கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தமிழ், சமய வகுப்புக்கள் கோலாகலாமாக, பக்தி பூர்வமாக இன்று நவராத்திரி தினமான 24.09.2014 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான தமிழ், சமய கலாச்சார பாரம்பரியங்கள கனடா வாழ் காரைநகர் மக்களின் பிள்ளைகளிடையே வளர்ப்பது என்னும் நோக்கிற்கிணங்க தமிழ், சமய வகுப்புக்கள் இன்று கோலாகலமாக, பக்தி பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காரைநகர் வலந்தலையை பூர்வீகமாகக் கொண்ட நல்லலிங்கம் நளாயினிதேவி தம்பதிகளின் மகளும், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 25 வருடங்கள் தமிழ் ஆசிரியராக கடமையாற்றியவருமான திருமதி சாந்தினிதேவி றமணிகரன் அவர்களை ஆசிரியராகவும் கொண்டு 2761 Markham Rd (at McNicole Ave), Sun City Plaza கட்டிட தொகுதியில் அறை இல B1  வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று நவராத்திரி தின பூசை ஆரம்பதினமாகையால் சரஸ்வதி பூசை வழிபாடுகளுடன் வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தமிழ், சைவ வகுப்புக்களிற்கு உதவி ஆசிரியர்களாக முன்னாள் ஆசிரியரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களும், கனடாவில் பரதநாட்டிய ஆசிரியையும், நிர்வாக சபை உறுப்பினருமான திருமதி ஞானாம்பிகை குணரத்தினம் அவர்களும் கடமையாற்ற முன்வந்துள்ளனர்.

இன்று நடைபெற்ற தமிழ், சமய வகுப்புக்களில் கலந்து கொண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊரிற்கான கல்விப் பணி மற்றும் கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் என்பவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி நடைபெறவுள்ள 'காரை வசந்தம் – 2014' நிகழ்வுகளிற்கு அனுசரணையாகவும் அன்பர்கள் 3500 டொலர்கள் வரை அன்பளிப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_3419 IMG_3420 IMG_3421 IMG_3423 IMG_3424 IMG_3425 IMG_3426 IMG_3428 IMG_3429 IMG_3430 IMG_3432 IMG_3433 IMG_3434 IMG_3435 IMG_3437 IMG_3438 IMG_3439 IMG_3440 IMG_3441 IMG_3442 IMG_3443 IMG_3445 IMG_3446 IMG_3447 IMG_3448 IMG_3449 IMG_3450 IMG_3451IMG_3452 IMG_3453 IMG_3455 IMG_3456 IMG_3458 IMG_3459