டாக்டர்.சபாபதி சபாரட்ணம் ஞாபகார்த்தமாக பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் நடைபெற்றது.

டாக்டர்.சபாபதி சபாரட்ணம் ஞாபகார்த்தமாக பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, பொதுப் பரிசோதனை, கொலஸ்ரோல், ஈ.சீ.ஜி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படதுடன் பல்,கண், மற்றும் பொது,குழந்தை வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டு சிகிச்சை வழங்கியதுடன் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்த மருத்துவ முகாமில் மருத்துவச் சிகிச்சைகள் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக வீடியோப் படக்காட்சி காண்பிக்கப்பட்டதுடன் சிறப்பு வைத்திய நிபுணர்களின் ஆலோசணைகளும் மருத்துவக் கருத்தரங்கும் இடம்பெற்றது.

பொது வைத்திய நிபணர் னுச எஸ்.சிறிகரன் மருத்துவ ஆலோசனை வழங்கும்போது கூறியதாவது வீடுகளில் கரண்டிகளுக்குப் பதிலாக அகப்பைகளைப் பாவியுங்கள். ஏன் கூறுகின்றேன் என்றால் இன்று பெரும்பாலான வீடுகளில் சோற்றினை அகப்பைகளினாலும் கறிகளை கரண்டிகளினாலுமே எடுக்கிறார்கள். அதனால் அதிகளவு சோறும் குறைந்தளவு கறிகளுமே மதிய உணவாகின்றது. அது தவறு குறைந்தளவு சோற்றுடன் அதிகளவு கறிகளைச் சேருங்கள்

முட்டை அதிகளவு உண்ணக்கூடாது என்கின்ற மூடநம்பிக்கை காணப்படுகின்றது. அதனால் முட்டையை விற்று உருளைக்கிழங்கு வாங்கிச் சமைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கிறார்கள் அது தவறு ஒரு கோழிக்குஞ்சு வளர்வதற்குத் தேவையான அனைத்துப் சத்துக்களும் முட்டையில் அடங்கி உள்ளது. எனவே வளரும் பிள்ளைகளுக்குத் தினமும் முட்டை கொடுங்கள் அதனை வீடுகளில் இலகுவாகப் பெறலாம்.

காரைநகர் மக்கள் முன்மாதிரியானவர்கள் சிறந்த வழிகாட்டிகள் எனவே ஏனையோருக்கு வழிகாட்டியாகத் திகளுங்கள் மரண வீடு, கலியாணவீடு என்பவற்றில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உற்சாக பாணமான சோடாவை வழங்குவதனைத் தவிருங்கள் அதற்குப் பதிலீடாக மோர், பழப்பாணம் என்பவற்றை வழங்குங்கள். புகைப்பிடிப்பதை முற்றாகத் தவிர்ப்பதுடன் வெற்றிலை போடுவதை இயன்றளவு குறையுங்கள்.

ஆலய வழிபாடுகளை மேற்கொண்டு நல்ல உணவுப் பழக்கவழக்கத்தைக் கடைப்பிடித்து நீண்ட தேகாரோக்கியத்துடன் வாழமுடியும் என்றார்

டாக்டர் சபாபதி சபாரட்ணம் ஞாபகார்த்தமாக இந்த இலவச மருத்துவ முகாம் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.