சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் அறிவித்தல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் அறிவித்தல்.

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” என்ற கூற்றிற்க்கிணங்க எமது சகோதர அமைப்பான பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அன்பான அழைப்பை ஏற்று 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பத்தாவது ஆண்டுவிழாவான ‘‘காரை ஸ்வரங்கள்” நிகழ்விற்கு  23குடும்பங்களைச் சேர்ந்த 50 சுவிஸ் வாழ் காரை உறுப்பினர்கள் பேருந்தில் ஓரு கலைப்பயணத்தை ஏற்படுத்தி விழாவினை சிறப்பித்திருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே!

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரின் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான ‘‘காரை ஸ்வரங்கள – 2018″ இன் அன்பான அழைப்பை ஏற்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் பிரான்ஸ் நோக்கிய கலைப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளனர். அந்த வகையில் ஊரின் பெயரால்  விழாக்களை நாம் கொண்டாடும் போது பலர் ஒன்று சேருகிறோம். இதனால் ஒற்றுமை பெருகுகிறது. விழாக்களுக்கான ஆயத்தம் செய்யும்போது ஒருவரோடொருவர் இணைந்து பிறருடைய உணர்வுகளை மதித்துக் கஷ்ட நஷ்டங்களை விருப்புடன் பகிர்ந்து கொள்கிறோம். இதனால் உற்சாகமும் தன்னம்பிக்கையும் வளர்கிறது. அதோடு விழாக்கள் புத்துணர்ச்சியையும் குதூகலத்தையும் மலர்ச்சியையும் எற்படுத்துகின்றன.

பிரான்ஸ் நலன்புரிச்சங்கம் நடாத்தும்  பன்னிரண்டாவது ஆண்டு விழாவான ‘‘காரை ஸ்வரங்கள்   – 2018″ ஐரோப்பிய நாடுகளில் வதியும் இளம் தலைமுறையினரை ஓன்றிணைத்து காரை மண்ணையும், எம் கலைத்திறன்களையும் தாய்த்தமிழையும் அறியவும்  உறவு கொள்ளவும் உதவும் என்பதில் ஐயமில்லை. விழாவில் சுவிஸ் வாழ் இளம் தலைமுறையினரின் அரைமணிநேர கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

“காரை ஸ்வரங்கள்  -2018” இல் கலைநிகழ்வு செய்யவிரும்பும் சுவிஸ் வாழ் இளம் தலைமுறையினரையும், நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சுவிஸ் வாழ் காரை அன்பர்களை 02-05-2018 புதன்கிழமைக்கு முன்பதாக கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களுடைய கலைநிகழ்வையும். பயணத்தை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தொலைபேசி இலக்கம்:-

1)   தம்பையா தயாபரன்:       079 370 50 58 , 061 301 60 32

2)   முருகேசு பாலசுந்தரம்:      079 309 07 58 , 044 865 53 18

3)   ஸ்ரீஸ்கந்தராஜா பிறேமராஜா   079  785 55 68

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

25 – 04 – 2018