எளிமையாகவும், அமைதியாகவும் நடைபெற்ற சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நான்காவது பொதுக்கூட்டம்

SWISS LOGO

கடந்த ஞாயிற்றக்கிழமை 30.11.2014 அன்று Zürich இல் Gemeinschaft Brombeeriweg மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நான்காவது பொதுக்கூட்டம் இடம்பெற்றது. மங்கள விளக்கேற்றலுடனும், திரு.சந்திரகுமார் நந்தகுமாரனின் தேவாரத்துடனும் நிகழ்ச்சிகள்  ஆரம்பமாயின.

       சுவிஸ் வாழ் காரை மக்கள் முப்பதுக்கு மேற்பட்டோர் மண்டபத்தில் பிரசன்னமாகவிருந்தனர். இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக பத்துக்கு மேற்பட்ட  பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோர் எமது இளம்வயதினர் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சிகளின் வரிசையில் நீத்தார் வணக்கம் செலுத்தி பின்பு இறுவெட்டில் மன்ற கீதம் இசைக்கப்பட்ட போது எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்கள்.

      சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் உத்தியோக நிகழ்வுகளாக செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டு பின்பு அவ்விரண்டும் சபையோரால் ஏற்கப்பட்டன. அடுத்து இடம் பெற்ற புதிய நிர்வாகத் தெரிவின் போது இதுகாறும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களே தொடர்ந்தும் இயங்க வேண்டுமென திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் முன்மொழிந்தார் அதனை சபையோரால் ஏகோபித்த கருத்தாக ஏற்கப்பட்டு இருப்பினும் சபையோரின் அங்கீகாரத்துடன் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.


     திரு.கனகசபை சிவபாலன் திட்டமிடல் ஒருங்கிணைப்பு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இப்பதவிக்கு சபையோர் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களை ஏகமனதாக தெரிவு செய்ய அவரும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டார். தெரிவில் தொடர்ந்து செயலாளராக திரு.தம்பையா தயாபரன், பொருளாளராக திரு முருகேசு பாலசுந்தரம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
 
     தயார்நிலை உறுப்பினர்களாக திரு. கனசுந்தரம் சிவநேயன் திரு.இராசையா அமிர்தலிங்கம் இவர்களுடன் பதிய உறுப்பினராக திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் தெரிவாகினார்.

 செயற்குழுவில் புதிய உறுப்பினர்களாக திரு.கணபதிப்பிள்ளை நந்தகுமார்,திரு.சந்திரகுமார் நந்தகுமாரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 குடும்ப அங்கத்தவர்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும் சபையோரின் ஏகமனதான விருப்பத்திற்கிணங்க திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா தொடர்ந்தும் செயற்குழுவின் தலைவராக இருக்க தனது சம்மதத்தையும் தெரிவித்தார்.

    தொடர்ந்து கலந்து கொண்ட அங்கத்தவர்களுக்கிடையே சபையின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. திரு. சதாசிவம் சர்வநாததனின் வேண்டுகோளுக்கிணங்க யாப்பில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.

      ஐப்பசி 2014இல் காரைநகர் சென்ற வந்த செயற் குழுவின்தலைவர் தம்மிடம் கிடைத்த கோரிக்கைகளில் முன்னுரிமை உடையவை சார்பில் சபையினருக்கு சில வேண்டுதல்களை விடுத்தார். வருடாந்தம் நடைபெறும் காரைத்தென்றல் நிகழ்வை இரண்டுவருடத்துக்கு ஒரு முறை நடத்தலாம் என திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் அவர்களால் முன்மொழியப்பட்டது. அது சபையோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந் நிகழ்வு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அத்தியாவசியமானது என சபையோர் தெரிவித்தனர். அது மட்டுமல்லாது தொடர்ந்தும் எமது ஊருக்கு வௌ;வேறு வகைகளில் அபிவிருத்தி பணிகள் தொடர தாம் சபைக்கு  உதவிவழங்க உரிய படிவங்களையும் அவர்கள் பெற்றுச் சென்றனர். செல்வன்; திவின் சண்முகநாதனின் தேவாரத்துடன் கூட்டம் மதியம் 12.00 மணிக்கு இனிதே நிறை வேறியது.

                                                            நன்றி


03.12.2014                                                                                       இங்ஙனம்.
சுவிற்சர்லாந்து                                                     சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                    கார்திகை 2014

 

DSC_5823 (Copy) DSC_5825 (Copy) DSC_5826 (Copy) DSC_5827 (Copy) DSC_5828 (Copy) DSC_5829 (Copy) DSC_5865 (Copy) DSC_5880 (Copy) DSC_5881 (Copy) DSC_5882 (Copy)