கனடா காரை மக்களின் உபயத்தில் ஆருத்திரா அபிஷேகம்

கனடா   காரை மக்களின்  உபயத்தில்  ஆருத்திரா அபிஷேகம்

கனடா வாழ் காரை மக்கள்  ஒன்றிணைந்து நடாத்தும் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடம்தோறும் நடைபெற்று வருகின்றது.  இம்முறையும் வழமைபோல   மார்கழி 23, 2018 ஞாயிற்றுக்கிழமை  அன்று   மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.  அன்றையதினம்  அதிகாலை 4.45 மணி முதல்  நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு  ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று,  நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம்  உள்வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும்.  அன்றைய  மிகவும்  சிறப்பான நீண்ட வார இறுதி  விடுமுறை நாளில்,  எம்பெருமான்  ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல  நடராஜ பெருமானை தரிசித்து  இஷ்டசித்திகளை பெற்றுக்  கொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள்  நிர்வாகத்திற்கு 647 818 7443, 416 455 8836, 647 853 7027  இலக்கங்களுடைய தொலைபேசி ஊடாகவோ அல்லது karainagar@gmail.com மன்ற மின்னஞ்சல் ஊடாகவோ  தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு  வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

நிர்வாக சபை

கனடா காரை கலாச்சார மன்றம்