கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று திங்கட்கிழமை (01.01.2018) வெகுசிறப்பாக நடைபெற்றது.

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று 01.01.2018 திங்கட்கிழமை கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில்(Richmond Hill Hindu Temple) பலநூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகரா குரல் ஒலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 4:15 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 6:30 க்கு சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. செல்வி கவிதா சிவநாதன், செல்வி காவேரி சிவநாதன் அவர்களின் பாட்டுக்கு செல்வன் பிரவீன் பிரபாகரன் மிருதங்கம் இசை வழங்க செல்வி விஷ்ணுகா குலசிங்கம் அவர்கள் வயலின் இசை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தவில் நாதஸ்வர கான மழை பொழிய பக்தர்களின் அரோகரா ஒலியுடன் நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெருந்திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.

திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்