கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் அறியத்தரும் கனடா காரை பட்டதாரிகள் கௌரவிப்பு நிகழ்வு!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் அறியத்தரும் கனடா காரை பட்டதாரிகள் கௌரவிப்பு நிகழ்வு!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் மற்றுமோர் செயற்பாடாக கனடாவில் வதியும் காரைநகர் மக்களின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிற்கு தெரிவாகி கல்வி கற்று வருபவர்கள் மற்றும் கடந்த காலங்களில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை கௌரவிக்க எண்ணியுள்ளது.
எதிர்வரும் 29.10.2016 அன்று நடைபெறவுள்ள ‘காரை வசந்தம் – 2016’ நிகழ்வுகளின் போது கனடா வாழ் காரைநகர் பெற்றோர்களின் பிள்ளைகள் கனடாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிற்கு அனுமதி பெற்று பட்ட படிப்பு மேற்கொண்டு வருபர்கள் மற்றும் இதுவரை படித்து முடித்து பட்டம் பெற்றவர்களை வெளிக்கொண்டு வருவதுடன் அவர்களை கௌரவிக்க எண்ணியுள்ளது.

காரைநகர் மண்ணை அடியாக கொண்ட பேரன், பேத்திகளை அல்லது பெற்றோர்களை அடியாக கொண்ட கனடாவில் பல்கலைக்கழக அனுமதி அல்லது கல்லூரி அனுமதி பெற்று கனடாவில் பட்ட படிப்பு கல்வியை தொடரும் மாணவர்கள் உடனடியாக கனடா காரை கலாச்சார மன்றத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் எமது ஊர் காரை மண் பெருமை கொள்கின்றது. ‘காரை வசந்தம் 2016’ இன் போது உங்களை எமது ஊரின் சார்பாக கனடா காரை கலாச்சார மன்றம் கௌரவிக்க எண்ணியுள்ளது. மிகவும் குறுகிய கால இவ்வேண்டுகோளினை ஏற்று தங்களது பெயர், விபரம், கல்வி கற்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி, பட்ட படிப்பு மேற்கொள்ளும் பிரிவு, அத்துடன் படித்து முடித்து பட்டம் பெற்றவராக இருந்தால் அதன் முழு விபரம் என்பவற்றினை கனடா காரை கலாச்சார மன்றத்தின் karainagar@gmail.com  இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நிகழ்வானது பிரபல வீடுவிற்பனை முகவரும், காரை மண் அபிமானியுமான திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை அவர்களின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. இக்கௌரவிப்பு நிகழ்வின் போது கலந்து கொண்டு தங்களிற்கான கௌரவத்தினை பெற்றுக்கொண்டு மண்ணையும் மக்களையும் பெருமை கொள்ள அழைக்கின்றோம்.

இது தொடர்பான உங்களது மேலதிக தொடர்புகளுக்கு:

karainagar@gmail.com
416 642 4912: கனடா காரை
 கலாச்சார மன்றம்
அல்லது திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை – 647 406 6352

                   நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றம்