Return to செயற்பாட்டு அறிக்கைகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் – 2009 August 9 – June 26, 2010.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் –  2009 August 9 – June 26, 2010.

இந்தப் பணிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச்சபை மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
• 2009ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்தமாக தரம் 6முதல் க.பொ.த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00 வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

• கடந்த வருட வன்செயல்களினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து காரைநகரிற்கு வந்திருந்த பாடசாலை சிறார்கள் சுமார் 500பேர் வரையில் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். இதில் 264 மாணவர்களும், 236 மாணவிகளும் அடங்குவர். காரைநகர் இந்துக் கல்லூரி 175, யாழ்ற்ரன் கல்லூரி 89, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை 51, பாலாவோடை அ.மி.த.க பாடசாலை 59, ஊரி 61, காரை மெய்கண்டான 13, வலந்தலை அ.மி.த.க பாடசாலை 40, வியாவில் அ.மி.த.க பாடசாலை 12. இந்த இடம்பெயர்ந்து காரைநகருக்கு வந்த பாடசாலை சிறார்களுக்கு 150,000.00ரூபாய்கள் பெறுமதியான சீருடைகள் 2009 October 30ம் திகதி காரை அபிவிருத்திசபையூடாக வழங்கப்பட்டது.
• காரைநகரில் வசிக்கும் வசதிகுறைந்த பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமை காரணமாக காரை அபிவிருத்திசபையை நாடியுள்ளார்கள். இந்த மாணவர்களுக்கு உதவும் முகமாக எமது மன்ற இணையத்தளம்www. karainagar.com மூலமா கனடா வாழ் காரை அன்பர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களால் வழங்கப்பட்ட நிதிகள். அத்தோடு காரைநகரில் வசதிகுறைந்த சிறார்களும் இதில் அடங்குவர். இந்த உதவிப்பணம் வருடா வருடம், வருடத்தில் இருதடவைகள் மற்றும் மாதாந்தம் என்ற ரீதியில் உதவி வழங்குபவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

• காரைநகரைச்சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரனின் மேற்படிப்பு உதவிக்காக மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) 2010 January இல் திரு. சிவகுமார் கனகசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

• குழந்தை நகுல்ராஜ் நக்கீரன், வயது 18மாதங்கள் இவர் கடந்த போரில் தனது பெற்றோரை இழந்துவிட்டார். தற்சமயம் இவர் தனது சித்தியின் பராமரிப்பில் உள்ளார். ஆனால் அந்த சித்தியின் கணவரும் கடந்த போரில் இறந்துவிட்டார். இப்படியான சூழ்நிலையில் சித்தியும் இந்த குழந்தையும் எந்தவித வருமானமும் இல்லாமல் உள்ளார்கள். எனவே இக்குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு எமது கனடா-காரை கலாச்சார மன்றத்தை அணுகியுள்ளார்கள். கடந்த வன்செயலில்  தனது பெற்றோரை இழந்த 18மாதக் குழந்தை நக்கீரனுக்கு 18வயது வரைக்குமான  ஒர்  நீண்ட கால பராமரிப்பு  உதவியை கனடா வாழ் காரை அன்பர்  ஒருவர் மனமுவந்து வழங்க முன்வந்துள்ளார். இவருக்கு மாதம் ரூ.2000.00 வீதம் நீண்டகால உதவித்திட்டமாக அவருடைய 18வயது வரைக்கும் இந்தப்பணம் வழங்கப்படும். (18வயது வரைக்குமான மொத்த பராமரிப்புச் செலவு 4இலட்சத்து 32ஆயிரம் ரூபாய்கள்).
  அத்தோடு இதே குழந்தை நகுல்ராஜ் நக்கீரனுக்கு திரு. செல்வராஜா தம்பையா 10,000.00ரூபாய்களும், திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா 5,000.00ரூபாய்களும் வழங்கியுள்ளனர்.
• சிறுவன் நகுல்ராஜ் நக்கீரனுக்கு வழங்கிய அதே அன்பர்  அடுத்த வருடம் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மருத்துவ பீட மாணவன் பிறேம்குமார் பிரசாத்திற்காக மாதம் 5000.00ரூபா 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) வழங்கும்  உதவித் திட்டத்திற்கும் தனது உதவியை வழங்க முன்வந்துள்ளார். இந்த மாபெரும் உதவியை அளித்த அந்த அன்பருக்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
• காரைநகரைச் சேர்ந்த கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தில் சென்ற வருடம் 5ம்வகுப்பில் புலமைப்பரிசில் பெற்ற மாணவன் ஜனகாந்தன் ஏகாம்பரம். இவர் தனது மேற்படிப்பை யாழ் இந்துக்கல்லூரியில் கற்று வருகின்றார். இவரது மேற்படிப்பு(A/L) முடியும் வரைக்கான உதவியாக மாதாந்தம் 3000.00ரூபாய்கள்(6வருடங்கள் ரூ.216,000.00) கனடா காரை அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.

• காரைநகரைச் சேர்ந்த செல்வி சிவதர்சினி இரத்தினம் என்பவர் யாழ்ப்பாண பல்கலைக்ழகத்தின் துணைப்பிரிவான இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைத்துறையில் கல்வி பயின்று வருகின்றார். இவரது குடும்பநிலைமை காரணமாக இவருக்கு மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்)  ஜெயந்தி துரைசாமி என்பவரால் ஜுன் மாதம் தொடக்கம் வழங்கிவருகின்றது.

• 19-2-2010இல் ஊரி பாடசாலைக்கு மின்இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் காரை அபிவிருத்திச்சபை மூலமாக வழங்கப்பட்டது.

• இதே பாடசாலையில் கல்வி பயிலும் தாய், தந்தையரை இழந்த மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கான உதவித்தொகை பாடசாலை அதிபரின் பெயர்ப் பட்டியல் எமது மன்றத்திற்கு கிடைத்த பிற்பாடு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

• 2010ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  திறமையான வசதிகுறைந்த 40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

 

Leave a Reply