காரைநகரின் அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

காரைநகரின்  அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

கனடா காரை கலாச்சாரமன்றத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம்திகதி மாலை 5.30மணிக்கு சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் காரைநகர் அபிவிருத்திபற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 70பேர் வரையில் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், நன்னீர் பற்றிக்கலந்துரையாடப்பட்டது. அதில் கல்வி சம்பந்தமாக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொது நூலகம் அமைப்பது பற்றிக்கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்திற்கு காரை அபிவிருத்திசபையினால் அமுல்நடாத்தபடவுள்ள காரை அபிவிருத்திசபை – பொது நூலகத்திட்டம் முன்மொழியப்பட்டபோது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.அந்தக்கருத்துக்களில் அநேகரின் கருத்துக்கள் நூலகம் அமைப்பதற்கு ஆதரவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மேலும் இத்திட்டத்தை எமது மன்றத்தின் சார்பில் உதவிகளை மேற்கொள்ளவென 11பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவிற்கு தலைமைதாங்க ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:

ஒருங்கிணைப்பாளர்:

திரு. அமிர்தலிங்கம் நடராஜா

அங்கத்தவர்கள்:

1.  வேலுப்பிள்ளை ராஜேந்திரம்

2. திரு. ரவிச்சந்திரன் தம்பிராஜா

3. திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா

4. திரு. கண்ணன் நடராஜா

5. திரு. அருள்செல்வன் ராசையா

6.  சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம்

7. திரு. சிவபாதசுந்தரம் கணபதிப்பிள்ளை

8. திரு. தயாபரன் நடராஜா

9 திரு. ரவி ரவீந்திரன்

10. திரு. குழந்தைவேலு பொன்னம்பலம்

 

இந்நூலகத்திற்கென ஏற்கனவே சில காரைஅன்பர்களின் உதவியுடன் ஒரு காணி காரை அபிவிருத்திச்சபையின் பெயரில் 2007 கொள்வனவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நூலகத்தை நான்கு பெரும் பிரிவுகளாக (Lending, Reference, Children, Computer) நடாத்த திட்டமிட்டுள்ளபோதும், கிடைக்கப்பெறும் மூலதனத்திற்கு அமைய அவ்வப்பிரிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

காரை அபிவிருத்திச்சபை நூலகம் அமைப்பது தொடர்பான முதல்கட்ட கூட்டத்தொடர் இம்மாதம் ஆகஸ்ட் 19ம் திகதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த பொது நூலகத்தினை காரைநகர் அபிவிருத்திசபை, கனடா, பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள காரைநகர் மன்றங்களினதும், மற்றும் பொதுநலன் விரும்பிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமான விரிவான அறிக்கைகளும், கட்டட அமைப்பு, தேவைப்படும் மூலதனம் போன்ற திட்டவட்டமான அமைப்பு தகவல்களும், இதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரபூர்வமான பிரேரணைகள், உரிய ஆவணங்கள் என்பன கூடிய சீக்கிரம் காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்பு இது பற்றி மற்றும் வெளிநாட்டு மன்றங்களுடனும் நலன் விரும்பிகளுடனும் கனடா-காரை கலாச்சார மன்றம் விரிவான ஆலோசனைகள் செய்து எமது கணிசமான பங்களிப்பினை செய்ய நாம் தயாராக உள்ளோம்.

இந்தவகையில் கனடா வாழ் காரைமக்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தினூடாக தொடர்புகொண்டு உங்கள் கருத்துக்களை எமதுஇணையத்தள முகவரிக்கு (karainagar@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்