கல்வியாளர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் வெளியீடு குறித்து அவுஸ்ரேலியா காரை கலாச்சார சங்கம் விடுத்த செய்திக் குறிப்பு

கல்வியாளர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் வெளியீடு குறித்து அவுஸ்ரேலியா காரை கலாச்சார சங்கம் விடுத்த செய்திக் குறிப்பு

சைவப் பாரம்பரியத்தைப் பேணியவாறு கல்விப்பயிர் வளர்த்த கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதமும் அந்த மகான் பற்றிய மேலும் பல தகவல்களும் அடங்கிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற வரலாற்று நூல் வெளியிடு காரைநகரில் ஞாயிற்றுக்கிழமை (20.12.2015) அன்று பிற்பகல் 2:30 இற்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தல் நடைபெற உள்ளது. 
கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்ட இந்த நூல், செப்ரம்பர் மாதம் சுவிற்சலாந்திலும், நவம்பர் மாதம் பிருத்தானியாவிலும் வெளியிட்டு வைக்கப்பட்டதின் தொடர்ச்சியாகவே காரைநகரில் வெளியிடப்படுகின்றது. 
இந்நிலையில் இந்நூல் வெளியீடு  குறித்து அவுஸரேலிய காரை கலாச்சார சங்கம் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பொன்றை இங்கே தருகின்றோம்.  


நாவலருக்குப் பின் சைவத்தையும் தமிழையும் பாதுகாத்தவர் என்று பேசப்பட்டவர் காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர் அருணாசலம் உபாத்தியாயர் அவர்கள். காரைநகர் உட்பட பல ஊர்களில் சைவப்பாடசாலைகளினது தோற்றத்திற்கும் யாழ்ப்பணத்தில் சைவ ஆசிரியர் பயிற்சி கலாசாலையினதும் தோற்றத்திற்கு காரணமானவர் .இவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்து போட் இராசரத்தினம் அவர்கள் சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தை தோற்றுவித்து நாவலரினதும் அருணாசலம் உபாத்தியாயரினதும் சைவத் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்தார் .
இத்தகைய பெருமகனின் வரலாற்றினை அவரது மாணவராகிய கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதினார்கள் .இப்புத்தகம் காரைநகர் சைவ மகா சபையின் வெளியீடாக 1971 ல் வெளிவந்தது . இப்புத்தகத்தின் மறு பதிப்பு காரைநகரை ச்சேர்ந்த கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவராகிய சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் பெரு முயற்சியில் இந்த வருடம் வெளியிடப்பட்டது .

Arunasala-Cover
இப்புத்தகத்தின் வெளியீடுகள் கனடாவிலும்இ இங்கிலாந்திலும் நடைபெற்று தற்போது காரைநகரில் 20-01-2015 இல் தில்லைக்கூத்தனின் திருவெம்பாவை உற்சவகாலத்தில் வெளியிடப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக 17-01-2016 ல் கொழும்பு தமிழ் சங்கத்திலும் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்வுகளில் இயலுமான சைவத் தமிழ் அன்பர்களை கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.