உறவுக்குக் கரம் கொடுப்போம்

 

                                                               உறவுக்குக் கரம் கொடுப்போம்                                                            

                                                                                                        

 

                             வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சை

 காரைநகர், வலந்தலை, பண்டித்தாழ்வைச் சேர்ந்தவரான வேலாயுதபிள்ளை செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) வன்னிப் போரில் குண்டு அதிர்ச்சியினால் கர்ப்பத்திலேயே பாதிக்கப்பட்டவர். கிளிநொச்சியில் பிறந்த இவர் தொடர்ந்தும் ஒரு வயதாகு முன்னர் பலதடவைகள் பாதிக்கப்பட்டவர். இதனால் கைகால்கள் சரிவர இயங்காமலும், இருகாதுகள் செயலற்ற நிலையிலும் உள்ளார்.

 காது கேளாமையினால் அவர் ஐந்து வயதாகியும் பேசமுடியாத நிலையிலுள்ளார். இவர் ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதைக் காணும் போது இவர் பிறவியிலேயே பேசமுடியாதவரில்லை என்றும், காதுச் சிகிச்சையளிக்கப்படும் பட்ச்சத்தில் பேசக்கூடியவரென்றும் உணரமுடிகிறது (வாய்பேச முடியாதோர் பலர் பிறவியிலேயே செவிப்புலனற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது).

 இவருக்கு இந்தியா, சென்னையில் காதுகேட்பதற்கான சிகிச்சை அளிப்பதற்கு ஏறத்தாழ இந்திய ரூபாய் நான்கு இலட்சம் தேவையாகவுள்ளது. சிறுமியின் பேச்சுக்கு மிக அவசியமான இச்சிகிச்சைக்குக்; உதவி புரியுமாறு கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

 மேலதிக தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

 கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக உங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.

 நன்கொடை வழங்கியோருக்கு மன்றத்தின் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

 தொடர்புகளுக்கு: (416)642-4912

1 2 3 4 5