ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்றாம் நாள் பகல்  திருவிழா கானமழையில் நனைந்தது.

 

 

ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்றாம் நாள் பகல்  திருவிழா கானமழையில் நனைந்தது.

இயற்கை எழில் நிறைந்துள்ள செல்வம் கொழிக்கும் திருநாடாம் சுவிற்சர்லாந்து Zürich மாநகரில் Dürnten எனும் புனித பதியில் வீற்றிருந்து வேண்டியவர்களுக்கு விரும்பும் வரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் மாங்கல்யதாரணி லோகரட்ஷகி தோஷநிவாரணி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய விளம்பி வருஷ மகோற்ஸவ விஞ்ஞாபனத்தின் மூன்றாம் நாள் பகல் திருவிழா 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வாழ் காரைநகர் அம்மன் அடியார்களால் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன், கரன், வட்டுக்கோட்டை தர்ஷ்சன், சுவிற்சர்லாந்து பாலச்சந்திரன் குழுவினரின் தவில், நாதஸ்வரக் கச்சேரி ஒரு மணிநேரம் இடம் பெற்றது. ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் பக்தர்கள் கானமழையில் நனையும் வண்ணம் மிக அற்புதமாக இசையமுது வழங்கியிருந்தார்கள்.

எமது கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள் அவர்கள் தவில், நாதஸ்வரக் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளித்திருந்தார் என்பதும், இவ் முன்றாம் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன், கரன், குழுவினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்றாம்நாள் பகல் திருவிழாவிற்கு தங்களால் இயன்ற காணிக்கை செலுத்திய சுவிஸ் வாழ் காரைநகர் அம்மன் அடியார்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிழற்படங்களை கிழேகாணலாம்.

 

அன்பே அருளே சந்தோஷி

இங்ஙனம்
சுவிஸ் வாழ் காரை
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பக்தர்கள்.
16.07.2018