தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள்

தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள்

இலங்கை கிழக்கு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன்; கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்கள் 10.01.2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயர் பகிர்கின்றோம்.

சிறந்த கல்விமானாய் திகழ்ந்த நீ உன் ஊரையும் ஊரைச் சார்ந்தவர்களையும் கல்வி, கலை, கலாச்சாரம் எனப் பல துறைகளிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்று துடித்தாய் அதற்காக இரவு பகல் பாராது உழைத்தாய். உனது அறிவுத் திறனாமையால் பல துறைகளிலும் சிறந்தவர்களை இனங்கண்டு மகுடம் சூட்டினாய் உறங்கிக் கிடந்த சிந்தனையாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து உணர்வு கொடுத்து ஊன்று கோலாய் நின்றாய். மண்ணையும் மக்களையும் நேசித்து மதிப்பளித்த உன்னை காலன் விரைவாய் அழைத்த காரணம்தான் என்ன? உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ?

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது கல்விச் செயற்பாட்டிற்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களது துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.

அன்னாரது பிரிவால் துயர்ருற்றிருக்கும் குடும்பத்தவர்,உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணக்கர் ஆகியோருடன் ஆழந்த துயரைப் பகிர்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அவரது ஆத்ம சாந்திக்காப் பிராத்திக்கும்.

 

சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
11.01.2018