சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொங்கல் மடல்

SWISS LOGO

                                                   உ
                                           சிவமயம்

            சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொங்கல் மடல்

அன்பான காரைநகர்த் தமிழர்களே வாரீர்
ஆருத்திரா தரிசனத்துக்கு முன்பு அறிவித்தது போல்
எம் யோக ரீச்சர் அறிவித்தது போல்
இனிவரும் வருடம் தோறும் தமிழுக்கு
ஈகை புரிவோம் என உறுதி பூணுவோம்.

உறுதிக்காக உங்கள் பங்களிப்புக்கள்
ஊக்கங்கள் தேவை என்றும் தேவை
என்றும் எமக்கு மன்றம் தில்லையே!
ஏன் என்று ஏங்காதீர்கள்.

ஐயம் இட்டுண் பாட்டியின் தமிழ்
ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும்
ஓதாமல் ஓதுவது தமிழே-எமக்கு
ஒளடதமும் தமிழே எம் தமிழுடன்
கூடிய பாரம்பரியங்களுமே!
அஃதே நாம் எமது வழித்தோன்றல்களுக்கு
அள்ளியோ கிள்ளியோ வழங்கக் கூடியவை.

ஒவ்வொரு மாதங்களிலும் வரும் விழாக்களையும்
விரதங்களையும் நாம் மறந்து விட்டாலும்
எம் புலம் பெயர் வாழ்வு எம்மை-அவற்றை மறக்கச்
செய்தாலும் எமக்குப் பின் வரும் தலைமுறையினர்
அவற்றை மறந்து விடாது பேண எம்மால்
இயன்றளவு செயற்படுவோம்.

சமயமும் எம் வாழ்க்கையும் ஒன்றோடு ஓன்று
இணைந்தவை. எமது தமிழ் பண்டிகைகள், விழாக்கள்
எம்மை ஒன்று சேர்க்கின்றன. எமது ஒற்றுமையை
வளர்க்கின்றன. நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்தும்
பிறர் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தும்
வேலைகள் செய்யும் போது எமக்கு தன்னம்பிக்கையும்,
ஊற்சாகமும் அதிகரிக்கின்றன.

தை மாதம் ஞாயிறுக்கு வணக்கம் செலுத்தும் நாள் தைப்பொங்கல், 
எருதுகளுக்கு நன்றி செலுத்தும் நாள் மாட்டுப்பொங்கல், 
புதிய நெல்லு – புதிர் எடுக்கும் நாள் தைப்பூசம், 
' தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது
ஆன்றோர் வாக்கு.

மாதம் ஒரு கட்டுரையை எழுதுவோம் வாரீர்!
எழுதுங்கள், வாசியுங்கள், பயனடையுங்கள்.

தைப்பொங்கல் விழாக் கட்டுரை தொடரும்————

                                                   நன்றி
08.01.2015                                                                           இங்ஙனம்.
சுவிற்சர்லாந்து                                              சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                 சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                மார்கழி 2014