நீங்காத நினைவில் நின்றவன் ராஜன்

KSR-PHOTO

நீங்காத நினைவில் நின்றவன் ராஜன்

சுந்தரமான சுதந்திரமான சுந்தரராஐனை காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் 70ம் ஆண்டு தொடக்கம் 75ம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் படித்தவர்கள் படிப்பித்த அதிபர் ஆசிரியர்கள் யாருமே ராஐன் உன்னை மறந்திட முடியாது.

    கல்லூரி வாழ்வில் உனது மலர்ந்த முகமும் புன்சிரிப்பும் உன் அழகுத் திருமுகத்திற்கு இன்னும் மெருகு ஊட்டின. நாம் நண்பர்களாக பாடிப் பறந்து திரிந்து வாழ்ந்த காலத்தை மறக்க முடியுமா?
    நீர் கல்லூரியின் மாணவர் அணித்தலைவன் ஆக வலம்வரும் அழகே தனிஅழகு!

    அது மட்டுமா கல்வித்துறையிலும், விளையாட்டுத்துறையிலும், கல்லூரி பொதுப்பணிகளிலும் நீர் ஆற்றிய அளப்பரிய சேவைகளை நண்பர்களாகிய நாம் மறந்துவிட முடியுமா?

    நண்பர்களிடம் பரிவுடன் பழகி குதூகளிப்பதில் உமக்கு நிகர் நீரே!

    40வருடங்கள் கழித்தும் கனடாவில் எனது நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கவந்தபோதும் அந்தக் குதூகளிப்பை தொடர்ந்தும் நண்பர்களான நாம் உம்மிடம் கண்டோம். எங்களிடம் அளப்பரிய அன்பு கொண்டவன் நீர்!

    இவை எல்லாவற்றையும் நீங்காத நினைவுகளாக எம்மிடம் தந்து விட்டு நீர் தில்லைக்தகூத்தனின் பாதக்கமலங்களில் சரணடைந்து கொண்டீரோ!

    பாரீஸ் வந்தபோதும் உறவுகள் நண்பர்களிடம் பழகிய விதம் மறக்கமுடியாதவை எல்லோரையும் அன்புடன் விசாரிப்பாயே. இனி யார் இந்த தேடலை நண்பர்களிடம் செய்வர்.

    உன் மலரந்த முகந்தனை இனி எப்படி எங்கு காண்போம் என அதிர்ச்சியில் உறைந்திட்ட நாம்
    உங்கள் ஆத்மா சாந்தி அடைய தில்லைக்கூத்தனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம்சாந்தி!
ஓம் சாந்தி! சாந்தி!!
ஓம்சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

பிரான்ஸ் வாழ் காரை நண்பர்கள் உறவினர் சார்பாக
தம்பி  உறவினர் சுண்டா (சுகிர்தராசா)
நண்பன் நேரு மாஸ்ரர் (செல்வச்சந்திரன்)