காரைத்தென்றல் – 2018 நிகழ்வில் சுவிஸ் வாழ் காரை இளையோர்களுக்கு மதிப்பளிப்பு

 

காரைத்தென்றல் – 2018 நிகழ்வில் 

சுவிஸ்  வாழ் காரை இளையோர்களுக்கு மதிப்பளிப்பு

 

சுவிஸ் வாழ் காரை இளையோர்களின் கற்கை செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக காரைத்தென்றல் -2018இல் மதிமளிப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது சுவிஸ் நாட்டின் கல்வித் திட்டத்திற்கு அமைவாக பல்கலைக் கழக புகுமுக உயர்தர வகுப்பில் (Schule Gymnasium) பயிலும் மாணவர்கள், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்கள், பட்டபடிப்பை நிறைவு செய்த மாணவர்கள், தொழிற் கல்விக்கு அனுமதி பெற்றவர்கள், தொழிற்கல்வியை தொடர்கின்றவர்கள்,  நிறைவு செய்த மாணவர்கள், சுவிஸ் நாட்டில் தமிழ் மொழியினை பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று தமிழ் கல்விச் சேவையால் சான்றிதழ் பெற்றவர்கள் என பலர்  கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

காரைத்தென்றல் -2011இல் இருந்து எமது சபையுடன் நெருங்கிய தொடர்பினை பேணிவருபவரும் சரஸ்வதி வித்தியாலய அதிபர் (சூரிக்), எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு உறுப்பினருமாகிய கலையரசி தாரணி சிவசண்முகநாதக்குருக்கள் அவர்களின் ஒருங்கிணைப்பில் “சுவிஸ் நாட்டின் கல்வி”  என்ற தொனிப்பொருளில் நம்மவர் இளம் சமூகத்துடனனான கலந்தரையாடல் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் சுவிஸ் வாழ் காரை மாணவர்களும், அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்து சுவிற்சர்லாந்து லுசேர்ன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்திற்காக கல்விபயிலும் காரைநகர் களபூமியைச் சேர்ந்த செல்வன் கமலரூபன் பரமேஸ்வரன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். சுவிஸ் நாட்டின். கல்வித்துறை முறைமைகளையும், வேலைவாய்ப்புத் துறைகளையும் பற்றி விளக்கமளித்தனர். இந் நிகழ்வின் மூலம் எமது தற்போதைய சிறார்களை சிறந்த முறையில் வழி நடத்த பேருதவியாக அமையும் என்பதில் ஜயமில்லை

தொகுப்புரை வழங்கிய அம்மணிக்கு திருமதி தயாநிதி சரவணப்பெருமாள் அவர்கள் பொன்னாடை போர்த்தியும், நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளரும், காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களால் பதக்கங்கள் அணிவித்தும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                              செயற்குழு உறுப்பினர்கள்

                       இளையோர் அமைப்பு

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                              சுவிஸ் வாழ் காரை மக்கள்

24.09.2018