கனடா-காரை கலாசார மன்றம் விடுக்கும் யாப்பு திருத்தம் பற்றிய அறிவித்தல்! 27.01.2015

 

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் காலத்திற்கு ஏற்ப மன்றத்தின் வளர்ச்சியினை முன்னெடுத்து செல்லும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பு விதிகள் திருத்தப்படவேண்டியுள்ளது யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது யாப்பு திருத்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. இருந்த போதிலும் போதிய அவகாசம் இன்மை காரணமாகவும், போதிய அறிவித்தல் விடுக்கப்படாத காரணங்களினாலும் யாப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் போஷகர் சபையின் கருத்துக்களிற்கு அமையவும், பொதுச்சபையின் கருத்துக்களிற்கு அமையவும் யாப்பு திருத்தம் அவசியம் என்பதாலும் கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பு புனரமைக்கப்பட்டு புதுவடிவம் பெறவுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள் இவ்யாப்பு திருத்த குழுவில் 09.02.2015க்கு முன்னர் இணைந்து கொள்ளுமாறும், யாப்பு திருத்த பிரேரணைகளை எழுத்து மூலம் முன்வைக்குமாறும் கனடா காரை கலாசார மன்றத்தின் போஷகர் சபை சார்பிலும், நிர்வாக சபை சார்பிலும் கேட்டுக் கொள்கின்றோம்.

யாப்பு திருத்தம் வழிமுறைகள்:

1. யாப்பு திருத்த குழு  அமைத்தல். யாப்பு திருத்த குழுவில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் உடனடியாக 416 642 4912 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைத்து தலைவர் அல்லது செயலாளருடன் தொடர்பு கொள்ளவும்.

2. அங்கத்தவர்களிடமிருந்து யாப்பு திருத்த பிரேரணைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொள்ளுதல்.

3. கால மாற்றத்திற்கு ஏற்ப யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற பிரேரணைகளை ஆராய்ந்து, தற்போதைய யாப்பில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக பரிசீலித்தல்.

4. புதிதாக வடிவமைக்கப்பட்ட யாப்பினை அங்கத்தவர்களின் பார்வைக்காக வெளியிடல். (யாப்பு திருத்த குழுவின் பரிசீலனைக்கு பின்னர் புதிய திருத்திய யாப்பு கனடா காரை கலாசார மன்றத்தின் இணையத்தளம் ஊடாக மட்டுமே வெளியிடப்படும், ஆயினும் இணையத்தள வசதி பெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தவர்கள் மன்றத்துடன் தொடர்பு கொண்டு தபால் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்)

5. புதிய யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது மேலும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் இருப்பின் எழுத்து மூலமாக மீண்டும் அங்கத்தவர்கள் கருத்துக்களை பெறுதல்.

6. மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் பொதுச்சபையின் அங்கீகாரத்தை பெறுதல்.

7. புனரமைக்கப்பட்ட யாப்பு நிர்வாக சபை, போஷகர் சபையினரால் பரிசீலிக்கப்பட்டு, பொதுச்சபையினால் ஏற்கப்பட்ட பின்னர்; நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

பி.கு: யாப்பு திருத்த குழுவில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் 09.02.2015 எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் 416 642 4912 என்ற தொலைபேசியில் அழைத்து இணைந்து கொள்ளவும்.