கனடா-காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்ளிற்கு நன்றிகள் கோடி!

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டம் 07.12.2014  ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுரோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் அமைதியான முறையிலும் ஜனநாயக வழியிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை காரைநகரில் உள்ள 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு(தரம் 1 – தரம் 5 வரை) தலா 10 இலட்சம் ரூபா வரையான நிதியினை நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவதற்காக நிர்வாக சபையில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் மன்றத்தின் நிரந்தர வைப்பில் கனடாவிலும், தாயகத்திலும் உள்ள நிதினை இத்திட்டத்திற்காக பெற்றுக்கொள்வதற்காக பொதுச்சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்காகவும், தற்போதைய நிர்வாக சபையியின் செயற்பாடுகளை மன்றத்தின் அங்கத்தவர்களிற்கு விளக்கும் முகமாகவும் கூட்டப்பட்ட விசேட நிர்வாக சபை கூட்டத்தில் மன்றத்தின் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தற்போதைய நிர்வாக சபையினால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு சார்பாகவும், கனடா காரை கலாச்சார மன்றத்தில் நிரந்தர வைப்பில் கனடாவில் உள்ள 21,000 டொலர்களையும் இலங்கையில் ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பில் உள்ள 10 இலட்சம் ரூபாய்களையும் அத்துடன் இலங்கையில் நடைமுறைக் கணக்கில் உள்ள 5 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதியினையும் இத்திட்டத்திற்காக பெற்றுக் கொள்வதற்கு சார்பாக வாக்களித்து கனடா காரை மக்கள் தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது மட்டுமன்றி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க உதவி புரிந்தவர்களாக இறைவனது ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

முற்றிலும் ஜனநாயக வழியினை கைக்கொண்டு இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது அனைத்து தரப்பினருக்கும் தங்களது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, திட்டங்கள் செயற்பாடுகள் பற்றி முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

கூட்டத்தில் கூடி நின்று கூக்குரல் இட்டு கூட்டத்தை குழப்பும் செயற்பாடுகளை கடந்த காலங்களில் கண்டு கொண்ட தற்போதைய நிர்வாக சபை அவ்வாறான சந்தர்ப்பங்கள் எழாத வண்ணம் பொதுக்கூட்ட்தினை ஒழுங்கமைப்பு செய்து அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை பொதுக்கூட்டத்தில் பொதுச்சபை முன் தெரிவிக்க ஒலி வாங்கியை வழங்கி அவர்களது கருத்துக்களையும் பொதுச்சபையின் முன் கொண்டு வந்திருந்தது.

அதன் அடிப்படையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் கருத்துக்களை பொதுச்சபை முன் சத்தமாக சொல்வதற்கு அனுமதித்திருந்த செயலானது அனைவரது கவனத்தையும் ஈர்திருந்தது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் இவ்வருட செயற்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி பொதுச்சபையின் முன் பொருளாளர் அறிக்கை மற்றும் செயற்பாட்டு அறிக்கைகள் மூலம் முன்வைக்கப்பட்டிருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக எவ்விதமான முரண்பாடான கருத்துக்களும் இன்றைய பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்படாமலும், பொதுச்சபை எதிர்பார்த்த அனைத்து விடயங்களையும் இம்மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை முன்வைத்து நடாத்திய இன்றைய பொதுச்சபை கூட்டத்தில் ஜனநாயகம் முற்றும் முழுதாக கடைப்பிடிக்கப்பட்ட செயலானது அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்து தற்போதைய நிர்வாக சபையினரால் முன்வைக்கப்பட்ட திட்டம் பற்றிய முழுமையான விளக்கத்தையும் அளித்திருந்தது.

அதன் மூலமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகளும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்களின் நல்லெண்ணமும் வெளிப்பட்டுள்ளது.

காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்காக மன்றத்தின் நிரந்தர வைப்பில் உள்ள நிதியினை வழங்க பொதுச்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 46 வாக்குகள் சார்பாகவும், 23 வாக்குகள் சார்பற்றதாகவும் வழங்கப்பட்டன. இன்றைய பொதுச்சபை கூட்டம் மூலம் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் செயற்பாடுகளிற்கு புத்தொளி வளங்கப்பட்டுள்ளதோடு கனடாவில் காரைநகர் மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றிய பெருமையினையும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

இன்றைய பொதுச்சபை கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை உரிய முறையில் தெரிவித்தது மட்டுமன்றி எந்த முடிவானாலும் அதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு ஜனநாயக விழுமியங்களை கடைப்பிடிக்கும் கனடா நாட்டில்தான் நாம் வாழ்கின்றோம் என்பதனை பெருமையுடன் எடுத்தியம்பி சென்றுள்ளார்கள்.

இன்றைய பொதுச்சபை கூட்டத்தின் மூலம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள் வழங்கிய அனுமதியினை ஏற்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதியத்திற்காக நிதியினை வெகுவிரைவில் சட்டபூர்வமாக வைப்பில் இட்டு காரைநகர் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்விக்கு விளக்கேற்றியவர்களாக கோடி புண்ணியம் செய்த பலனை பெற்றக்கொள்கின்றார்கள்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தர்மம் யாவும்
பெயர் விளங்க ஒளிரா நிறுத்தல்
பின்னயாவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

கனடா காரை கலாசார மன்றம் இன்று நடாத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இப்பொதுச் சபை கூட்டத்தினை சிறப்பித்து, தங்கள் கருத்துக்களை உரிய முறையில் முன்வைத்து மற்றத்தின் வளர்ச்சிக்கும் எமது ஊரின் கல்வி வளர்ச்சிக்கும் வித்திட்டு சென்ற அங்கத்தவர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

IMG_3550 IMG_3551 IMG_3552 IMG_3553 IMG_3554 IMG_3555IMG_3568 (Copy) IMG_3569 (Copy) IMG_3570 (Copy) IMG_3571 (Copy) IMG_3572 (Copy) IMG_3573 (Copy) IMG_3574 (Copy) IMG_3575 (Copy) IMG_3576 (Copy) IMG_3577 (Copy) IMG_3578 (Copy) IMG_3579 (Copy) IMG_3580 (Copy) IMG_3581 (Copy) IMG_3582 (Copy) IMG_3583 (Copy) IMG_3585 (Copy) IMG_3586 (Copy) IMG_3587 (Copy) IMG_3588 (Copy) IMG_3589 (Copy) IMG_3590 (Copy) IMG_3591 (Copy)