நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

நெஞ்சம் நிறைந்த  நன்றிகள்

தொன்மையும் , பிரசித்தியும் பெற்ற  காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆருத்திரா அபிஷேக வழிபாடுகள்  மிகவும்  சிறந்தவையாகவும்,  பிரசித்தமானவையாகவும் அன்று தொட்டு இன்று வரை  இருப்பது அனைவரும் அறிந்ததொன்றாகும்.  அதே போன்ற வழிபாடுகளை  கனடாவில்  வாழ்கின்ற  காரைநகர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து  றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடாவருடம் நடாத்தி வருகின்றனர்.   வழமைபோன்று இம்முறையும்  வாரஇறுதி நாளில்  பெருந்திரளான அடியவர்களுடன் சிறப்பானதொரு பக்தியுலகத்துக்கு கொண்டு சென்ற நிகழ்வாக  நிகழ்ந்தேறின. இதற்கு பிரதான  உதவிபுரிந்த  சமய அன்பர்கள் மற்றும் பண அன்பளிப்புகள்  வழங்கியவர்கள்  , அபிஷேக திரவியங்கள் தந்து உதவிய  அடியவர்கள், தொண்டர்களாக தொண்டாற்றிய அன்பு உள்ளங்கள் ,  பத்திரிகை,  வானொலி  மற்றும் தொலைக்காட்சி  ஊடாக ஒலி ,  ஒளிபரப்பு  செய்து  உதவியோருக்கும்   அருள்தரும் இனிமையான  சங்கீத   கச்சேரி  செய்த காரை இளம் தலைமுறையினர்,  படப்பிடிப்பு ,  வீடியோ செய்து உதவியோருக்கும்,  பதிவுப் பகுதியை சிறப்பான முறையில் கையாண்ட  பதிவுக்குழுவினருக்கும்,  பிரசாதம் தயாரிப்பில் உதவி செய்தோருக்கும்,   நாதஸ்வர  இசை மழை  புரிந்த வித்துவான்களுக்குக்கும் ,  ஆருத்திரா வழிபாடுகளை சிறப்புற ஒழுங்கு செய்து ஒத்துழைப்பு நல்கிய ஆலய  அறங்காவலர் சபையினருக்கும்,  ஆருத்திரா அபிஷேகத்தை கண்கொள்ளா காட்சியாக நடாத்தி பக்தி பரவசத்தை ஏற்படுத்திய  சிவாச்சாரிய பெருமக்கள் குழுவினருக்கும்,  மற்றும் பல  வகைகளிலும் சிறப்பான  பணி புரிந்தோருக்கும்,  அதிகாலை பொழுதில் ஆடவல்லான் நடராஜப் பெருமான்  திருவருளைப்  பெறுவதற்கு திரண்ட அனைத்து மெய்யடியார்களுக்கும்   எம்பெருமானின் ஆசியையும்,  உள்ளம் நிறைந்த  நன்றிகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

                     நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்