Category: CANADA DAY

HAPPY CANADA DAY!

 

 

CKCA is wishing you all a very Happy Canada Day! 

         

                                         HAPPY CANADA DAY!
canada-day-flag

Happy Canada Day!

 

 

CKCA is wishing you all a very Happy Canada Day!

 

HAPPY CANADA DAY!

HAPPY CANADA DAY!

 

 

CKCA is wishing you all a very Happy Canada Day! 

         

                                         HAPPY CANADA DAY!
canada-day-flag

HAPPY CANADA DAY

CANADA_DAY_CKCA

கனேடிய அன்னேயே நீ வாழ்க வாழ்கவே

Canada Day

தமிழர்  நாம்

கடலலையில் அகப்பட்ட படகாக

உலகின் நாலாபக்கமும்

தூக்கியெறிப்பட்டோம்

ஈழமென்னும் சொல்லை

எமக்குரியதாக மாற்ற

 

இன்றுமது

தொடர்கதையாகவே….

 

தூக்கியெறிப்பட்ட

எம்மவர்களை

அள்ளி அணைத்து உச்சிமுகர்ந்தாள்

கனேடிய அன்னை

தன் பனியழகு பூசிய கரங்களால்

 

கனடா….!

 

உச்சரிக்கும் வேளையிலே

எங்கிருந்தோ வந்த

பனிச்சாரல்

முகச்சாரலின் வலிகளை

துடைத்து தூக்கியெறிந்து

செல்கின்றதே தெரிகின்றதா?

 

அதோ அவள்தான்

கனடா !

வாழ்த்துகளுக்காக

தவமிருப்பதில்லை

மற்றவரை வாழ்த்திக்கொண்டே

நடப்பவள் கடப்பவள்

முயற்சியென்பதன்

முழு விளக்கமும் அவள்தான்

 

ஆமாம்

வலிகளோடு வந்த எம்மவர்க்கு

வளங்களையும்

வாழ்க்கையையும்

ஏன்

பலருக்கு உயிர்களையும்

பத்திரப்படுத்திக் கொடுத்தவள்

இந்த அன்னை

 

கனடா!

என்னும் மழலை பிறந்து

இன்றுடன்

நூற்று ஜம்பது ஆண்டுகளாம்

நம்ப முடிகின்றதா??

 

அழகிய

பனிமலைகளும்

ஆகாயத்தை தொட்டு

அகமகிழும் கட்டங்களும்

இன்றைய உறவுகளின் சிக்கலாக

நெடுஞ்சாலைகளும்

அன்னையவளை

அங்கொன்றும் இங்கொன்றுமாக

தொட்டுவிளையாடும் கடற்கரைகளுமாக

அவள்

பூத்துக்குழுங்கி

வளத்தில் பொங்கிச் செழிக்கின்றாள்

 

கனடா!

 

மனிதன் வாழ்வதற்கு

ஏற்ற இடமாக

அவனாலேயே

உருவாக்கப்பட்டு

ஊரும் சனமும்

நாற்றுகளாகவே நடப்பட்டவை

 

நாற்றுகளாக நட்டப்பயிர்

அமோக விளைச்சல் தருவதுவாய்

நாடும் வளர்கின்றது

நாற்றுகளான மக்களும்

வளர்ந்தபடி

 

மொழியும் இனமும்

பலவானாலும்

எல்லோரும்

ஓர் தாய் வயிற்றுபிள்ளைகளாக

இல்லை இல்லை

அவர் அவர் வழிதன்னில்

பயணிக்கும் இரயில்

பயணிகளாக

ஒற்றுமையுடன் வாழ் நாட்களின்

மகிழ் வர்ண கோலங்களை

பனித்தரையில் வரைந்து

ஆரவாரிக்கின்றனர்

 

கனடா!  அன்னை

எல்லையில்லா சுகந்திரமும்

எண்ணில் அடங்கா வாய்ப்புகளையும்

கண்ணில் தெரியா பாதுகாப்பையும்

கற்பனைகள் நிறை வாழ்க்கையையும்

அள்ளி அள்ளி தருகின்றாள்

ஆசைமிகத் தழுவுகின்றாள்

பனிக்கரங்களால்

தன் குழவியாக

 

அன்னையவள்

அன்புமடியில் நீயிருந்து

அவள் தரும்

சுகந்திரத்தை அளவாகவும்

அவள் வழங்கும்

வாய்புகளை தெளிவாகவும்

அவள் அன்புக்கரங்களின்

பாதுகாப்புக்குள்ளும்

வளர்ந்து

உன்னையும்

உனது சுற்றத்தையும்

வளர்த்திடு நீ வாழ்ந்திடு

 

கனேடிய அன்னையே

நாம்

ஈழமகள் பெற்றடுத்த பிள்ளைகள்தாம்

ஆனாலும்

எம்மை வளர்கும் நீயும் எம் தாயே

 

ஆண்டுகள் நூறுகளாக

ஆயிரமாயிரம் கடக்கவேண்டும்

ஆயுளும் அழகும் வளமும்

உன்னில் சிறக்க வேண்டும்

இன்னலும் வலியும் கொண்ட

எளியவரை என்றும் – நீ

மடியேந்தி வளர்க்க வேண்டும்

உன்னில் தவழும் மழலைகளுடன்

என்றும் உயரம் நோக்கி -நீ

வளர வேண்டும்

வாழ்க  வாழ்கவே -நீ

என்றும் வாழ்கவே

 

——— துளசிதன்

 

 

HAPPY CANADA DAY!

CKCA is wishing you all a very Happy Canada Day! Hope you all have a very safe and happy Canada Day!

 

                                              

                                              HAPPY CANADA DAY!
canada-day-flag