சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர் அமைப்பு உதயம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர் அமைப்பு உதயம். 

கடந்த 12.02.2017இல் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகார பூர்வமாக அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏழுபேர் கொண்ட செயற்குழுவில் இரண்டு பேர்கள் இளையோர்கள் இணைக்கப்படுவர் என்பது யாப்பின் விதிகளில் ஒன்றாகும். அதற்கிணங்க 2011இல் இருந்து சுவிஸ் வாழ் இளையோர்கள் எமது சபைக்கு தங்களாலான ஓத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இலை மறைகாயான செயற்பாடுகளின் வடிவமாக புதிதாக எமது சபைக்கு இளையோர் அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  19.05.2013இல் இடம்பெற்ற காரைத்தென்றல் நிகழ்வுவை இளையோர்கள் ஒழுங்கமைத்து சிறப்புற நடாத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினராக வருகைதந்திருந்த ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் இளையோர் அமைப்பின் உருவாக்கத்தின் தேவை பற்றி அறிவுரை வழங்கியிருந்தார். அவருடைய சிந்தனையையொட்டிய இவ் இளையோர் அமைப்புகள் பிரித்தானியாவிலும், சுவிற்சர்லாந்திலும் தோற்றம் பெற்றன. 

15.05.2016இல் காரைத்தென்றல் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்த காரை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி. தவநாயகி பாலசிங்கம் (B.Sc (Special), PGDE, PGDEM, MA in Teacher Education) அவர்களும்  தனது உரையில் சபையின் எதிர்கால திட்டங்கள், செயற்பாடுகள், பெண் விடுதலை, சபையில் இளையோரின் அளுமையின் வகிபாகம் என்பன பற்றி விரிவாக உரையாற்றியிருந்தார்கள். இளம் சமுதாயத்தினர் இவ்விழாக்களை பொறுப்பேற்று ஒழுங்கமைத்து செய்யும் பொழுது தேர்ச்சியையும், சபையைத் தொடர்ந்து செயற்படுத்தும் தலைமைத்துவத்தையும்   அவர்கள் பெற்றக் கொள்வார்கள்.  எனக் கூறியிருந்தார்.   அதற்கு உதாரணமாக 15.06.2016இல் நடைபெற்ற காரைத்தென்றல் நிகழ்வில் செல்வி பானுஜா பாலசுந்தரம், செல்வன்.  விஜயனந்தன் விதுர்சன். ஆகியோர்கள் தாமாகவந்து முன்வந்து  விருப்பம் தெரிவித்தமையை அடுத்து சபையின் செயற்குழுவில் இணைந்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு எமது சபையின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

சுவிஸ் வாழ் இளையோர்களின் கோரிக்கைக்கு அமைவாக 12.02.2017இல் பிரத்தியேகமாக நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் இளையோர் அமைப்பு  உத்தியோகபூர்வாமாக அங்கிகாரம் செய்யப்பட்டது. அதற்கான நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டு அதன் எதிர் கால செயற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது மேல் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சித்திரை மாதத்திற்கு பின்னர் கற்கை செயற்பாட்டிற்கு நேரம் தேவைப்படுவதனால் அதற்கு முன்னதாக காரைத் தென்றலை நடாத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.    103 சுவிஸ் வாழ் காரை   குடும்பங்களைச் சேர்ந்த 200கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். எல்லா மாணவச் செல்வங்களின் கலைத் திறனைகளையும் உள்ளடக்கியதான காரைத்தென்றல் நிகழ்வு  அமைய வேண்டும். என்பதாலும,; நீண்ட தயார்படுத்துலுக்கான காலம்   தேவைப்படும் என்பதாலும், அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வருடா வருடம் நடாத்தும் காரைத் தென்றல் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் புதுவருடத்தினத்தன்று 14.04.2017 வெள்ளிக்கிழமை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர்  அமைப்பின் ஓன்றுகூடலும் கலை மாலையும் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அன்பான சுவிஸ் வாழ் காரை மக்களே!

ஏனையநாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சுவிஸ் நாட்டில் மிகக்குறைவான காரைக் குடும்பங்களே வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சுவிசிலும் தாயகத்திலும் எதிர்காலச் சந்ததியினரது ஆளுமை விருத்தியியை முதன்மைப் படுத்தி நாம் பல முன்னுதாரணமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

"ஆளுயர்வே ஊருயர்வு"  என்ற மகுடவாசகத்துடன் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கான  வியூகங்கள் அமைகின்றன. மாணவர்களுக்கான கற்கை செயற்பாட்டின் விருத்திக்காக காரைநகர் பாடசாலைக்கான நிதியுதவி, மாணவருக்கான நூல் வெளியீடு மாணர்களுக்கிடையிலான தியாகத்திறன் வேள்வி போட்டிகள் என அளுமை விருத்திக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதனை சிறந்த முறையில் செயயற்படுத்துவதற்கு எமது சபையால் 2014ஆம் ஆண்டு மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது. இக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதிபலன் எதிர்பாராது எமது சபையின் கோரிக்கைக்கிணங்கவும், நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும் பல பணிகளை ஆற்றிவருகின்றனர். தொடர்ந்து அவர்களது பணி தொடர வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.
 
                                          நன்றி மறப்பது நன்றன்று நன்ரல்லது
                                              அன்றே மறப்பது நன்று- குறள்

எதிர் காலத்தில் எமது  பண்பாட்டையும் விழுமியங்களையும் பேணுவதற்கான முன்முயற்சியில் ஈடுபட இளையோர் தாமாவே முன்வந்தமையையிட்டு பெருமை கொள்கின்றோம். பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களில் வாழ்கின்ற காரை இளையோர்களையும்  ஒன்றிணைக்கும் அவர்களின் கன்னிமுயற்சியான  "ஓன்றுகூடலும் கலை மாலையும்" வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

                                                                        நன்றி

                               "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                  இங்ஙனம்
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                 செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      இளையோர் அமைப்பு
                                                                      மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                    சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                05 – 03 – 2017
                         

 

Flyer8