திண்ணபுரத்தில் விநாயகருக்கு புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் வருணபகவானின் ஆசியுடன் இனிதே இன்று இடம்பெற்றது.

DSC00136 (Copy)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் விநாயகப் பெருமானுக்காக அமைக்கப்பட்ட புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா இன்று  புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

பஞ்சரதங்கள் பவனிவரும் இவ்வாலயத்தில் விநாயகப்பெருமானுக்காக புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு.இந்தத் தேரின் வெள்ளோட்ட விழா இன்று இடம்பெற்று 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை உள்ள சுபவேளையில் இரதப்பிரதிஸ்டையும் இடம்பெற்றது.
சுட்டெரிக்கும் வெய்யிலில் ஆரம்பமானது தேர்வெள்ளோட்டம் ஆனால் வானத்துத் தேவர்கள் தேரின் அழகிழனயும் வெள்ளோட்டச் சிறப்பினையும் கண்டு உடனடியாகவே வருணபகவானை அனுப்பிவைத்தனர்.

ஏங்கிருந்தோ வந்த முகில்கள் மழையாகப் பொழிய மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் தேர் உலா வந்த காட்சி பத்தர்களைப் பத்திப் பரவசமாக்கியதுடன் வெப்பமும் தனிந்து இப்பிரதேசமெங்கும் குளிர்மையாகியது.

நாளை வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும் வசந்தமண்டபப் பூசையையடுத்து பஞ்சரத பவனியும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் மறுநாள் சனிக்கிழமை திருக்கல்யான உற்சவமும் இடம்பெற உள்ளது.