காரைக் கதம்பம்-2014′ வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துக்கள்

பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவான 'காரை கதம்பம்-2014' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் சகோதர அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

 

உழவோடும் பண்பாட்டு எழுச்சியோடும் சிறந்திருக்கும் தமிழர் விழாவான பொங்கல் விழாவை பிரித்தானியா வாழ் காரை உறவுகள் ஒன்றிணைந்து 'காரைக் கதம்பம்' என்ற பெயரில் கொண்டாடி வருகின்றமை பாராட்டுதலுக்குரியது.

 

இவ்வாறான விழாக்கள் எமது இளம் சந்ததியினர் எமது பண்பாட்டை அறிந்து கொள்வதற்கும் எமது ஊர் மக்களுடன் உறவாடி மகிழ்வதற்கும், தமது கலைத் திறமைகளை வெளிப்படுத்தி வளர்ப்பதற்கும் உதவுகின்றது.

 

                                                                   அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
                                                                    பெற்றான் பொருள்வைப் புழி

என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க, இவ்வாறான விழாக்களின் மூலம் பொருளாதார ரீதியில் எமது ஊர் வாழ் உறவுகளுக்கு உதவுவதில் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் என்றுமே பின் நிற்பதில்லை என்பதை யாவரும் அறிவர்.

 

அத்தகைய சிறப்புமிக்க இந்தக் கலை, பண்பாட்டு விழாவான 'காரைக் கதம்பம்-2014' பொலிவுபெற்று வெற்றி விழாவாக அமைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானை வேண்டி வாழ்த்துகின்றோம்.

 

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்