மரண அறிவித்தல், கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்) (தங்கோடை, காரைநகர்) (கனடா)

                    மரண அறிவித்தல்

                            கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன்
           (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

பிறப்பு: 21.12.1936                                                                                       இறப்பு: 18.06.2018

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடா Burlingtonஐ வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்) அவர்கள் 18.06.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான Advocate தில்லைநாதன் தங்கமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் கந்தையா (மலேசியன் பென்சனியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயநாயகியின் அன்புக் கணவரும், அருந்தா ( Master in Chemical Engineering), Dr.சூரி (Electrical Engineering & Medical Degree)ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற செந்தில்நாதன் மற்றும் இராஜசேகரம் ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம்,ஜெயசிங்கம், திரிபுரசுந்தரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், கந்தையா (கனடா) அவர்களின் சகலனும், Dr.ஞானசேகரம்,ராஜேஸ்வரி,சகுந்தலா ஆகியோரின் பெரியப்பாவும், காலஞ்சென்ற சுந்தரராஜாவின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு:

24.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணி தொடக்கம் 9மணி வரை

முகவரி: Glen Oaks Funeral Home & Cemetery, 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8

கிரியை,தகனம்:

25.06.2018 திங்கட்கிழமை மதியம் 1மணி தொடக்கம் 3மணி வரை

முகவரி: Glen Oaks Funeral Home & Cemetery, 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜெயநாயகி (மனைவி) + 1 905 336 8248