கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்!

CKCA LOGO (Copy)
கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி (21.09.2014) ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் பங்குபற்றும் பிள்ளைகள் சரியாக 8 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

பங்குபற்றும் பிள்ளைகள் (1).பாலர் பிரிவு (2).கீழ்ப்பிரிவு (3).மத்திய பிரிவு (4).மேற்பிரிவு (4).அதிமேற் பிரிவு என ஐந்து பிரிவுகளாக வகுப்பு ரீதியாக கலந்து கொள்ளலாம். செப்டெம்பர் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்கின்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும். பேச்சு, வாசிப்பு, எழுத்து, பண்ணிசை ஆகிய போட்டிகளில் தனித்தோ அல்லது நான்கு போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

மேற்படி போட்டிகளிற்கான ஆக்கம் இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டுள்ளன. கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ஆக்கங்களே போட்டிகளிற்காக தயார் செய்யப்பட்டு ஆயத்தமாக பிள்ளைகள் வரவேண்டும். வெளியிடப்பட்டுள்ள ஆக்கங்களை இவ்விணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நேரடி தொலைபேசி 416 642 4912 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் செப்டெம்பர் 10ம் திகதிக்கு முன்னர் (10.09.2014) தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாகவோ அல்லது 416 642 4912 என்ற தொலைபேசியில் அழைத்து இலக்கம் 2 இனை அழுத்தி செயலாளர் உடன் தொடர்பு கொண்டு நேரடியாக பதிவினை மேற்கொள்ளலாம்.

பங்கு பற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான அங்கத்தவர் பணம் செலுத்தியிருத்தல் அவசியமானது. போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெறும் பிள்ளைகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளிற்கும் 'காரை வசந்தம் – 2014" இல் பரிசுகள் வழங்கப்படும். பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் 'காரை வசந்தம் – 2014" இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வங்கப்படும்.

நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றம்