காரைநகர் அபிவிருத்திச் சபையின் மூன்று நிகழ்வுகள் இன்று ஒரு மேடையில் மாணவர் நூலக ஆண்டு நிறைவு விழா,வாணி விழா,தரம் 5 புலமைப்பரிசில் மாணவர் கௌரவிப்பு விழா பழைய,புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்

DSC02309 (Copy)

காரைநகர் அபிவிருத்திச் சபையினர் நடாத்திய வாணிவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் சபையின் உப தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபருமான வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை சர்பாக சபையின் தலைவர் பூ.விவேகானந்தா (பாபு) ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்களின் பூஜை வழிபாடுகள் ஆசியுரையினைத் தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லுர்ரி மாணவர்களின் வரவேற்ப நடனத்துடன் விழா ஆரம்பமானது.

மாணவர் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவை முன்னிட்டு சிறப்புச் சொற்பொழிவினை எதியோப்பியப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி வி.கெனடி நிகழ்த்;தினார்.

தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேரும் கௌரவிக்கப்படதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 80 மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கியதுடன் அந்த மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றது. களபூமிகலையகம்,தங்கோடைமுன்பள்ளிஅம்பாள்முன்பள்ளி,சுப்பிரமணியவித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,மெய்கண்டான் வித்தியாலயம்,சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்,காரை கிட்ஸ் பார்க் உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் கலை நிகழ்வுகளை வழங்கியிருந்தன.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறந்த முறையில் காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலாளர் இ.திருப்புகழூர்சிய்கம் தொகுத்து வழங்கியதுடன் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் சபையின் சார்பாக உளம்கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் தரம் 5 மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சிப் பரீட்சைகள் கருத்தரங்குகள் என்பன கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.