கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பு நியதிகள் கனடா ஒன்ராரியோ இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் பதிவு திணைக்கழத்தில் பதிவு செய்யப்படவுள்ளது பற்றிய அறிவித்தல்!

CKCA LOGO

கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பு நியதிகள் கனடா ஒன்ராரியோ இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் பதிவு திணைக்கழத்தில் பதிவு செய்யப்படவுள்ளது பற்றிய அறிவித்தல்!


கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பு இறுதியாக 2015ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டு பொதுச்சபையினரால் 11.10.2015 அன்ற நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அதன் தமிழ் பிரதி மன்றத்தின் இணையத்தளத்தில் ஏற்கெனவே எடுத்துவரப்பட்டிருப்பது அங்கத்தவர்கள் யாவரும் அறிந்து கொள்ளத்தக்கது.


இந்த யாப்பு நியதிகள் கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் பதிவு திணைக்கழத்தில் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்படவுள்ளது. அதற்காக மன்றத்தின் தற்போதைய தமிழ் வடிவிலான யாப்பு நியதிகள் கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரும், தற்போது ரொறன்ரோ நீதிமன்றில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுபவருமான உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளரினால் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு அதன் முழு வடிவம் அங்கத்தவர்களின் பார்வைக்காக எடுத்து வரப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு அதற்கான உத்தியோகபூர்வமான முத்திரையிடப்பட்டு மொழிபெயர்ப்பாளரினால் வழங்கப்படவுள்ள இவ்மொழிபெயர்ப்பு ஆவணம் மேலும் நடைமுறை யதார்த்தத்தினை கருத்தில் கொண்டு கருத்துக்கள் மாறுபடாத வண்ணம் மேலும் பொருத்தமான ஆங்கில சொற்கள் பாவிக்கப்பட வேண்டும் என கருதினால் அங்கத்தவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தினை அணுகி அதனை தெரிவிக்கவும். 


23.04.2017 அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இவ்மொழிபெயர்க்கப்பட்ட மன்றத்தின் யாப்பு நியதிகள் ஒன்ராரியோ மாநில இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ் மொழியில் எழுதப்பட்ட யாப்பு நியதிகளிற்கும் ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டால் உடனடியாக 16.04.2017க்கு முன்னர் மன்றத்தின் இமெயில் karainagar@gmail.com ஊடாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


                   நிர்வாகம் 
கனடா காரை கலாச்சார மன்றம்
                   06.04.2017

 

 

கனடா – காரை கலாச்சார மன்றம் யாப்பு இலக்கம் 2015-003 (மீளமைக்கப்பட்டது) தமிழ் பிரதி

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1

 

கனடா – காரை கலாச்சார மன்றம் யாப்பு இலக்கம் 2015-003 (மீளமைக்கப்பட்டது)  ஆங்கில பிரதி

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/04/CKCA-YAPPU-ENGLISH-COPY.pdf