காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதியம்!

CKCA logo

கனடா- காரை கலாச்சார மன்றம் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்யும் வகையில் 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் ரூபா வரை நிரந்தர வைப்பு நிதியத்தில் வைப்பில் இடுவதற்கு 'காரை வசந்தம் – 2014' இன் ஊடாக நிதி உதவி வழங்கியவர்கள் விபரம் கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

காரைநகரில் நாம் கல்வி கற்ற பாடசாலைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு கல்வித் திணைக்கழத்தினால் நிறைவேற்ற முடியாதளவில் ஏற்படும் செலவுகள் இத்திட்டத்தின் ஊடாக நிவர்த்தி செய்யப்படும். நிரந்தரமாக ஒவ்வொரு பாடசாலைகளின் பெயரில் இந்நிதியம் உருவாக்கப்படவிருக்கின்றது. காரைநகரில் தற்போது கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் ஆரம்ப பாடசாலைகளின் விபரம் வருமாறு:

1. யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்ப பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்)

2. சுப்பிரமணியம் வித்தியாசாலை

3. சுந்தரமூர்த்தி நாயனார்  வித்தியாலயம்

4. வியாவில் சைவ வித்தியாலயம்

5. ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம்(மீள் திறப்பு 2014)

6. மெய்கண்டான் வித்தியாசாலை

7. ஊரி அ.மி.த.க.பாடசாலை

8. பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை

9. தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை

10. வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை(சடையாளி)

11. வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை(அப்புத்துரை)

12. வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாசாலை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் மேற்படி பாடசாலைகளிற்கான 10 இலட்சம் ரூபா வரையான நிலையான வைப்பு நிதியத்திற்கு கனடா வாழ் காரைநகர் மக்கள் இதுவரை அள்ளி அள்ளி வழங்கி வருகின்றார்கள். பரோபகார சிந்தையும், நாம் கற்ற பாடசாலைகளின் நிலமைகளை முன்னேற்ற உறுதியும் கொண்டு மேற்படி திட்டத்திற்கு தேவையான நிதியினை கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக வழங்கி காலா காலத்திற்கும் நாம் கற்ற பாடசாலைகளின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உலகம் முழுவதிலும் வாழும் காரைநகர் மக்களே முன்வாருங்கள். இத்திட்டத்தினை நிறைவேற்றுவது தொடர்பாக மாற்று கருத்துக்களுக்கோ வேறு சிந்தனைகளிற்கோ இடம் அளிக்காதீர்கள். நாம் பிறந்து வளர்ந்த ஊரின் கல்வி பணிக்கு உதவிய முழுமையான மனதுடன் நாம் வாழும் நாடுகளில் இன்புற்று வாழ்வோமாக!

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'

School_Donation_List0001School_Donation_List0002School_Donation_List0003