ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அதன் சுகாதார சேவையில் ……..அந்த பாதையில் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்……..

 

ஒரு குடும்பத்தில் தாரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒரு சமூகத்தில் சுகாதாரம் ………..

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் எமது  ஊர்
சுகாதார சேவையில் மிகப் பெரும் கவனம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக 2009 இல் இருந்து மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது என்றால் அது மிகை ஆகாது. 
 
2009இல்  பெரிய அளவிலான சுகாதார சுற்றுச் சூழல் சார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
2010 செல்வி வர்ஷினி தியாகலின்கம் அவர்களின் தேம்ஸ்(River Themes in Lon London ) நதியிலானா தொண்டு நீச்சல் மூலம் ஈட்டப்பட்ட தொகை மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ழோர்கழுக்கான கண்படர்(Catraract operation )  அகற்றல் சிகிச்சை அறிமுகப் படுத்தப்பட்டு இன்றுவரை வருடத்தில் இருமுறை நடாத்திவருதல் ஊர் சார் மக்களால் வரவேற்கப் படுகின்றது.
 
2011இல் அப்போதைய  DMO, Dr. ஷபாராஷ் மஜுமூடீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது மன்றத்தால் வைத்தியசாலை சமையல் அறை முற்றுமுழுதாக புனருத்தாரணம் செய்து கொடுக்கப்பட்டது .
 
2012இல் கடந்தகால நிர்வாகசபை தலைவரும் தற்போதைய போஷகர்களில் ஒருவருமான திரு. வி. நாகேந்திரம் அவர்களால் அவசர சிகிச்சை அறை ஒன்று அவரது பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக கட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
 
2013இல் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் பாரிய அளவிலான வேலைத்  திட்டங்கள் இரண்டை முன்னெடுத்தது. அவையாவன ஆண், பெண் நோயாளிகள் தங்கும் அறைகள்(Male&Female Wards) முற்றுமுழுதாக புனருத்தாரணம் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது.இத்திட்டம் இவ் வருட ஆராம்பத்தில் நிறைவாகியுள்ளது எமது நிர்வாகத்தின் மனநிறைவு. இத் திட்டத்தில் செய்து கொடுக்கப்பட்ட வேலைகளாவன, இரு அறைகளின் கீழ் நிலங்கள் செராமிக் கற்கள் (Ceramic Tiles )   பதித்து, உள் வெளியிலான பூச்சு (Painting In & Out of the buildings) , கதவு நிலைகள்(Doors&frames),  யன்னல்கள்(Windows) உட்பட, படுக்கை உபகரணங்கள்  ( beds)
மேலும் பல உபகரண வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான முழுத் தொகை 1 மில்லியன் ரூபாய்(பத்து இலட்சங்கள்) ஆகும். இவ் வேலைகள் அனைத்தும் காரை அபிவிருத்தி சபை நிர்வாக சபையினரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்பத்தை பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் எமது அங்கத்தவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், தனியார் உதவியாளர்களுக்கும், காரை அபிவிருத்தி சபை நிர்வாகதிற்கும் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

2014பெப்ரவரி ''காரை கதம்பம் 2014'' விழாவின்போது 1 மில்லியன் ரூபாய்(பத்து லட்சம்) எமது நிர்வாக சபையினரால்  நிரந்தர வைப்புக் கணக்கில் இட்டு, இதில் வரும் வங்கி வட்டி வருமானம்  மூலம் எமது மன்றம் தற்பொழுது வருடாவருடம் முன்னெடுத்துவரும் எமது ஊர்  வைத்தியசாலை சம்பந்தமான சுகாதார நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெற ஏதுவாக இருக்கும்  என உறுதி(Been documented )   செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக கண்படர் அகற்றல் சிகிச்சை,(Catract operatios) சுகாதார சிச்சை முகாம், (Health Camp) பொதுவான வைத்தியசாலை புனர்திருத்த வேலைகள்  என்பனவாகும்.

ஒவ்வொரு வருட வட்டி வருமானமும் எமது மன்ற கணக்கில் (காரை வங்கிக் கணக்கில் ) வரவிடப்பட்டு இதன் மேற்குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு காரை அபிவிருத்தி சபையின் மேற்பார்வையி