மரண அறிவித்தல், திரு.திருச்சிற்றம்பலம் கதிரவேலு (கள்ளித்தெரு,தங்கோடை,காரைநகர்) (கூமாங்குளம், வவுனியா) ( யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திரு.திருச்சிற்றம்பலம் கதிரவேலு

மண்ணில்: 1941-08-09                                                                     விண்ணில்: 2021-03-19

காரைநகர் தங்கோடை கள்ளித்தெருவை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருச்சிற்றம்பலம் கதிரவேலு அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஓம்சக்தியின் அன்புக் கணவரும்,

சிவமாலினி, சிவசங்கர், உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

விஷ்ணு அவர்களின் அன்பு மாமனாரும்,

தியா, ஹரிஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா, சங்கரப்பிள்ளை, தியாகராசா, திலகவதி, உமாதேவி, சிவஞானம் மற்றும் பத்மாவதி, லோகநாயகி அம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு:
ஓம்சக்தி (மனைவி) +94779466155
சிவா (மகன்) +16024993676
உமா (மகன்) +917695841003
மாலினி (மகள்) +1 416 723 1310
விஷ்ணு (மருமகன்)  +1 416 723 1310

2 comments

  1. ஆழ்ந்த அனுதாபம் தெரிவிபதுடன் ஆத்மா சாந்தி அடைய பிரத்திபோம்

    • "சித்தர் ரை மயிலாத்தை" on March 21, 2021 at 12:21 am

    “சித்தர் ரை மயிலாத்தை” யின் கடைசி பேரனும், எங்கள் நிகரில்லா வலிமையின் அச்சாணியான மாமாவாகிய, கதிரவேலு திருச்சிற்றம்பலம் இறைபதம் அடைந்தார் என்ற செய்தி, உலகெங்கும் செழித்து வாழும் எங்கள் அனைவரையும், உறையவைத்துவிட்டது.

    “சித்தர் ரை மயிலாத்தை” என்பது ஓர் வேதம். எந்த சாஸ்திரங்களிலும் எழுதப்படாத வாழ்வின் தத்துவம். குறைந்தது ஏழு தலைமுறை யாவது மார்புதட்டி சொல்லும் சரித்திரம். எங்களுக்கு ஊட்டியது எங்கள் மாமாக்கள்! இன்று, எங்கள் கடைசி மாமாவும் எங்களை விட்டு விட்டு சென்றுவிட்டார் என்கின்றபோது….

    மாமாக்களின் கை பிடித்து நடக்கும் போது, எங்கள் தம்பி தங்கைகளை தடுக்கில் இருந்து புரட்டி, தள்ளி தவழ வைத்து, மேலும் நடக்க வைத்து – அதில் மெய் மறந்து, எட்டு உலகையும் அதிர விதைக்கும் எங்கள் மாமாக்கள்…. அந்த மாமாக்கள் ஒவ்வொருவரக…. கடைசி மாமாவும் போகும்போது…. என் சுவாசமே என்னை அச்சுறுத்துகிறது.

    “மீசைக்கார தாத்தா” என்று எங்கள் பிள்ளைகளின் மனதில் தனியிடம் பிடித்த, எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்தில் நாங்கள் இல்லை என்கின்ற பொது…. இந்த வையகமே அழிந்துவிடாதா???????

    எங்களின் மாமாக்களே எங்கள் வாழ்வின் தத்துவம். வாழ்கை என்கின்ற போரில், தர்மத்தையும் அதர்மத்தையும் பிரித்து காட்டுவது “சித்தர் ரை மயிலாத்தை” என்கின்ற வேதம். இதை யுணர்த்தியது எங்கள் மாமாக்கள். இன்று எங்கள் கடைசி மாமாவும் இல்லை என்கின்றபோது…..

    இப்படிக்கு,

    வளம் மிகுந்த நாட்டில், கண்ணில் ஈரம் இன்றி, கதறியழ ஆளுமின்றி, சோகத்துக்கு சோரம்போன மருமக்கள்!

Comments have been disabled.