கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள்!


‘காரை வசந்தம்’ நிகழ்வினையொட்டி வருடந்தோறும் நடாத்திவரும் சிறுவர்களிற்கான தமிழ் திறன் போட்டிகள் வழமைபோல் இவ்வருடமும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ஒக்டோபர் மாத முற்பகுதியில் இடம்பெறும். போட்டிகளிற்குரிய விடயங்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் இருந்து மட்டும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். 


தமிழ் திறன் போட்டிகள் 6 பிரிவுகளாக வயதெல்லைக்கு உட்பட்டு நடைபெறும்.
1. பாலர் பிரிவு (JK,SK)
2. கீழ் பிரிவு (தரம் 1, தரம் 2)
 3. மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
 4. மேற்பிரிவு (தரம் 5, தரம் 6)
 5. அதிமேற்பிரிவு (தரம் 7, தரம் 8, தரம் 9)
 6. உயர்பிரிவு (தரம் 10, தரம் 11, தரம் 12)

மேற்படி வயது எல்லைகள் கடந்த யூலை மாதம் வரை சிறுவர்கள் பாடசாலையில் கல்வி கற்ற வகுப்பு அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.


நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதல்)


பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
 கீழ் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
 மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம்
 மேல் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம்
 அதிமேற்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் மற்றும் ஏதாவது ஒரு திருவாசகம்
 உயர்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் மற்றும் ஏதாவது ஒரு திருவாசகம்


பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.
 (பேச்சிற்குரிய விடயம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் 02.09.2016 அன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்)


வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.
 (வாசிப்புக்குரிய விடயம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் 02.09.2016 அன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்)

 

எழுத்து:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.
 (எழுத்துக்குரிய விடயம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் 02.09.2016 அன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்).


02.09.2016 எதிர்வரும் வெள்ளிக்கிழமை போட்டிகளிற்கான விடயங்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் தரம் ரீதியாக எடுத்து வரப்படும். இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் 416 642 4912 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
போட்டி விதிமுறைகள் மற்றும் நடைபெறும் காலம், இடம் என்பன பின்னர் அறியத்தரப்படும்.

நன்றி!

கனடா காரை கலாச்சார மன்றம்