Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனம் கனடா-காரை கலாச்சார மன்றத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரம் தொடர்பாக காப்பாளர் சபை எடுத்துள்ள தற்போதைய நிலைப்பாடு குறித்த அறிவித்தல்

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-காரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக June 26, 2024 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நீதி மன்ற நகர்த்தல் பாத்திரத்திம் (Notice of Motion) தொடர்பாக ஆராய்ந்து ஒரு சுமூகமான தீர்வினை எட்டுவதற்கேதுவாக, சட்டத்தரணி ஒரவரை  கனடா-காரை கலாச்சார மன்றம் சார்பாக செயற்படவும் முடிவுகளை எடுக்கவும் வழி செய்யும் Retainer Agreement அல்லது Engagement Letter எனப்படும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சார்பாக கைசாத்திடப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அதன் பிரதியொன்றினை காப்பாளர் சபைக்கு அனுப்பி வைக்கும்படி குறித்த சட்ட நிறுவனத்திடம் ஒன்றிற்கு மேற்ப்பட்ட தடவைகள் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினர் வேண்டிக்கொண்ட போதிலும் குறித்த சட்ட நிறுவனத்திடம் இருந்து இதுவரை சாதகமான பதிலேதும் காப்பாளர் சபைக்குக் கிடைக்கப் பெறவில்லை என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

எனவே, குறித்த சட்ட நிறுவனம் தமது நகர்த்தல் பத்திரத்தில் ‘ground for the motion is the circumstances set out in the supporting affidavit to be filed’ என்று குறிப்பிட்டுள்ள அவர்களின் சத்தியக்கடதாசி கிடைக்கப்பெற்றும் வரை குறித்த சட்ட நிறுவனம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற நகர்த்தல் பத்திரம் தொடர்பாக காப்பாளர் சபை எந்தவொரு நிலைப்பாட்டினையும் எடுக்கமுடியாத நிலையில் உள்ளது என்பதனையும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

குறித்த சட்ட நிறுவனத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையின் தற்போதைய நிலைப்பாடு குறித்து ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதியொன்றும் கனடா வாழ் காரைநகர் மக்களின் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள் இருப்பின் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளும்படி மிகுந்த பணிவன்புடன் கனடா வாழ் காரைநகர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

காப்பாளர் சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

Leave a Reply