக்கிவைத்து பெருந்திரளான காரை. மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Morningside பூங்காவிலுள்ள வாகனத் தரிப்பிட வசதி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் வாகனப் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் காலை 9.00மணிக்கு முன்னதாக  உங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொள்வது விரும்பத்தக்கது. தாமதித்து வருபவர்களுக்கு வாகனத் தரிப்பிட வசதி கிடைக்கவில்லையானால் பூங்காவிற்கு அண்மையிலுள்ள பொதுத் தரிப்பிடங்களுள் ஒன்றில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவந்து  நிகழ்விடத்தை சில நிமிடங்களில் வந்தடையலாம்.

                நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்   

தொடர்புகளுக்கு:

பாலச்சந்திரன்: 647 818 7443

தேவகுமார்: 647 853 7027

பிரபாகரன்: 416 455 8836

 

 

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும் பெரு விழா! ஞாயிறு காலை ஆரம்பம்!

CKCA logo

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும்

பெரு விழா! ஞாயிறு காலை ஆரம்பம்!

 

காரை மக்களை திரண்டு வருமாறு அன்புரிமையோடு  அழைக்கின்றது கனடா-காரை கலாசார மன்றம்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் ஞாயிறு காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மனதிற்கு இதமளிக்கும் அமைதியான சூழலில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய Morningside பூங்காவில் காரையின் உறவுகள்  உறவு கொண்டாடி மகிழ சங்கமிக்கவுள்ளனர்.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும்  நிகழ்வு

நாம் காரை மண்ணின் மைந்தர்கள் என்கின்ற உறவுத் தொடர்பினைப் பேணவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்து எம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வு

ஊர் சார்ந்த மனப் பதிவுகளைத் தாங்கிய வண்ணம் உரிமையோடு கலந்துகொள்ளும் காரை மக்களின் உன்னதமான நிகழ்வு

தாயக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் BBQ

பாலப்பம், பழஞ்சோற்றுத் தண்ணீர், ஒடியல் கூழ், கொத்து றொட்டி  உள்ளிட்ட பெரியோர், சிறியோர் விரும்பும் பலதரப்பட்ட சுவையான உணவுகளை அனுபவம் மிக்க எமது தொண்டர்களின் உடனடித் தயாரிப்பில்  சுடச் சுட பெற்று சுவைத்து மகிழலாம்

தாயக பாரம்பரிய விளையாட்டுக்கள்

தாய்ச்சி, கிரிக்கட், கால்பந்து, தாம்பிழுவைப் போர் போன்ற விறு விறுப்பான குழு நிலை விளையாட்டுக்கள்

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கவர்ச்சி மிகு விளையாட்டுக்கள்

வயதுக் கட்டுப்பாடின்றி அனைவரும் பங்கேற்கும் வினோத உடைப் போட்டி

போட்டியாளர்களின் வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கிடையிலான போட்டி

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு 

ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழவும் உணவு வகைகளை உண்டு சுவைக்கவும் போட்டிகளில் பங்கேற்கவும் அவற்றைக் கண்டு களிக்கவும் ஞாயிறு காலை முதல்  Morningside பூங்காவில் ஒன்று கூடத் தவறாதீர்கள். 

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் நடைபெறவும் நிகழ்வை வெற்றிகரமானதாக அமைத்து வரலாற்றில் இடம் பிடித்துக்கொள்ளவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன்கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும் தொண்டர்களும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் உழைத்து வருகின்றனர்.

காரை மாதாவின் புதல்வர்கள் தத்தமது குடும்பங்களுடன் திரளாகக் கலந்துகொண்டு மகிழ்வது மட்டுமல்லாது  காரை மண்ணை பெருமைப்படுத்துமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றது உங்களுக்கான சேவையிலுள்ள உங்கள் கனடா-காரை கலாசார மன்றம்.

 

[su_slider source=”media: 50360,50361,50362,50363,50364,50365,50366,50367,50368,50369,50370,50371,50372,50373,50374,50375,50376,50377,50378,50379,50380,50381,50382,50383,50384,50385,50386,50387″ limit=”28″ height=”480″]

 

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்


கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2012ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
4. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 7 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள் 
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2008, 2009ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2006, 2007ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2004, 2005ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் – ஆண்கள்
26 அஞ்சல் – பெண்கள்

18 & Under – 2000 முதல் 2003ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 19  – 1999 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
33. 200M – ஆண்கள்
34. 200M – பெண்கள்
35. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
36. சாக்கு ஓட்டம் – பெண்கள்
37. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
38.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 60
39. முதியோர் மெதுநடை – ஆண்கள்
40. முதியோர் மெதுநடை – பெண்கள் 

41.வினோத உடை போட்டி:  வினோத உடை போட்டியில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பங்கு பற்றலாம்.

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 

மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:
 

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                
BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH
 
YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 
 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 30,2017 திகதி நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 30,2017 திகதி நடைபெறவுள்ளது.  இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு  karainagar@gmail.com  அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
 
                                                                 நன்றி

                  நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

                       

                                              "WORKING TOGETHER IS SUCCESS"

 

 

CKCA GET TOGETHER 2017 REGISTRATION

 

Verification

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 30.07.2017 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 28.07.2017 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

28.07.2017 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதள் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
 
                                                                       நன்றி

 

                      நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

 

                                                  "WORKING TOGETHER IS SUCCESS"

 

 

 

CKCA GET TOGETHER 2017 VOLUNTEER REGISTRATION

 

Verification

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 30,2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் -2017

  இடம்:  MORNINGSIDE PARK AREA 1&5 
     
     390 Morningside Ave, Toronto, ON M1C 1B9 

   காலம்: ஜூலை 30,2017 ஞாயிற்றுக்கிழமை 

       நேரம்: காலை  8.00 மணி முதல் 

 


            தொடர்புகளுக்கு:

கனடா-காரை கலாச்சார மன்றம்

தொலைபேசி இல: 416 642 4912

மின்னஞ்சல்: karainagar@gmail.com

CKCA GET TOGETHER 2017

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் -2017

CKCA GET TOGETHER 2017

காரை ஒன்றுகூடல் 2016 காணொளி

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகளில் கனடா காரை மக்களின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்று வரும் காரை ஒன்றுகூடல் நிகழ்வு இவ்வருடம் 31.07.2016 அன்று கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

                காரை ஒன்றுகூடல் 2016  காணொளி

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2016 வரவு செலவு அறிக்கை!

CKCA logo

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2016 வரவு செலவு அறிக்கை!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகளில் கனடா காரை மக்களின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்று வரும் காரை ஒன்றுகூடல் நிகழ்வு இவ்வருடம் 31.07.2016 அன்று கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2016 வரவு செலவு அறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/08/Karai-ondru-koodal-IS.pdf

 

31.07.2016 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடல் 2016 காட்சிகள்!

View all

 
 
 
 
 
 
 
 

View all

 

<

[meteor_slideshow]

அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டு மாமா) அவர்களின் நினைவலைகளும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும்

PADU MAMAVerney07.2016

 

அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டு மாமா) அவர்களின் நினைவலைகளும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும்
 

                                                                                                                                                                                                                                   

          –  திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.Sc. 

1970 களில் இருந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைநகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த வாரிவளவு நல்லியக்க சபையானது கல்வி, கலை, விளையாட்டு என பல்துறைகளிலும் காரைநகர் வாழ் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் வகையில்; காரைநகரிலும் 1991-1996 காலத்தில் ஏற்பட்ட இடம்பெயர்வின்போது காரைநகருக்கு வெளியேயும் தளராமல் சேவையாற்றி வந்த சபையாகத் திகழ்ந்தமையை காரைநகர் வாழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். 

இச்சபையின் அச்சாணியாக அதன் செயலாளராக அரும்பெரும் தொண்டாற்றி கலைஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் என அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று அர்ப்பணிப்போடு சேவையாற்றியவர் 'பட்டுமாமா' என்று அன்பாக அழைக்கப்படும் அமரர்.சரவணமுத்து பத்மநாதன் என்றால் மிகையாது.

காரைநகர் மேற்கு, வாரிவளவு என்ற குறிச்சியில் 1932 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பிறந்த அமரர்.சரவணமுத்து பத்மநாதன் அவர்கள் தமது தொடக்கக் கல்வியை வியாவில் சைவ வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும்; முதுநிலைக் கல்வியை இவர் காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட யாழ்ற்றன் கல்லூரியிலும் பயின்று, பின்னர் இலங்கை எழுது வினைஞர்களுக்கான பொதுப் பரீட்சையில் சித்தியெய்தி கொழும்பில் இலங்கை போக்குவரத்துத் திணைக்களத்தில் எழுது வினைஞராகவும் பின்னர் யாழ் கல்வித் திணைக்களத்தில் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். 

பட்டு மாமா அவர்கள் வாரிவளவு நல்லியக்க சபையினூடாக காரைநகரில் கல்வி, கலை, விளையாட்டு எனப் பலதுறைகளில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்ததுடன் எமது பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களையும் பாதுகாத்தார். குறிப்பாக, காரைநகர் மாணவர்களுக்கிடையில் தமிழ் ஆங்கில பேச்சுப் போட்டிகள், பட்டி மன்றம், வாய்ப்பாட்டு இசைப் போட்டி, பரதநாட்டிய ஆற்றுகைப் போட்டிகள், கிராமிய நிகழ்ச்சிகளின் போட்டிகள் எனப் பல போட்டிகளை நடத்தி கலை ஆர்வமுள்ள வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டி ஊக்குவித்தார். தனது பெயரையோ புகழையோ விரும்பாமல் 

"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்"
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க 

ஆசிரியர்கள், கலைஞர்கள், கொடை வள்ளல்கள், விளையாட்டுத்துறை வீரர்கள் எனப் பல்துறை சார்ந்த பெரியவர்களை அணுகி அவர்கள் துணையுடன அக்காலத்திலிருந்து இன்று வரை காரைநகரில் கலைப்பணியாற்றி வரும் 'களபூமி முத்தமிழ் பேரவை', மற்றும் விளையாட்டுக் கழகங்கள், பாலர் பாடசாலைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த அளப்பெரும் பணிகளை அயராது பின்நின்று இயக்கியவர் பட்டுமாமா அவர்கள். 

இன்று இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் பிரபலமாக விளங்கும் காரைநகர் தந்த கலைஞர்களும், மேடைப் பேச்சாளர்களும், ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், ஏன் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற துறைசார் வல்லுநர்களும் அன்று வாரிவளவு நல்லியக்க சபை மேடையில் தமது கன்னி ஆற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வளர்ந்தவர்கள் என்று தயக்கமின்றிக் குறிப்பிடலாம்.    
 
அவரின் பொது சேவைகளில் ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். காரைநகர் மக்கள் காரைநகரை விட்டு 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து யாழ் குடநாட்டின் கிராமங்கள் எங்கும் பரந்து வாழ்ந்த சமயம், இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற காரைநகரைச் சேர்ந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஒரு பாராட்டு விழாவை நடத்தி ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஆயிரம் ரூபா(ரூ1000.00) ஊக்குவிப்புப் பரிசாக அன்று வழங்கியிருந்தார். சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்த இக்கட்டான காலகட்டதில் எங்கள் கிராம மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் பட்டுமாமா அவர்கள் அன்று சேவையாற்றியமை 

                      "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
                        ஆலயம் பதினாயிரம் நாட்டல்
                        அன்ன வாயினும் புண்ணியங்கோடி
                        ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"  

என்ற புரட்சிக் கவிஞர் பாரதியாரின் வரிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தமையை நினைவூட்டுகின்றது.

சமூக சேவையாளர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக வாழ்ந்து காரைநகரின் வரலாற்றில் மறக்க முடியாத இடம் பிடித்துக் கொண்ட பட்டுமாமா அவர்கள் 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தபோது கனடா ரொரன்ரோவில் அன்னாருக்கான இரங்கல் கூட்டம் ஒன்றினை திரு.சண்முகம் கந்தசாமி அவர்கள் தலைமையில் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களின் ஒருங்கமைப்பில் கனடா-காரை கலாச்சார மன்றம் நடத்தி கனடா வாழ் காரை மக்கள் அன்னாரை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வெளியிடப்படும் "காரைவசந்தம்-2008" சிறப்பு மலரில் அன்னாரின் பணிகள் பற்றி ஒய்வுநிலை அதிபர் திரு.க.தில்லையம்பலம் அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

காரைநகர் வாரிவளவு நல்லியக்க சபை தனது பணிகளின் ஒர் அங்கமாக காரைநகரில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசில்கள் வழங்கி வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து சேவையாற்றியது. அத்துடன் காரைநகரில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளையும், காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடற்பரப்பில் நீச்சல் போட்டி, காரைநகர் சுற்று வீதியில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், மற்றும் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம் போன்ற பெருவிளையாட்டுகளையும் நடத்தி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் பரிசளிப்பு விழாவில் பரிசுகளை வழங்கி விளையாட்டுத்துறையை ஊக்குவித்து வளர்த்தமை பட்டுமாமாவின் அளப்பரிய சேவைகளில் இன்னொன்றாகும். 

                       "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
                        செயற்கரிய செய்கலா தார்"

என்ற வள்ளுவன் குறளுக்கமைய செயற்கரிய செயல்களைச் செய்த சேவையாளராக பட்டு மாமா விளங்குகின்றார். 

அந்தவகையில், கனடா-காரை கலாச்சார மன்றம் ஆண்டு தோறும் நடத்தும் கோடை கால ஒன்று கூடல் விளையாட்டுப் போட்டிகளில் அவரின் சேவையை மதித்து ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமரர்.அருணாசலம் கருணாகரன் தலைமையிலான நிர்வாக சபை 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றியிருந்தும் அதனை அமுல்படுத்துவதில் தவிர்க்கமுடியாத சிக்கல் ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும். 

இருந்தபோதும் இவ்வாண்டு கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் வருடாந்த கோடை கால ஒன்று கூடல் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு (தாய்ச்சி) போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு "அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம"வழங்கப்பட இருக்கின்றமை "பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டகல்லும்…" என்று பதினோராம் திருமுறையில் சேரமான் பெருமாள் நாயனார் குறிப்பிடுவது போல சாலப் பொருத்தமானது.

 

காரை ஒன்றுகூடல் – 2016 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம் அனுமதி அனைவருக்கும் இலவசம்!

                 காரை ஒன்றுகூடல் – 2016
அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்
 அனுமதி அனைவருக்கும் இலவசம்


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31.07.2016 அன்று Morningside Park, Area 3 and 4 இல் நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கு கனடாவில் வதியும் அனைத்து காரை மக்களையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடனும் அன்புடனும் அழைக்கின்றோம்.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் இவ்வருட நிகழ்வுகள் கனடா வாழ் காரை சிறார்களையும் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் முகமாக கிடைக்கப்பெறும் அன்பளிப்புக்கள் முழுமையாக இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் பெரியோர்களிற்கு பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.


சிறுவர்கள், பெரியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகளுடன் ஊர் நினைவுகளுடன் விருந்துண்டு மகிழவும் பரிசுகளை அள்ளிச் செல்லவும் அழைக்கின்றோம்.


விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைத்து சிறுவர்களிற்கும் பெறுமதி மிக்க பரிசில்களும் வெற்றி பெற்ற சிறுவர்களிற்கு வெற்றி கேடயங்களும் வழங்கப்படும்.


கலந்து கொள்ளும் பெரியோர்களில் 30 பேர்களிற்கு அதிஸ்டம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படுவதுடன், காலை 10 மணிக்கு முன்னர் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள வருகை தந்து பதிவினை மேற்கொள்ளும் 20 பேர்களிற்கும் அத்துடன் இதுவர இணையத்தளம் ஊடாக தமது பதிவுகளை மேற்கொண்டவர்களிற்கும் அதிஸ்டம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.


காலை 10 மணி வரை சுடச்சுட அப்பம், மதிய போசனம், BBQ, ஊர் சுவையுடன் கூடிய ஒடியல் கூழ், மாலையில் கொத்து றொட்டியுடன் சுவை மிக்க இனிய கனடிய சோளம் இவற்றுடன் சிறுவர்களிற்கு தும்பு மிட்டாஸ், ஐஸ்கிறீம், Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் சுடச்சுட யாழ்பாண சுவையுடன் கூடிய கோப்பி என்பனவும் வழங்கப்படும்.


அனைத்தும் அனைவருக்கும் இலவசம்.


அனைத்து கனடா வாழ் காரை மக்களையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும். ஊர் நினைவுகளோடு கலந்து கொண்டு ஒற்றுமையினை நிலைநாட்டுவோம்.


நன்றி!

 நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்

[su_slider source=”media: 28186,28185,28184,28183,28182,28181,28180,28179,28178,28177,28176,28175,28174,28173,28172,28171,28170,28169,28168,28167,28166,28165,28164,28163,28162″ width=”920″ height=”600″ arrows=”no”]

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 31.07.2016 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 29.07.2016 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

29.07.2016 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதள் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
 
 
  நன்றி
நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

                         "WORKING TOGETHER IS SUCCESS"

CKCA GET TOGETHER 2016 VOLUNTEER REGISTRATION

 

Verification

காரை ஒன்றுகூடல் – 2016 அனுசரணையாளர்களிற்கு நன்றி!


CKCA logo

காரை ஒன்றுகூடல் – 2016 அனுசரணையாளர்களிற்கு நன்றி!

  ஜூலை 31,2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காரை ஒன்றுகூடல் நிகழ்விற்கு கனடா வாழ் காரைநகர் மக்களின் ஆதரவும் அனுசரணையும் கிடைக்கப்பெற்று வருகின்றது. இதுவரை பேராதரவு தந்த உள்ளங்களுக்கு நன்றி .  காரை ஒன்றுகூடல் –2016 க்கு ஆதரவாளர்களாக, அனுசரணையாளர்களாக மற்றும் கலந்து சிறப்பிப்பவர்களாக கனடா வாழ் காரைநகர் மக்களை ஒன்று திரளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதுவரை எம் மன்றத்தின் காரை ஒன்றுகூடல் நிகழ்விற்கு அனுசரணை வழங்கியோர் விபரம் வருமாறு:

 இல

 

                                 பெயர்

   தொகை

 

      1    தீசன் திரவியநாதன்       $1000.00  
     2    குணரத்தினம் சோமசுந்தரம்        $  100.00  
     3    பரமானந்தராஜா தம்பிஐயா            $  250.00  
     4    குமரேசன் கனகசபை      $  100.00  
     5    ஜெயச்சந்திரன் தம்பிராசா         $  100.00  
     6    உருத்திரலிங்கம் தம்பையா         $  100.00  
     7    பேபிராணி யோகநாதன்             $  100.00  
     8    ஜீவானந்தராஜா தம்பிஐயா          $  100.00  
     9    கேதீஸ்வரன்  பரமு       $    50.00  Water 5 Case 
    10    சந்திரசேகர் கந்தையா     $  100.00  
    11    பிரபாகரன் பரமலிங்கம்      $  100.00  
    12    A.A.கந்தசாமி (Millennium Driving School)     $  100.00  
    13    மனோகரதாஸ் கந்தையா    $  100.00  
    14    விக்னராஜா பாலசுப்பிரமணியம்      $  200.00  
    15    பஞ்சலிங்கம்  கந்தையா     $  100.00  
    16    ரஞ்சன் கணபதிப்பிள்ளை  (Homelife Future Realty Inc)      $  250.00  
    17    அரி மனோகரன்       $  100.00  
    18    சுந்தரேசன் கனகசபை        $  100.00  
    19    தேவகுமார் செல்லத்துரை      $  100.00  
    20    ஜெயக்குமார் நடராசா       $  100.00  
    21    பிரகலாதீஸ்வரன் நடராஜா     $  100.00  
    22    ஆதிகணபதி சோமசுந்தரம் (பிரபல பல்மருத்துவர்)    $  250.00  
    23    ராஜ் நடராஜா (Homelife Future Realty Inc)       $  250.00  
    24    சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம்                $  100.00  
    25    Everest Furniture      $  100.00  
     26    பாலகுமார்  வேலாயுதபிள்ளை                 Soft Drinks 10 Case
    27    மகாதேவன் பாலசுப்பிரமணியம் (Double Seal Insulating Glass Ltd)           $   750.00  
     28    தவக்குமார் பொன்னம்பலம்    $   100.00  
    29    கருணாவதி  சுரேந்திரகுமார்    $   100.00  
    30    தனா மாணிக்கவாசகர்  (Insurance Services)     Torch Light  30
     31    மயூரன் வேலாயுதம்பிள்ளை    $     60.00  
     32    Dr.ஜெயபாலன்  நமசிவாயம்     $     80.00  
    33    உமைபாகன் கனகேந்திரம்    $   100.00  
     34    உதயகுமார்  தம்பிராஜா      வாகன உதவி 
     35    செந்தூரன் கந்தையா    $   200.00  
    36    யோகேஸ்வரன் கந்தையா    $   112.46  
     37    நந்தகுமார் பரம்சோதி     $   100.00  

 

குளிர்பானங்கள், தண்ணீர், Corn, Watermelon, மற்றும் உணவு வகைகளுக்கான அன்பளிப்பை  வழங்கவுள்ளோர் மன்ற நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
கனடா-காரை கலாச்சார மன்றம்
தொலைபேசி இல: 416 642 4912
மின்னஞ்சல்: karainagar@gmail.com

 

CKCA GET TOGETHER 2016

கனடா- காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடல்-2016 கலந்துரையாடல் பற்றிய அறிவித்தல்!

CKCA logo

கனடா- காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடல்-2016 கலந்துரையாடல் பற்றிய அறிவித்தல்!


  அன்புடையீர்!

 கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கோடைகால ஒன்றுகூடல் JULY 31,2016  திகதி வெகு சிறப்பாக நடைபெற இருப்பதால் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்புவர்கள் மன்றத்தின் உபகுழு உறுப்பினராகவும் ,தொண்டராகவும்  இணைந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: Milliken Park Ground(outdoor) McCowan & Steeles Ave

காலம்: ஞாயிற்றுக்கிழமை   JULY 17,2016 காலை    10.00 மணி

தொலைபேசி இல: 416 642 4912

மின்னஞ்சல்: karainagar@gmail.com

 

நிகழ்ச்சிநிரல்

1. கடவுள் வணக்கம்

2. தலைவர் உரை
         காரை ஒன்றுகூடல்-2016 (கோடை கால ஒன்றுகூடல்)
 
3.  நிர்வாகசபை உறுப்பினர்கள்,உபகுழு உறுப்பினர்கள்,தொண்டர்கள் காரை ஒன்றுகூடல் பற்றிய கேள்வி பதில்

பணியாற்ற விரும்புவர்கள் இக்கலந்துரையாடலில்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி  

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்


                                    "WORKING TOGETHER IS SUCCESS"

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2011ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:

1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. பழம் பொறுக்குதல் – ஆண்கள்
4. பழம் பொறுக்குதல் – பெண்கள்

Under 7 – 2009, 2010ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்

5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள் 
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2007, 2008ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்

9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2005, 2006ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்

13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2003, 2004ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்

20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் – ஆண்கள்
26 அஞ்சல் – பெண்கள்

18 & Under – 1999 முதல் 2002ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்

27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 19  – 1998 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்

33. 200M – ஆண்கள்
34. 200M – பெண்கள்
35. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
36. சாக்கு ஓட்டம் – பெண்கள்
37. அஞ்சல் ஓட்;டம் – ஆண்கள்
38.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 60
39. முதியோர் மெதுநடை – ஆண்கள்
40. முதியோர் மெதுநடை – பெண்கள் 


41.வினோத உடை போட்டி:  வினோத உடை போட்டியில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பங்கு பற்றலாம்.

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் இல்லத்திற்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.


மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

 

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST                                  

BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

 

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதி நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதி நடைபெறவுள்ளது.  இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு  karainagar@gmail.com  அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.

 

  நன்றி

நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

                         "WORKING TOGETHER IS SUCCESS"
 

CKCA GET TOGETHER 2016 REGISTRATION

 

Verification

CKCA GET TOGETHER 2016

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதி நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதி நடைபெறவுள்ளது.  இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு  karainagar@gmail.com  அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.

 

  நன்றி

நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

                         "WORKING TOGETHER IS SUCCESS"
 

CKCA GET TOGETHER 2016 REGISTRATION

 

Verification

கனடா- காரை கலாச்சார மன்ற ஒன்றுகூடல் உபகுழுவில் இணைந்து கொள்ள விரும்புவர்களுக்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா- காரை கலாச்சார மன்ற ஒன்றுகூடல் உபகுழுவில் இணைந்து கொள்ள விரும்புவர்களுக்கான  அறிவித்தல்!

  அன்புடையீர்!

 கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கோடைகால ஒன்றுகூடல் JULY 31,2016  திகதி வெகு சிறப்பாக நடைபெற இருப்பதால் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்புவர்கள் மன்றத்தின் உபகுழுவில் இணைந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

பணியாற்ற விரும்புவர்கள்  தங்கள் பெயர்களை எதிர்வரும் 25.06.2016 சனிக்கிழமைக்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி  

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்


                                    "WORKING TOGETHER IS SUCCESS"

 

 

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது 


 ஒன்றுகூடல் அறிவிக்கப்பட்ட  முன்னைய திகதியில் கோயில் தேர்த் திருவிழாக்கள் நடக்க இருப்பதன் காரணமாக 28.05.2016 பொதுக் கூட்டடத்தின் போது கேட்டுக் கொண்டதற்கேற்ப கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.


நன்றி  

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்

CKCA GET TOGETHER 2016