Tag: சடையாளி கேணி

காரைநகர் நிலத்தடி நீரை பாதுகாக்க உதவும் திட்டத்திற்கு உதவ முன்வாருங்கள்!

நிலத்தடி நீரை பாதுகாக்க உதவும் கேணிகளை புனரமைக்க முன்னெடுக்கும்  முயற்சிகளுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் பொது மக்களின் துணையோடு நிதி சேர்த்து அத்திட்டங்களினை ஊக்குவிக்கப்பட வேண்டும் என கனடா காரை கலாச்சார மன்றம் தீர்மானித்திருந்தது. ஈழத்து சிதம்பரம்  வடக்கு வீதியில் அமைந்துள்ள கந்தர் குண்டு ஆழமாக்கும் திட்டம் திரு.வே.சபாலிங்கம் அவர்களின் முயற்சியால் ஊர் தொழிலாளர்களின் உழைப்பினோடும், சிரமதானத்தின் மூலமும் முன்னெடுக்கப்பட்டது. இலண்டன் காரை அபிவிருத்தி சபையின் கணிசமான உதவியோடு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வருடம் ஏற்பட்டுள்ள வறட்சி நிலமையினை சாதகமாக்கி மேலும் இக் கந்தர் குண்டினை ஆழமாக்கி அதிகூடியளவு மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் மீண்டும் சிரமதானத்தின் மூலமும், ஊர் தொழிலாளர்களின் உழைப்பின் மூலமும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடனும் ஆரப்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது. கனடா வாழ் காரைநகர் மக்களின் உதவியோடு இத்திட்டத்திற்கான நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

அத்துடன் சடையாளி ஞான வைரவர் ஆலய திருக்குள கேணி இப்பகுதி மக்களின் முயற்சியால் கடந்த மாதம்(ஆகஸ்ட்) முதல் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு கனடா காரை கலாச்சார மன்றம் உதவ முன்வந்ததையிட்டு முதற்கட்டமாக 50,000 ரூபாய்களை வழங்கி நிதி சேகரிப்பு திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கின்றது.

நிலத்தடி நீரை சேமிக்க உதவும் இவ்விரு திட்டங்களிற்கும் உலகம் முழுவதிலும் உள்ள காரைநகர் மக்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் PayPal ஊடாக இவ்விரு திட்டங்களிற்கும் உங்கள் நிதி உதவியினை செலுத்த முடியும். அல்லது 416 642 4912 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவியினை செலுத்த முடியும். இவ்விரு செயற்பாடுகளிற்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக வழங்கப்படும் நிதி உதவியினை காரைநகர் அபிவிருத்தி சபை முன்னின்று செயற்படுத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இல

 

பெயர்

 

கந்தர் குண்டு அன்பளிப்பு

 

சடையாளி திருக்குள அன்பளிப்பு

 

1

கனடா காரை கலாச்சார மன்றம்

 

50,000 ரூபா

 

 

2

சரவனபவான்  அருளம்பலம்

 

$75.00

   2866

3

தீசன் திரவியநாதன்

 

$1000.00

   2872

4

சிவானந்தன்  செல்வரத்தினம்

 

$200.00

   2877

5

தீசன் திரவியநாதன்

$438.20

 

    2881

 

 

 

 

 

 

 

 

 

 

DSC_01452-1355x900 DSC00940 (Copy) DSC00945 (Copy) DSC00947 (Copy) DSC00948 (Copy) DSC00953 (Copy) DSC00955 (Copy) DSC00956 (Copy) DSC06632 DSC06634 DSC06636 DSC06637 DSC06641 DSC06643 DSC06644