பதின்நான்காவது ஆண்டு விழா காரைத்தென்றல் – 2018

சிவமயம்

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே”

பதின்நான்காவது ஆண்டு விழா

காரைத்தென்றல் – 2018

 

அன்புடையீர் வணக்கம்!

காரைநகர் மருதடி விநாயகர் துணைநிற்க!

காரைமாதாவின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள இளையோரின் தமிழறிவையும், கலையுணர்வுகளையும் வளர்க்கவும் கடந்த பல ஆண்டுகளாக ‘‘காரைத் தென்றல்” நிகழ்வுகளை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே!! இது வரை காலமும் சபைக்கு உதவிக்கரம் நீட்டிய உறவுகள் அனைவருக்கும்; நன்றிகளும், வாழ்த்துக்களும். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் இயல்,இசை, நாடகம் கலந்த முத்தமிழ் விழாவினை சுவிஸ் வாழ் காரை இளையோர்களுடன் இணைந்து பதின்நான்காவது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடாத்துவதற்கு திண்ணபுரத்தானின் திருவருள் பாலித்துள்ளது.

இடம்:-  Kirchgemeindehaus , Pfarrhausstrasse 2, 8424 Embrach,

காலம்:-  16-09-2018 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்:-  13.00 மணி

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று காரைத் தென்றல் பதின்நான்காவது ஆண்டு விழாவை சிறப்பிக்க பிரதமவிருந்தினராக முன்னாள் வடமாகண கல்விப்பணிப்பாளர், காரை அபிவிருத்தி சபை தலைவர்,  “கல்வி நிர்வாகக் கடல்” திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன்  அவர்கள் கலந்து  கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.  காரைத்தென்றல் நிகழ்விற்காக சுவிற்சர்லாந்துக்கு 15.09.2018 சனிக்கிழமை வருகை தர  இருக்கின்றார்கள்.   என்பதை மிக மகிழ்வுடன்  அறியத்தருகின்றோம்.

திரு.ப. விக்கினேஸ்வரன்  அவர்கள் காரைத்தென்றல் -2015இற்கு வழங்கிய வாழ்த்துரையினை கீழே காணலாம்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                             செயற்குழு உறுப்பினர்கள்

                       இளையோர் அமைப்பு

மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                          சுவிஸ் வாழ் காரை மக்கள்

                         30 – 08 – 2018