ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1,613 மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1,613 மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் கமீத் ஏ.கே. அல்முலா  கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களை வழங்கினார்.

தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம்,காரைநகர் பிரதேச செயலர் இ.தயாரூபன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தரம் 1 தொடக்கம் தரம் 10 வரை கல்வி பயிலும் 1613 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.

2

1 3 4 5