கனடா-காரை கலாச்சார மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்

கனடா வாழ் காரைநகர் மக்களால் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆருத்திரா அபிஷேக வழிபாடுகளை போன்று றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் வழமைபோன்று இம்முறையும் மிகவும் சிறப்பாக புதுவருடத்தோடு கூடிய சிறப்பானதொரு அம்சமாக நிகழ்ந்தேறின. இதற்கு பிரதான உதவிபுரிந்த மதிப்புக்குரிய திரு.சிவபாதசுந்தரம் மற்றும் பண அன்பளிப்புகள் வழங்கியவர்கள் , அபிஷேக திரவியங்கள் தந்து உதவிய அடியவர்கள், தொண்டர்களாக தொண்டாற்றிய அன்பு உள்ளங்கள் , பதிவுப்பகுதியை பொறுப்புணர்வோடு செயலாற்றிய நாகேஸ்வரி மற்றும் சிவராமலிங்கம், பக்தர்களுக்கு நேரலை ஒளிபரப்பு செய்து மெய்யுருகவைத்த அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கும், மற்றும் வீடியோ , படப்பிடிப்பில் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், அருள்தரும் இனிமையான சங்கீத கச்சேரி செய்த கவிதா , காவேரி , விஷ்ணுகா , பிரவீன் ஆகியோருக்கும், நாதஸ்வர இசை மழை புரிந்த வித்துவான்களுக்குக்கும் , புத்தாண்டு நன்னாளிலும் ஆருத்திரா வழிபாடுகளை சிறப்புற ஒழுங்கு செய்து ஒத்துழைப்பு நல்கிய ஆலய அறங்காவலர் சபையினருக்கும், ஆருத்திரா அபிஷேகத்தை கண்கொள்ளா காட்சியாக நாடாத்திய சிவாச்சாரிய பெருமக்கள் குழுவினருக்கும், பிரசாதம் வழங்கி பணி புரிந்தோருக்கும், கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை பொழுதில் ஆடவல்லான் அருளை பெறுவதற்கு திரண்ட அனைத்து மெய்யடியார்களுக்கும் நடராசப் பெருமானின் ஆசியையும் , பல்கோடி நன்றிகளையும் இருகரம் கூப்பி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகம்