காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் நான்கு சாமங்களும் விஷேட அபிஸேக ஆராதனைகளும் பூசை வழிபாடுகளும் இடம்பெற உள்ளதுடன் அதிகாலை தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் இருபத்து நான்கு மணிநேரம் ஓதும் அகண்டநாம வழிபாடும் அஷ்டோத்திர நாம அர்ச்சனை ஆகியனவும் அன்றைய நாள் முழுவதும் நடாத்துவதற்கு காரைநகர் மணிவாசகர் சபை எற்பாடு செய்துள்ளது.

மறுநாள் புதன்கிழமை அதிகாலை இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையையடுத்து சுவாமி துர்வாக சாகர சமுத்திரதீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்த நிகழ்வு இடம்பெறும்.தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இரு தினங்களும் யாழ் நகரிலிருந்து ஆலயம் வரை பஸ் சேவையும் இடம்பெற உள்ளது.