கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்படும் மொழித்திறன் , பண்ணிசைப் போட்டிகள் 2018

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்படும்

மொழித்திறன், பண்ணிசைப் போட்டிகள் 2018

வருடம்தோறும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால்  காரை சிறார்களுக்கான மொழித்திறன், பண்ணிசை போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றதது. வழமைபோல இம்முறையும் தமிழ்த்திறன் பேச்சு, வாசிப்பு , எழுத்து மற்றும் பண்ணிசைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்துடன் ஆங்கில மொழியிலான பேச்சு, எழுத்துப் போட்டிகளும் இந்த வருடம் தொடக்கம் நடாத்தப்படவுள்ளன. ஆகையால் கனடா வாழ் காரை சிறார்கள் அனைவரும் மொழித்திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டிகள் யாவும் செப்டம்பர் 2 , 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை Scarborough civic center இல் நடை பெறும். தயவு செய்து பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை தகுதி காண் போட்டிகளில் பங்குபற்ற வைத்து, ஆளுமை விருத்திக்கு உதவுமாறு கனடா காரை கலாச்சார மன்றத்தினர் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றனர்.

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

 

  1. பண்ணிசைப் போட்டி – பாலர் பிரிவு (JK, SK)   ஏதாவது ஒரு தேவாரம்

 

  1. பண்ணிசைப் போட்டி – கீழ்ப்பிரிவு (தரம் 1,2) ஏதாவது ஒரு தேவாரம்

 

  1. பண்ணிசைப் போட்டி – மத்திய பிரிவு (தரம் 3,4) ஏதாவது ஒரு தேவாரம், ஏதாவது ஒரு புராணம்

 

  1. பண்ணிசைப் போட்டி – மேற்பிரிவு (தரம் 5,6) ஏதாவது ஒரு தேவாரம், ஏதாவது ஒரு புராணம்

 

  1. பண்ணிசைப் போட்டி – அதிமேற்பிரிவு (தரம் 7,8,9) ஏதாவது ஒரு தேவாரம்

ஏதாவது ஒரு புராணம், ஏதாவது ஒரு திருவாசகம்)

 

  1. பண்ணிசைப் போட்டி – உயர் பிரிவு (தரம் 10, 11, 12) ஏதாவது ஒரு தேவாரம்,

ஏதாவது ஒரு புராணம், ஏதாவது ஒரு திருவாசகம்.

 

  • யூலை 2018ல் பாடசாலையில் இறுதியாகக் கற்ற வகுப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

 

  • மத்தியஸ்தர்களின் முடிவே இறுதி முடிவாகக் கருதப்படும்.

 

  • மத்தியஸ்தர்களின் அறிவுறுத்தலைக் கவனித்து அதன்படி போட்டியாளரகள் செயற்படுங்கள்.

 

  • பண்ணிசைப் போட்டி முடிந்ததும் போட்டியாளர்கள் உடனடியாக அடுத்த அறைகளில் நடைபெறும் பேச்சு, வாசிப்புப் போட்டிகளில் பங்கு கொள்ளலாம் அதன் பின்னர் எழுத்துப் போட்டி நடைபெறும் அறைக்கு செல்ல தொண்டராக கடமையாற்றும் மாணவ, மாணவிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

  • போட்டிகளின் முடிவுகள் தலைமை மத்தியஸ்தரினால் போட்டிகளின் இறுதியிலும், http://www.karainagar.com மன்ற இணையத்தளத்திலும் மறுநாள் பார்வையிடலாம்.

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

பாலர் பிரிவு – JK, SK

 

பேச்சு

 

எங்கள் நாடு

 

  1. எமது நாடு இலங்கை ஆகும்

 

  1. இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளது

 

  1. இதனால் இதனைத்தீவு என்றும் கூறுகின்றனர்

 

  1. எமது நாட்டவர் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என மூன்று இனத்தவர் வாழ்கின்றனர்.

 

  1. நமது நாட்டவர்கள் வியாபாரிகள், அரச ஊழியர், தோட்டக்காரர், கைத்தொழிலாளர், ஆசிரியர் என பல்வேறு தொழில்களைச் செய்கின்றனர்.

 

  1. நாம் பிறந்த நாட்டை என்றும் நேசிப்போம்.

 

வணக்கம் !

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

கீழ்ப் பிரிவு (தரம் 1,2)

 

பேச்சு

 

சுத்தம் சுகம் தரும்.

 

சுத்தம் சுகம் தரும் என்பது பெரியோர் வாக்கு. நாம் சுத்தமாக இருக்க சில வழிமுறைகள் உண்டு. நாம் எப்பொழுதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். சாப்பிட முன் கைகளைக் கழுவுதல் வேண்டும். சமைத்த உணவை மூடி வைத்திருத்தல் வேண்டும் அழுக்கான உடைகளை அணியக்கூடாது. குப்பைகளை உரிய இடத்தில் போட வேண்டும். எல்லா இடங்களிலும் துப்புதல் மூக்குநீர் சிந்துதல் கூடாது. நாம் எல்லா விடயங்களிலும் சுத்தத்தை பேணினால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.

 

வணக்கம்!

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

மத்திய பிரிவு (தரம் 3,4)

 

பேச்சு

 

தமிழ் மொழி

 

உலகில் உள்ள தொன்மை மிக்க மொழிகளில் தமிழும் ஒன்றாகும். திராவிட மொழிகள் தமிழை மூலமொழியாகக் கொண்டவை. தமிழ் மிகச் சிறந்த அறநூல்களையும் இலக்கியங்களையும் கொண்ட மொழியாகும். தமிழ் எங்கள் தாய்மொழி தமிழில் உள்ள முதலெழுத்துக்கள் முப்பது ஆகும் சார்பெழுத்து இருநூற்றிப் பதினாறு ஆகும். ஆய்த எழுத்து ஒன்று ஆகும். தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூலாகும். தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என் முப்பிரிவுகளை உடையது. அதனால் அது முத்தமிழ் எனப் போற்றப்படுகிறது. தமிழ் மொழிக்குரிய சிறப்புக்களில் இதுவும் ஒன்றாகும். புலவர்கள் தமிழைத் தீந்தமிழ், செந்தமிழ் என்று போற்றுவர் மிகப் பழங்காலத்தில் இருந்தே ஈழமும் தமிழகமும் தமிழரின் தாயகங்கள் ஆகும். தமிழ் மொழி இன்று இணை வலையிலும் பேரளவில் முதலிடம் பிடித்துள்ளது.

 

வணக்கம்!

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

மேற்பிரிவு (தரம் 5, 6)

 

பேச்சு

 

பருவ காலங்கள்

 

வசந்த காலத்தில் பனி உருகும். குளிர் மெல்ல மெல்ல விலகும். மழை பெய்யும். மரங்களில் இலைகள் தளிர்க்கும் சில மரங்கள் பூக்கும். கோடை காலத்தில் மரம், செடி கொடி முதலியன பச்சை நிறமாகக் காட்சி அளிக்கும் பூக்கள் மலரும் வண்டுகள் பூக்களில் தேன் பருகும். வெப்பம் கூடுதலாக இருக்கும். நாம் பருத்தி ஆடைகளை அணிவோம் வீடுகளில் மின்விசிறி, குளிரேற்றி முதலியவற்றைப் பயன்படுத்துவோம்.

 

இலை உதிர் காலத்தில் இலைகள் பல நிறங்களில் காணப்படும். மரங்களில் இருந்து இலைகள் உதிரும் குளிர் மெல்ல மெல்லக் கூடும். பனிக் காலத்தில் குளிர் கடுமையாக இருக்கும். எங்கும் பனிபடர்ந்து வெள்ளை நிறமாகக் காட்சியளிக்கும் வெப்பம் தரும் ஆடைகளை அணிவோம்.

 

வணக்கம்!

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

அதிமேற்பிரிவு (தரம் 7, 8, 9)

 

பேச்சு

 

நமது நாட்டுப் பெரியார்

 

நமது நாட்டுப் பெரியார் என விமர்சிக்கப்படுபவர் திரு.சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள். இலங்கையில் உள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்து இரண்டாம் ஆண்டு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பிறந்தார். இவரது தந்தை பெயர் வைரவநாதர் தாயார் பெயர் பெருந்தேவி அம்மையார் இவருடைய காலத்தில் இலங்கையில் ஆங்கிலக் கல்வியும் மேலை நாட்டுப் பண்பாடுமே செல்வாக்குப் பெற்றிருந்தன. கற்றவர்களில் மிகச் சிலரே தமிழைப் போற்றி வந்தனர்.

 

திரு. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆங்கிலக் கல்வியோடு தமிழையும் கற்றார். யாழப்பாணத்தில் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு தமிழ்நாடு சென்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டமும் பெற்றார் தாமோதரம் பிள்ளை அவர்கள் ஆசிரியப்பணி தொடங்கி அறமன்ற நடுவர் பதவிவரை பல பொறுப்புகளை வகித்தார். இவர் தமிழகத்தில் நாளிதழ் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

 

திரு. தாமோதரம்பிள்ளை அவர்கள் தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பெரும் பொறுப்புள்ள பணிகளுக்கிடையிலும் தமிழுக்காகப் பாடுபட்டார். கவனிப்பாரற்றுக் கிடந்த பழைய ஏட்டுச்சுவடிகளை ஒழுங்குபடுத்தி அச்சேற்றினார் திரு. தாமோதரம் பிள்ளை அவர்கள் இல்லாவிடின் பழந்தமிழ் இலக்கியங்கள் பல எமக்கு கிடைக்காமல் அழிந்திருக்கும். இவர் தமிழ்க் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பாடசாலையை ஏழாலை என்ற இடத்தில் நிறுவினார். இவை எல்லாவற்றையும் தமது பணத்திலே செய்தார். ஒரு சில நல்லவர்கள் அவரது அரும்பணியைக் கண்டு சிறிது நேரத்தில் அவருக்கு நிதியுதவி செய்தனர். திரு. சி.வை தாமோதரம்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு அளம்பரியது. திரு. சி.வை. தாமோதரம் பிள்ளை அவரது பெயரும் புகழும் தமிழ் உள்ளவரை நின்று நிலைக்கும்.

 

‘வாழ்க அவரது புகழ்! வளர்க தமிழ்மொழி!’

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

உயர் பிரிவு (தரம் 10, 11, 12)

 

பேச்சு

 

திருகோணமலை

 

இலங்கையின் கிழக்குத் திசையில் இயங்கும் பட்டினம் திருகோணமலை ஆகும். இப்பட்டினம் திரிகோணமலை, திருமலை, கோணமாமலை, எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகிறது. உலகின் சிறந்த இயற்கைத் துறைமுகங்களில் திருகோணமலைத் துறையும் ஒன்று. இத்துறைமுகம் ஆழமான குடாக்கடற் பகுதியாகும். இது மலைத்தொடரால் உள்வளைக்கப்பட்டு அமைந்தள்ளது. உலகின் கப்பல் போக்குவரத்தில் முன்னணித் துறைமுகங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இது தமிழர்களுடைய தாய் நிலம் என்று போற்றப்படுகிறது.

 

இத்துறை முகப் பகுதியில் ‘கரமலையூற்று’ என்னும் பாறையில் நன்னீர் ஊற்று ஒன்று உள்ளது சுற்றுலாச் செல்லும் பயணிகளைக் கவரும் கன்னியாக வெந்நீர் ஊற்றுகள் திருமலையில் உள்ளன. இந்த ஏழு வெந்நீர்க் கிணறுகளையும் இராவணன் தன் தாயின் ஈமக் கிரியைகளுக்காகத் தோண்டினான் என்று பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இராவணன் என்பவன் வீரம் பொருந்திய பண்டைத் தமிழ் வேந்தன் ஆவான்.

 

மகாவலி ஆறு திருமலையில் வந்து கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீர்வளம் திருகோணமலை சிறந்த நெல்விளையும் வயல்களைக் கொண்டுள்ளது. திருஞானசம்பந்தர் என்னும் சமயகுரவால் பாடப் பெற்ற கோணேச்சரம் என்னும் சிவன்கோவிலும் இங்கு உள்ளது என்றால் மிகையாகாது. திருகோணமலை நானிலங்கள் கொண்ட பட்டினமாகும். இதற்கு வடக்கே புல்மோட்டை என்று அழைக்கப்படும் ஊர் உண்டு. அங்கே கடலலைகள் இல்மனைட் எனப்படும் கனிப்பொருளைக் கொணர்ந்து கரையில் ஒதுக்குகின்றன. பண்டைப் புகழ் கொண்ட திருகோணமலை எமது இலங்கைத் தாயகத்தின் உள்ள பட்டினம் என்பது பெருமைக்குரியது.

 

வணக்கம்!

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

பாலர் பிரிவு (JK, SK)

 

வாசிப்பு

 

அறம் செய விரும்பு

 

ஆறுவது சினம்

 

இயல்வது கரவேல்

 

ஈவது விலக்கேல்

 

உடையது விளம்பேல்

 

ஊக்கமது கைவிடேல்

 

எண், எழுத்து இகழேல்

 

ஏற்பது இகழ்ச்சி

 

ஐயம் இட்டு உண்

 

ஒப்புரவு ஒழுகு

 

 

வணக்கம்!

 

 

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

கீழ்ப்பிரிவு (தரம் 1, 2)

 

வாசிப்பு

 

 

ஆடிப்பிறப்பு

 

தமிழர்களுடைய கொண்டாட்டங்களில் ஆடிப்பிறப்பும் ஒன்றாகும். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உண்டு. முக்கனிகளும் முழுப்பயன் தருகிற காலம் ஆடித்திங்கள் ஆகும். அனைத்துப் பயிர்களும் விளைந்து ஆனி மாதத்தில் வீடு வந்து சேரும். அதனால் ஆடிப்பிறப்பை தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவர்.

 

ஆடிப்பிறப்புக்கு முதல் நாள் வீடெல்லாம் சுத்தம் செய்வர். ஆடிப்பிறப்பன்று அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து வீட்டைக் கூட்டி மஞ்சள் நீர் தெளித்து தூய்மைப் படுத்துவர். நாமும் வைகறையில் எழுந்து நீராடித் தூய ஆடை அணிவோம். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் வடை, கடலை, அவல் கொழுக்கட்டை போன்ற பலவகைப் பண்டங்களை செய்வர். அவற்றுடன் மா, பலா, வாழை போன்றவற்றின் முக்கனிகளும் வைத்திருப்பர். நாம் பண்டங்களை அயலவர், உறவினருடன் பகிர்ந்து உண்டு மகிழ்வோம் ஆடிக்கூழ் காய்ச்சி கூடியிருந்து குடிப்போம். இது ஆடிப்பிறப்பின் சிறப்பான நிகழ்ச்சியாகும்.

 

வணக்கம்!

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

மத்திய பிரிவு (தரம் 3, 4)

 

வாசிப்பு

 

சைவ சமய குரவர்

 

சைவ சமய குரவர் நால்வர் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்போர் ஆவார். இவர்கள் சிவபெருமானைப் போற்றி பல பாடல்களைப் பாடியுள்ளனர். பல அற்புதங்களைச் செய்துள்ளனர். இவர்களுள் முதல் மூவர் பாடியவை தேவாரங்கள் ஆகும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரைத் தேவார முதலிகள் என அழைப்பர் மாணிக்கவாசகர் பாடியவை திருவாசகம், திருக்கோவையார் என்பனவாகும்.

 

சம்பந்தர் பாடிய தேவாரங்கள் முதலாம், இரண்டாம் மூன்றாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரங்கள் நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஏழாம் திருமுறையாகும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் என்பன எட்டாம் திருமுறையாகும் திருமுறைகள் பன்னிரண்டாகும்.

 

 

வணக்கம்!

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

மேற்பிரிவு (தரம் 5, 6)

 

வாசிப்பு

 

ஒளவைப் பாட்டி

 

தமிழே உயிர் தமிழே மூச்சு தமிழே இன்பம், தமிழே வாழ்வு என வாழ்ந்தவர் எமது ஒளவைப்பாட்டி. இவர் ஒரு பெரும்புலவரென மக்களின் பாராட்டும் பெற்றவர். எந்த விடயத்தையும் சரியாக துணிவுடன் கூறும் புலமையுடையவர். யாருக்கும் எக்காலத்திலும் பயப்படவேமாட்டார். எல்லோருக்கும் நீதியை நன்கு எடுத்துரைத்தவர்.

 

மன்னனை ‘வரப்புயர’ என வாழ்த்தியவர் ‘என்ன சொன்னார் ஒளவை’ என்று அறிஞர்கள் அங்கும் இங்கும் பார்த்தனர். அரசனுக்கும் ஒளவையார் சொன்ன விடயம் புரியவில்லை. மன்னனே ‘வரப்புயர நீர் உயரும் அதனால் உழவன் பயன் அடைவான். அது உன்னை வாழ வைக்கும்’ என்று கூறினார் ஒளவையார்.

 

ஒளவைப் பிராட்டியார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் மூதுரை போன்ற மக்களுக்குப் பயன்படும் அறிவு நூல்களைத் தந்துள்ளார். அவற்றை நாமும் கற்று வாழ்க்கையில் உயர்வு நிலையை அடைவோமாக.

 

நன்றி! வணக்கம்!

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

அதிமேற் பிரிவு (தரம் 7, 8, 9)

 

வாசிப்பு

 

மகாகவி பாரதியார்

 

 

மகாகவி பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சின்னச்சாமி ஐயர். தாயார் பெயர் இலக்குமி அம்மாள். பெற்றோர் இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயரிட்டனர். இவரது பாட்டுத் திறமையை அறிந்த மன்னர் இவருக்கு மாரதி என்ற பட்டம் சூட்டிப் பாராட்டினார். இவர் தனது தேச மக்களிடம் தேசப்பற்று இனப் பற்று, மொழிப்பற்று ஆகிய பண்புகளை ஊட்டி வளர்த்தார்.

 

தமிழர் மத்தியில் சாதி, சமய வேறுபாடுகள் காணப்பட்டன. பெண் அடிமை நிலவியது. இவற்றைக் கண்டு கவலை கொண்ட பாரதியார் தனது பாக்கள் வழியாக இவற்றை மாற்றவிரும்பினர். பாரதியார் தமிழ், ஆங்கிலம், வங்காளம், இந்தி வடமொழி முதலான மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். எனினும் தமிழே உலக மொழிகளில் சிறந்தது என்பது அவரது கருத்தாகும். அதனை பின்வரும் பாடல்வரி அழகாக எடுத்தரைக்கிறது.

 

‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

;இனிதாவது எங்கும் காணோம்’

 

பாரதியார் தமிழ் மொழி, தமிழரோடு நின்றுவிடக் கூடாது உலகம் முழுவதும் பரவவேண்டும் என மனதார விரும்பினார். இவர் இளஞ்சிறுவர்களை மனதிற் கொண்டு பாப்பா பாடல்களையும்  புனைந்தார். பாரதியார் 1921ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

பாட்டுக்கு ஒருவரின் வழி நடப்போம்!

நாட்டுக்கு நல்லவராய் நாம் இருப்போம்!

 

வணக்கம்!

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

உயர் பிரிபு (தரம் 10, 11, 12)

 

வாசிப்பு

 

விபுலானந்த அடிகள்

 

 

ஈழம் தந்த அரும் பெரும் அறிஞராக விளங்கியவர் சுவாமி விபுலானந்த அடிகள் என்று சொன்னால் மிகையாகாது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழுலகம் கண்ட பேரறிஞர் என்ற பெருமை கொண்டவராக சுவாமி விபுலானந்தர் விளங்கினார். சுவாமி விபுலானந்தர் தம் தாய்மொழிக்கும் தமிழ்ச் சிறாரின் வளர்ச்சிக்கும் பயன்மிக்க பணிகள் பலவற்றைப் புரிந்தார். இவர் ஆசிரியர், கல்லூரி முதல்வர், பேராசிரியர், நாளிதழாசிரியர் நூலாசிரியர் முதலான பல பொறுப்பான பதவிகளை அவர் வகித்தார்.

 

சுவாமி விபுலானந்தர் இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு நகரில் காரைதீவு என்ற கிராமத்தில் ஆயிரத்து எண்ணூறு;றுத் தொண்ணூற்றிரண்டாம் ஆண்டு பங்குனித்திங்கள் இருபத்தொன்பதாம் நாள் அவதரித்தார் இவருக்கும் பெற்றோர் இட்ட பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இளமையிலே தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளை ஐயந்திரிபறக் கற்றார். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தமது பணியினை ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இலண்டன் பல்கலைக்கழக அறியற் பட்டதாரியாகத் திகழ்ந்தார்.

 

சுவாமி விபுலானந்தர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல்லூரியன் அதிபராக விளங்கி கல்லூரியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணி புரிந்தார். இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்துநான்கில் உள்ளம் துறவை நாடியதால் முழுத் துறவியானார். அன்று முதல் உலகில் உள்ள மக்கள் சுவாமி விபுலானந்தர் என பக்திப் பரவசமாக அழைத்தனர்.

 

வணக்கம்!

 

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

பாலர் பிரிவு (JK, SK)

 

எழுத்து

 

 

  • எழுதுவதற்கு பென்சில் தாள் றேசர் என்பன வழங்கப்படும்.

 

  • பங்கு பற்றும் மாணவர்கள் பதினான்கு சொற்களையும் எழுத ஆயத்தமாக வரல்வேண்டும்.

 

  • கீழே குறிப்பிட்டுள்ள சொற்களில் நடுவர்கள் சொல்லும் பத்துச் சொற்களை அழகுற எழுதுக.

 

 

  1. பல்                  8. குருடன்

 

  1. மரம்               9. சோளம்

 

  1. வனம்             10. பஞ்சம்

 

  1. கூட்டம்            11. வெளவால்

 

  1. பரமன்             12. பணம்

 

  1. ஓணான்           13. சட்டி

 

  1. எருமை             14.வியாபாரி

 

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

கீழ்ப்பிரிவு தரம் (1, 2)

 

எழுத்து

 

  • கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் மத்தியஸ்தர்கள் கூறும் பத்துச் சொற்களை அழகுற வேண்டும்

 

  • பங்கு பற்றும் மாணவர்கள் இருபது சொற்களையும் எழுத ஆயத்தமாக வரல் வேண்டும்.

 

  • எழுதுவதற்கு பென்சில், தாள், றேசர் மண்டபத்தில் வழங்கப்படும்

 

  1. சோளம்                 11. வெளவால்

 

  1. எருமை                  12. மிருதங்கம்

 

  1. அதிபர்                   13. அன்னாசி

 

  1. பாடசாலை           14. நூலகம்

 

  1. குருடன்                  15. மண்வெட்டி

 

  1. கூட்டம்                   16. ஒட்டகம்

 

  1. பஞ்சம்                    17. வளையல்

 

  1. பரமன்                    18. சந்திரன்

 

  1. வியாபாரி              19. தும்பிக்கை

 

  1. தேங்காய்                20. தலையணை

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

மத்திய பிரிவு (தரம் 3, 4)

 

எழுத்து

 

  • எழுதுவதற்கு பென்சில், தாள், றேசர் என்பன மண்டபத்தில் வழங்கப்படும்

 

  • பங்கு பற்றும் மாணவர்கள் தரப்பட்ட விடயத்தை முழுமையாக எழுத ஆயத்தமாக வரல் வேண்டும்.

 

  • நடுவர்கள் கூறும் வசனங்களை மட்டும் பந்தி பந்தியாக எழுதல் வேண்டும்.

 

  • பரீட்சார்த்திகளின் எழுத்துகள் தெளிவாக இருத்தல் வேண்டும்.

 

 

எனது ஊர்

 

 

நாம் வசிக்கும் கிராமம் காரைநகர் ஆகும். அக்கிராமம் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளது. அங்கு ஈழத்துச் சிதம்பரம் என்று பெருமையாக அழைக்கப்படும் காரைநகர் சிவன்கோயில் அமைந்துள்ளது. எமது கிராமத்தில் விவசாயிகள், கைத்தொழிலாளர், மீனவர், ஆசிரியர், வியாபாரிகள், அரசாங்க ஊழியர் எனப்பல்வேறு தொழில்களை மேற்கொள்பவர்கள் உள்ளனர். காரைநகரில் இரண்டு கல்லூரிகளில் தரம் ஆறு முதல் தரம் பன்னிரண்டு வரை வகுப்புகள் உள்ளன. அதைவிட இரண்டு பாடசாலைகளில் தரம் 1 முதல் க.பொ.த (சா.த) வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. பத்துப் பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.

 

எனது ஊர் சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

 

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

மேற்பிரிவு (தரம் 5, 6)

 

எழுத்து

 

  • எழுதுவதற்கு பென்சில், தாள், றேசர் என்பன மண்டபத்தில் மத்தியஸ்தர்களால் வழங்கப்படும்

 

  • பங்கு பற்றும் மாணவர்கள் தரப்பட்ட விடயத்தை முழுமையாக எழுத ஆயத்தமாக வரல் வேண்டும்.

 

  • நடுவர்கள் கூறும் வசனங்களை மட்டும் பந்தி பந்தியாக எழுதல் வேண்டும்.

 

  • பரீட்சார்த்திகளின் எழுத்துகள் தெளிவாக இருத்தல் அவசியமானது.

 

 

அன்பு

 

அன்பு என்பதை நேசம், பாசம், கருணை போன்ற பல சொற்களால் குறிப்பிடலாம். நாம் தினமும் நாம் வணங்கும் கடவுள் மீது அன்பு காட்ட வேண்டும் என்னைப் பெற்று வளர்த்த எமது தாய், தந்தையரிடம் அன்புடையவராக இருத்தல் வேண்டும் எமது உறவினர் சுற்றத்தவர்களுடன் அன்பாக நடத்தல் வேண்டும் எமது முதியவர்களுடன் அன்பாகப் பழகி அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்தல் வேண்டும்.

 

நாம் மற்றவர்கள் மீது அன்பு காட்டினால் அவர்களும் எம்மீது அன்பு காட்டுவார்கள். ‘அன்பே சிவம்’ என்பது திருமந்திரத்தைப் பாடிய திருமூலர் வாக்காகும்.

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

அதிமேற்பிரிவு (தரம் 7, 8, 9)

 

எழுத்து

 

  • எழுதுவதற்கு பென்சில், றேசர், தாள் என்பன பரீட்சை மண்டபத்தில் மத்தியஸ்தர்களால் வழங்கப்படும்

 

  • பங்கு பற்றும் மாணவர்கள் தரப்பட்ட விடயத்தை முழுமையாக எழுத ஆயத்தமாக வரல் வேண்டும்.

 

  • நடுவர்கள் கூறும் வசனங்களை மட்டும் பந்தி பந்தியாக தெளிவாக எழுதல் வேண்டும்.

 

  • பரீட்சார்த்திகளின் எழுத்துகள் தெளிவாகவும் உறுப்பாகவும் இருத்தல் அவசியமானது.

 

திரேசா அம்மையார்

 

பெண்கள் இனத்திற்கு பெருமை சேர்த்தோர்களில் திரேசா அம்மையார் முதன்மையானவர் எனலாம். ஆயிரத்து தொளாயிரத்துப் பத்தாம் ஆண்டு ஆவணி மாதம் இருபத்தாறாம் திகதி மசிடோனியா நாட்டில் இவர் பிறந்தார். இவர் எழுபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏழை மக்களுக்கு தொண்டாற்றினார். திரேசா அம்மையார் தனது பதினேழாவது வயதில் தொண்டு செய்ய விரும்பி உரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தார். இவர் அயர்லாந்திலும் பின்னர் இந்தியாவிலும் பயிற்சி, பெற்றார் அன்பு, நற்பண்பு, கடமை, கட்டுப்பாடு, தொண்டு முதலியவை பற்றி கற்றுத் தெளிந்தார்.

 

ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்தாறில் அம்மையார் கல்கத்தாவில் உரோமன் கத்தோலிக்க உயர் பாடசாலையில் அதிபராகக் கடமை புரிந்தார் ஏழைமக்களின் துயரைக் கண்டு கலங்கி ஏழைச் சிறுவர்களுக்காக பாடசாலைகளை நிறுவினார். அம்மையார் திருச்சபையை நிறுவி நோய், ஏழ்மை, பட்டினி போன்றவற்றால் வாடும் மக்களுக்கு தொண்டாற்றி வந்தார் இவரின் பணிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 

 

 

சிவமயம்

தமிழ்த்திறன் பண்ணிசைப் போட்டி  2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

உயர் பிரிவு (தரம் 10, 11, 12)

 

எழுத்து

 

  • எழுதுவதற்கு பென்சில், றேசர், தாள் என்பன பரீட்சை மண்டபத்தில் மத்தியஸ்தர்களால் வழங்கப்படும்.

 

  • பங்கு பற்றும் மாணவர்கள் தரப்பட்ட விடயத்தை முழுமையாக எழுத ஆயத்தமாக வரல் வேண்டும்.

 

  • நடுவர்கள் கூறும் வசனங்களை மட்டும் பந்தி பந்தியாக தெளிவாக எழுதல் வேண்டும்.

 

  • பரீட்சார்த்திகளின் எழுத்துகள் தெளிவாகவும் உறுப்பாகவும் இருத்தல் அவசியமானது.

 

 

அனைத்துலக குழந்தைகள் தினம்

 

 

ஒவ்வொரு வருடமும் ஆனி முதலாம் திகதி சிறுவர் சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. சிறுவர் தினத்தைக் கொண்டாடும் திகதி குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தியாவில் நவம்பர் பதினான்காம் திகதி இந்தியாவில் குழந்தை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐவஹர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தமையால் குழந்தைக்ள அவரை நேருமாமா என்று அழைத்தனர். நேரு பிறந்த நாளான கார்த்திகை பதினான்காம் திகதியை இந்திய குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறது.

 

ஐக்கிய நாடுகள், யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் இருபதாம் திகதி கொண்டாடப்படுகின்றன உலகெங்கணும் உள்ள குழந்தைகளிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையினரால் பிரகடணப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பலபொது நலத்திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

 

 

 

 

ஆங்கில மொழியிலான பேச்சு, எழுத்துப் போட்டிகள் 2018

கனடா காரை கலாச்சார மன்றம்

 

 

Speech Topics

 

      1.JKG – Myself (Speak five sentences about yourself)

      2. SKG – Myself (Speak seven sentences about yourself)

      3. Grade 1 & 2 – My Friend (Three minutes)

      4. Grade -3  & 4 – My Favorite Food ( Five minutes)

       5. Grade 5 & 6 – The importance of gratitude (Seven minutes)

      6. Grade 7, 8 & 9 – Tamil New Year Celebrations (Nine minutes)

      7. Grade 10 – Parental Love (Twelve minutes)

      8. Grade 11 & 12 – Parental Love (Fifteen minutes)

 

 

 

Writing Topics

 

  1. JKG & SKG – My mother – 5 Sentences
  2. 1 & Gr.2 – My Teacher – 5 Sentences
  3. 3 & Gr.4 –A Birthday Party ( Not Less than 10 Sentences)
  4. 5 & Gr. 6 – A Picnic I enjoyed ( Not Less than 100 Words)
  5. 7 & Gr.8 & Gr.9 – If I were the Prime Minister of Canada ( Not Less than 150 words)
  6. 10, Gr.11 & Gr.12 – Advantages and Disadvantages of Modern Technology ( Not Less than 200 Words)

 

 

மேலதிக தொடர்புகளுக்கு:

647 818 7443

647 853 7027