Tag: வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை கணனி அறைத் திறப்பு விழாவும் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ்சூட்டும் விழாவும் இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை கணனி அறைத் திறப்பு விழாவும் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ்சூட்டும் விழாவும் இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

1970இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாக கல்வித்திணைக்களத்தால் அமைக்கப்பட்ட வகுப்பறை ஒன்று கணனி,நூலகப் பயன்பாட்டுக்கேற்றவாறு மறுசீரமைக்கப்பட்டு கணனி,நூலகப் பயன்பாட்டிற்காக இன்று பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு ஜோன் குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.கே.சதாசிவம் அவர்களும் இணைந்து திறந்துவைத்தனர்.

இப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் 2013இல் பாடசாலையின் முன்புற மதில் பாடசாலை நுழைவாயில் என்பவற்றையும் தற்போது கணனி நூலக அறை மறுசீரமைப்பு,கணனிக் கொள்வனவு,களஞ்சிய அறை அமைத்தல் போன்றவற்றிற்கான நிதி உதவியை வழங்கியுள்ளார். நூலகத்திற்கான ஒருதொகுதி நூல்களை குயின்சி புத்தக விநியோகத்தர் திரு சு.கணநாதன் வழங்கியுள்ளார்.

ஒரு தொகுதி மாணவர்கள் கணனிச் செயற்பாட்டில் ஈடுபடும்போது ஏனைய மாணவர்கள் நூலகத்தினைப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ஒழுங்கசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் மாணவ முதல்வர்களுக்கான சின்னங்கனைச் சூட்டி உரையாற்றும்போது இப்பாடசாலையை மீள ஆரம்பிக்கும்போது ஆங்கில அறிவை வளர்க்கக்கூடிய பாடசாலையாக அமையவேண்டும் என்னும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது எனவும் இப்பாடசாலை மாணவர்கள் சிறந்த ஆரோக்கியம் உள்ளவர்கள் எனவும் குறிப்பிட்டார். ஏதிர்காலத்தில் ஆரம்பப் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடம் அமையவேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

இப்பணிகளில் இணைப்பாளராகக் கடமையாற்றிய ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.கே.சதாசிவம்,பழைய மாணவர் சிவராமலிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.


 DSC09385 (Copy) DSC09387 (Copy) DSC09395 (Copy) DSC09394 (Copy) DSC09392 (Copy) DSC09391 (Copy) DSC09390 (Copy) DSC09389 (Copy) DSC09404 (Copy) DSC09403 (Copy) DSC09402 (Copy) DSC09400 (Copy) DSC09399 (Copy) DSC09396 (Copy) DSC09426 (Copy) DSC09425 (Copy) DSC09423 (Copy) DSC09422 (Copy) DSC09421 (Copy) DSC09420 (Copy) DSC09419 (Copy) DSC09417 (Copy) DSC09416 (Copy) DSC09415 (Copy) DSC09413 (Copy) DSC09412 (Copy) DSC09411 (Copy) DSC09410 (Copy) DSC09409 (Copy) DSC09408 (Copy) DSC09407 (Copy) DSC09405 (Copy) DSC09466 (Copy) DSC09465 (Copy) DSC09463 (Copy) DSC09461 (Copy) DSC09460 (Copy) DSC09458 (Copy) DSC09457 (Copy) DSC09456 (Copy) DSC09455 (Copy) DSC09454 (Copy) DSC09450 (Copy) DSC09448 (Copy) DSC09447 (Copy) DSC09446 (Copy) DSC09444 (Copy) DSC09443 (Copy) DSC09442 (Copy) DSC09440 (Copy) DSC09439 (Copy) DSC09438 (Copy) DSC09437 (Copy) DSC09436 (Copy) DSC09435 (Copy) DSC09434 (Copy) DSC09433 (Copy) DSC09432 (Copy) DSC09430 (Copy) DSC09429 (Copy) DSC09428 (Copy) DSC09427 (Copy)

 

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தைப் பணிப்பாளர் தி.விஸ்வருபன்அவர்கள் கலந்துகொண்டுசிறப்பித்தார்.பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வருடாந்த விளையாட்டுப்போட்டி கோலாகலமாக இன்று இடம்பெற்றது.சிறார்களின் குழுப் போட்டிகள்,இடைவேளை இசைவும் அசைவும் நிகழ்வு,தாம்பிழுவைப் போர் என்பன கண்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்வுகளாக அமைந்தன.