அரங்கப் பிரவேசம் செய்த இசைத்துறை மாணவிகள் கனடா-காரை கலாசார மன்றத்தினால் பாராட்டு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

 

அரங்கப் பிரவேசம் செய்த இசைத்துறை மாணவிகள் கனடா-காரை கலாசார மன்றத்தினால் பாராட்டு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

காரைநகருடன் தொடர்புடைய இசைத்துறை மாணவர்கள் அரங்கப் பிரவேசம் செய்கின்ற சமயங்களில் அவர்களுக்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் பாராட்டு விருதினை வழங்கி மதிப்பளிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை 2002ஆம் ஆண்டிலிருந்து பேணப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சென்ற மாதம் அரங்கேற்றம் கண்ட இசைத்துறை மாணவிகள் அறுவர்; அவர்களது அரங்கேற்ற அரங்குகளில் வைத்து பாராட்டு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

“இன்னிசை வேந்தர்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிகளும் திரு.திருமதி சிவலோகநாதன் தம்பதிகளின் புதல்விகளுமாகிய இரட்டைச் சகோதரிகள் செல்வி ஸ்ரேயா சிவலோகநாதன், செல்வி நேத்ரா சிவலோகநாதன் ஆகியோரின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 17-08-2019 சனிக்கிழமை ஸ்காபுரோ, Armenian Youth Center Armenian Youth Center அரங்கில் நடைபெற்றபோது கனடா-காரை கலாசார மன்றத்தின் செயலாளர் திரு.சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்களினால் பாராட்டு விருது வழங்கப்பட்டிருந்தது.

 

 

ஸ்ரீமதி சாயிபிருந்தா அருந்தவநாதன், “கலைமாமணி” ஸ்ரீமதி கீதா ராஜசேகர் ஆகியோரின் மாணவிகளும் திரு.திருமதி சிவராஜன் தம்பதிகளின் புதல்விகளுமாகிய செல்வி பிரமி சிவராஜன், செல்வி ஸ்ருதி சிவராஜன் ஆகியோரின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 30-08-2019 வெள்ளிக்கிழமை றிச்மண்ட் ஹில், Centre for Performing Arts Centre for Performing Arts அரங்கில் நடைபெற்றபோது கனடா-காரை கலாசார மன்றத்தின் உப-தலைவர் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களினால் பாராட்டு விருது வழங்கப்பட்டிருந்தது.

 

“இன்னிசை வேந்தர்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிகளும் திரு.திருமதி பரமானந்தராஜா தம்பதிகளின் புதல்விகளுமான சகோதரிகள் செல்வி நிதுசா பரமானந்தராஜா, செல்வி நிலானி பரமானந்தராஜா ஆகியோரின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 31-09-2019 சனிக்கிழமை றிச்மண்ட் ஹில், Centre for Performing Arts அரங்கில் நடைபெற்றபோது செயலாளர் திரு.ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்களினால் பாராட்டு விருது வழங்கப்பட்டிருந்தது.