சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய திருவாளர் கதிரவேலு தில்லையம்பலம் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய திருவாளர் கதிரவேலு தில்லையம்பலம்  அவர்களுக்கு மதிப்பளிப்பு.

திருவாளர் கதிரவேலு தில்லையம்பலம்  அவர்கள் 1928ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது; 90 வயதின் விளிம்பை எட்டியுள்ள போதிலும் உடலும் மனமும் உற்சாகமாக இளையராய்த் திகழ்பவர். காரைநகரின் சமூகசேவை வரலாற்றில் இவரது பங்கு கணிப்பிற்குரியது.  பல்வேறு வகையான சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பக் கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாசாலையிலும், உயர் கல்வியை காரை இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியில் கற்றபின் பயிற்றுவிக்கப் பட்ட ஆசிரியரானார். பால பண்டிதர் பட்டத்தையும் பெற்றக் கொண்டவர். 

1953 இல் கேகாலை மடுன் போவா அ.மு.மகா வித்தியாலயத்தில் இவரது  கல்விச் சேவை ஆரம்பித்தது. காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை, இலகடி இ.த.க பாடசாலை ஆகியவற்றில் அதிபராக கடமையாற்றினார். இறுதியாக கோவிந்தன் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் யாழ்ற்றன் கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் 12 வருடம் அதிபராக இருந்து 18.09.1988 இல் ஒய்வு பெற்றார். 35 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள 10 பாடசாலைகளில் கல்விச் சேவை புரிந்த பெருமைக்குரியவர்.

காரைநகர் மணிவாசகர் சபையின் பரீட்சை செயலாளராக (1988-2010) 22 வருடங்களாக செயலாற்றிய பெருமைக்குரியவர். விளானை சனசமூக நிலையம், விளானை பேருட் சபை, ஆகியவற்றின்   தலைவராகவும்,  மற்றும் விளானை  கிராம அபிவிருத்திச் சபையின் உபதலைவராகவும் கடமையாற்றியவர்.

காரைநகர் பலநோக்கு கூட்டறவுச் சங்கம், காரைநகர் தென்-கிழக்கு விவசாய சங்கம், ஒய்வுதியர் சங்கம், மணிவாசகர் சபை, சைவ மகா சபை, சுந்தரமூர்த்தி வித்தியாலய பழைய மாணவர் சங்கம், காரைநகர் இந்துக் கல்லூரியின் பாடசலை அபிவிருத்திச்சபை என்பவற்றில் தலைவர், உபதலைவர், செயலர், செயற்குழு உறுப்பினர் எனப் பன்முக வகிபாகங்களை சிறப்புற ஆற்றியவர். 

ஊருக்கு உழைத்த பெரியோரை "வாழும்போது வாழ்த்துவோம்" என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. காரைநகரின் கல்விக்கும் பொது ஊர் மேம்பாட்டுக்கும் காத்திரமான பங்காற்றியவரும் இன்றும் குன்றா இளமையோடு சுறுசுறுப்பாகப் பொதுப்பணி ஆற்றிவருபவருமாகிய  முன்னாள் அதிபர் மதிப்பிற்குரிய கதிரவேலு தில்லையம்பலம் ஐயா அவர்களுக்கு "கல்விக் காவலர்" விருதளிப்பதில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் பெருமிதமடைகிறோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 09 – 01 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் அதன் அதிபர் வே. முருகமூர்த்தி தலைமையில் நடாத்திய "முப்பெரும் விழா – 2017" இல் முன்னாள் அதிபர் மதிப்பிற்குரிய கதிரவேலு தில்லையம்பலம் ஐயா அவர்களுக்கு "கல்விக் காவலர்" விருதளித்து மதிப்பளித்தது. 

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை இசையாசிரியை திருமதி- செல்வி. லீலாவதி இராஜரட்ணம் அவர்கள் இசைத்து வாழ்த்தினார். மலாயா காரை ஒன்றியத் தலைவர் மதிப்புக்குரிய மருத்துவர் டத்தோ. சண்முகம் சிவானந்தன் அவர்கள் பொன்னாடை போர்த்தி மலையணிவித்து வாழ்த்துப் பாவையும் விருதையும் வழங்கி மதிப்பளித்தார். 
வாழ்த்துப்பாவும் படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

                                                     "ஆளுயர்வே ஊருயர்வு"
                             "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

                                                                                                      இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                           மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                     19.01.2017

DSC_4860-Copy-Copy DSC_4861-Copy-Copy DSC_4862-Copy-Copy DSC_4864-Copy-Copyகதிரவேலு தில்லையம்பயம் வாழ்த்துப்பா