Category: News Latest

News From karainagar

May-16-2011 Karaioli TV

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தமிழ் புத்தாண்டுச் செய்திகள்

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலகம் அமைக்கும் பணி

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலகம் அமைக்கும் பணி

புதுவீதி சந்தியில் அமைந்துள்ள நூல்நிலையத்தில் அத்திவாரக் கட்டுமானப்பணி நிறைவு பெற்று அண்மையில் மணல் நிரப்பும் பணி இடம்பெற்றது. இம்மணலைக் காரைநகர் பலகாட்டைச் சேர்ந்த அன்பர் ஒருவர் இலவசமாக வழங்கியிருந்தார்.

மேலும்

 

காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம்

காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம்

மேற்படி திட்டம் தொடர்பாக கலந்துரையாடலும் அங்குரார்ப்பணக் கூட்டமும் 29-08-2010 மாலை 4.00 மணியளவில் லண்டன் வெம்பிளியில் உள்ள Moore Spice Restaurant மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏற்பாட்டாளர் திருDr. S நடராசா அவர்கள் தலைமை தாங்கினார். பின்வரும் அன்பர்கள் சமூகமளித்திருந்தனர்.

1. திரு இ. சிவசுப்பிரமணியம்

2. திரு தி. ஞானேஸ்வரன்

3. திரு பொ. தருமநாயகம்

4. திரு த. கமலதேவி

5. திரு வி. நாகேந்திரம்

6. திரு பொ. ஞானானந்தன்

7. திரு தி. இரகுபதிரஜா

8. கலாநிதி ச. சபாரட்ணம்

9. திரு சு. சரவணபவான்

10. திரு ச. ஞானப்பிரகாசம்

11. திரு சிவா. தி. மகேசன்

12. திரு ந. ரவீந்திரன்

13. திரு வே. கயிலைநாதன்

14. திரு ச. பிரபாகரன்

15. திரு க. அனந்தராஜ்

16. திரு செ. கிருபாகரன்

17. திரு க. பாலகிருஸ்ணன்

18. திரு மு. தங்கராஜா

Dr. S நடராசா அவர்கள் இத்திட்;டத்தின் நோக்கத்தினையும் அதனை செயல்படுத்தும் வழிமுறை பற்றியும் எடுத்துக்கூறினார். முதலாவதாக இத்திட்டத்திற்கு வேண்டிய நிதி சேகரிப்பதற்கும் மேற்கொண்டு  அதனை நடைமுறைபடுத்துவதற்கும் பிருத்தானியாவில் ஒரு குழு அமைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவில் இணைப்பாளர்கள் மூவரும் அங்கத்தவர்கள் பத்து பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இணைப்பாளர்களாக –

1. திரு நடராசா ரவீந்திரன்

2. திரு இராமநாதன் சிவசுப்பிரமணியம்

3. திரு முருகேசு தங்கராசா

அங்கத்தவர்களாக

1. கலாநிதி ச. சபாரட்ணம்                6.  திரு தி. ரகுபதிராஜா

2. திரு வி.நாகேந்திரம்                      7.  திரு தி. ஞானேஸ்வரன்

3. திரு சிவா. தி. மகேசன்                  8.  திரு சு. சரவணபவான்

4. திரு பொ. ஞானானந்தன்               9.  திரு ச. பிரபாகரன்

5. திரு க. பாலகிருஸ்ணன்               10. திரு  பொ. தருமநாயகம்

தெரிவு செய்யப்பட்டனர்

நிதி சேகரிப்பு

1. முதலாம் கட்டமாக இத்திட்டத்திற்கு  முழு ஈடுபாட்டுடன் ஆதரவளிக்கும் அன்பர்களை அணுகி அவர்களிடம் கணிசமான நிதியை திரட்டுவது என்றும் இரண்டாம் கட்டமாக லண்டன் வாழ் காரை அன்பர்கள் அனைவரிடமும் இத்திட்டத்தினை தெரியப்படுத்தி அவர்களிடமும் நிதியை திரட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

2. லண்டன் காரைநலன்புரிச் சங்கம் இங்கிலாந்திலுள்ள அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குச் சேகரிக்கும் நிதி அவ்வறக்கட்டளையின் கோட்பாடுகளுக்குள் அமைவதால் திரட்டப்படும் நிதி லண்டன் காரைநலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் அதனூடாகச் செலுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் நிமித்தம் காரைநலன்புரிச் சங்கம் தனிப்பட ஒரு வங்கிக் கணக்கினைத் துவக்கியுள்ளது. இந்தமுறையினைப் பின்பற்றுவதனால் நூலகத்திட்டத்திற்கு வரிச்சலுகைகள் கிடைக்கவுள்ளது. சேகரிக்கப்படும் நூலக நிதியினை லண்டன் காரைநலன்புரிச் சங்கம்  மேற்கூறிய கணக்கில் வைப்பிலிட்டு நூலகத்திட்டக்குழுவின் அனுமதியுடன் தேவைக்கேற்பப் காரைநகரிலுள்ள அபிவிருத்திச் சபைக்கு அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

3. நூலக திட்டப் பணிகள் காரைநகரிலுள்ள காரைஅபிவிருத்திச் சபையால் செயல்படுத்தப்படும் என்றும் இப்பணிகளிற்கு உதவியாக இணைப்பாளர் ஓருவரை தெரிவு செய்து அவரின் உதவியுடன் இத்திட்டத்தினை மேற்பார்வை செய்து செயற்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் இணைப்பாளராக Dr. S நடராசா அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இவ்விணைப்பாளர் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஏனைய சபைகளினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவைகளுடன் தொடர்புகொண்டு இப்பணியினைத் துரிதப்படுத்வேண்டுமென்று  கேட்டுக் கொள்ளப் பட்டார்.

4. இத்திட்டத்திற்கான நிதியை இலங்கையிலுள்ள காரைநகர் அன்பர்களிடமிருந்தும் பெறலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான முயற்சியும் எடுக்கப் படவேண்டுமென்றும்

தீர்மானிக்னப்பட்டது

கடிதத்தலைப்பு

(Letterhead) –

காரைநகர் நூலகத் திட்ட குழுவிற்கென ஒரு தனியான Letterhead  அச்சிடுவதென முடிவெடுக்கப்பட்டது.

பற்றுச்சீட்டு புத்தகம் –

இத்திட்டத்திற்குப் பெறப்படும் நிதிக்குப் பற்றுச்சீட்டு வழங்குவதற்குப்  பற்றுச்சீட்டுப் பத்தகம் அச்சிடப் படவேண்டுமெனவும் அதில் காரைநலன்புரிச்சங்கத்தின் அறக்கட்டளை இலக்கத்தினையும் குறிப்பிடவேண்டமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

கணிசமான நிதி வழங்குவோர்

இத்திட்டத்திற்கு கணிசமான நிதி பங்களிப்பு செய்வோரின் விபரம் கட்டிடத்தில் பொருத்தமான இடத்தில் பொறிக்கப்படும்.

நூலகத்தினை நிர்வகிக்கும் பொறுப்பு

இந்நூலகத்தினை காரைநகர் அபிவிருத்திசபையே நிர்வகிக்கும் என்றும் காரைஅபிவிருத்திச் சபையின் அலுவலகமும் இக்கட்டிடத்தில் இயங்குவதே சிறந்தது என்றும் கூறப்பட்டது.

கூட்டம் நன்றி உரையுடன் பிப. 7.00 மணிக்கு நிறைவுபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கு பற்றியோர் நூலகத் திட்டத்திற்கு மொத்தம் £24,000 நிதி   வழங்குவதாக உறுதி அளித்தனர்.

Dr S நடராசா

ஏற்பாட்டாளர்

 

 

 

 

 

காரைநகரின் அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

காரைநகரின்  அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

கனடா காரை கலாச்சாரமன்றத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம்திகதி மாலை 5.30மணிக்கு சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் காரைநகர் அபிவிருத்திபற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 70பேர் வரையில் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், நன்னீர் பற்றிக்கலந்துரையாடப்பட்டது. அதில் கல்வி சம்பந்தமாக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொது நூலகம் அமைப்பது பற்றிக்கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்திற்கு காரை அபிவிருத்திசபையினால் அமுல்நடாத்தபடவுள்ள காரை அபிவிருத்திசபை – பொது நூலகத்திட்டம் முன்மொழியப்பட்டபோது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.அந்தக்கருத்துக்களில் அநேகரின் கருத்துக்கள் நூலகம் அமைப்பதற்கு ஆதரவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மேலும் இத்திட்டத்தை எமது மன்றத்தின் சார்பில் உதவிகளை மேற்கொள்ளவென 11பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவிற்கு தலைமைதாங்க ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:

ஒருங்கிணைப்பாளர்:

திரு. அமிர்தலிங்கம் நடராஜா

அங்கத்தவர்கள்:

1.  வேலுப்பிள்ளை ராஜேந்திரம்

2. திரு. ரவிச்சந்திரன் தம்பிராஜா

3. திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா

4. திரு. கண்ணன் நடராஜா

5. திரு. அருள்செல்வன் ராசையா

6.  சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம்

7. திரு. சிவபாதசுந்தரம் கணபதிப்பிள்ளை

8. திரு. தயாபரன் நடராஜா

9 திரு. ரவி ரவீந்திரன்

10. திரு. குழந்தைவேலு பொன்னம்பலம்

 

இந்நூலகத்திற்கென ஏற்கனவே சில காரைஅன்பர்களின் உதவியுடன் ஒரு காணி காரை அபிவிருத்திச்சபையின் பெயரில் 2007 கொள்வனவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நூலகத்தை நான்கு பெரும் பிரிவுகளாக (Lending, Reference, Children, Computer) நடாத்த திட்டமிட்டுள்ளபோதும், கிடைக்கப்பெறும் மூலதனத்திற்கு அமைய அவ்வப்பிரிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

காரை அபிவிருத்திச்சபை நூலகம் அமைப்பது தொடர்பான முதல்கட்ட கூட்டத்தொடர் இம்மாதம் ஆகஸ்ட் 19ம் திகதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த பொது நூலகத்தினை காரைநகர் அபிவிருத்திசபை, கனடா, பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள காரைநகர் மன்றங்களினதும், மற்றும் பொதுநலன் விரும்பிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமான விரிவான அறிக்கைகளும், கட்டட அமைப்பு, தேவைப்படும் மூலதனம் போன்ற திட்டவட்டமான அமைப்பு தகவல்களும், இதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரபூர்வமான பிரேரணைகள், உரிய ஆவணங்கள் என்பன கூடிய சீக்கிரம் காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்பு இது பற்றி மற்றும் வெளிநாட்டு மன்றங்களுடனும் நலன் விரும்பிகளுடனும் கனடா-காரை கலாச்சார மன்றம் விரிவான ஆலோசனைகள் செய்து எமது கணிசமான பங்களிப்பினை செய்ய நாம் தயாராக உள்ளோம்.

இந்தவகையில் கனடா வாழ் காரைமக்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தினூடாக தொடர்புகொண்டு உங்கள் கருத்துக்களை எமதுஇணையத்தள முகவரிக்கு (karainagar@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்