Tag: கனடா-காரை கலாசார மன்றம் யாப்பு திருத்தம்

கனடா-காரை கலாசார மன்றம் யாப்பு திருத்தம் பற்றிய இரண்டாவது அறிவித்தல்! 25.02.2015

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றத்தின் யாப்பு திருத்தம் தொடர்பாக 27.01.2015 அன்று முதலாவது அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது.

போஷகர் சபையினரின் கருத்துக்களிற்கு அமைய யாப்பு திருத்த குழு அமைக்கப்படவேண்டும் என்ற அறிவித்தல் விடப்பட்டிருந்தது. அத்துடன் 08.02.2015க்கு முன்னர் யாப்பு திருத்த குழுவில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இணைந்து கொள்ள விரும்பம் தெரிவித்தவர்கள் மற்றும் போஷகர் சபையின் சார்பில் இணைந்து கொண்டவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து யாப்பு திருத்த குழு அமைக்கப்பட்டு 16.02.2015 திங்கட்கிழமை யாப்பு திருத்த குழு கூட்டம் கூட்டப்பட்டது.

யாப்பு திருத்த குழுவில் இடம்பெறுவோர் விபரம் வருமாறு:

1. திரு.வே.இராஜேந்திரம் (போஷகர் சபை இணைப்பாளர்)

2. திரு.த.பரமானந்தராஜா (தலைவர்)

3. திரு.ரவி ரவீந்திரன் (போஷகர் சபை உறுப்பினர்)

4. திரு.ஆ.கோடீஸ்வரன் (போஷகர் சபை உறுப்பினர்)

5. திரு.மு.வேலாயுதபிள்ளை (கணக்காய்வாளர்)

6. திரு.தீசன் திரவியநாதன் (பதில்- செயலாளர்)

7. திரு.சி.சச்சிதானந்தன்

8. திரு.ச.தவராஜா

9. திரு.க.பாலசுப்பிரமணியம்

16.02.2015 திங்கட்கிழமை நடைபெற்ற யாப்பு திருத்த குழுவின் கூட்டத்தில் மேற்படி குழுவில் இருந்து 6 அங்கத்தவர்கள் சமூகமளித்திருந்தனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினரால் கடந்த பொதுக்கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட யாப்பு திருத்த பிரேரணைகள் மற்றும் போஷகர் சபையினரால் பரிந்துரைக்கப்பட்ட பிரேரணைகள் விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ஆராயப்பட்டன. அவற்றில் இருந்து புதிய யாப்பு திருத்த பிரேரணைகள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கொண்டு யாப்பு திருத்தம் தொடர்பாக தற்போதைய கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு இணங்க பொதுச்சபை உறுப்பினர்களிடம் இருந்து யாப்பு திருத்தத்திற்கு யாப்பு திருத்த பிரேரணைகளை பெற்றுக்கொள்ள பொது அறிவித்தல் விடப்படுகின்றது.

கனடா காரை கலாசார மன்றத்தின் வளர்சியினையும் கனடா வாழ் காரை மக்களின் ஒற்றுமையினையும் கருத்திற் கொண்டும் காலத்திற்கு ஏற்ற வகையில் கனடா காரை கலாசார மன்றத்தின் வளர்ச்சியினையும் அடிப்படையாகக் கொண்டும் கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பு திருத்தத்திற்கு மன்ற அங்கத்தவர்களிடம் இருந்து யாப்பு திருத்த பிரேரணைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

10.03.2015 செவ்வாய்கிழமைக்கு முன்னர் யாப்பு திருத்தத்திற்கான பிரேரணைகளை அனுப்பி வைக்குமாறு யாப்பு திருத்த குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

10.03.2015க்கு முன்னர் எழுத்து மூலம் கிடைக்கப்பெறும் யாப்பு திருத்த பிரேரணைகள் மட்டுமே யாப்பு திருத்த குழுவினரால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆராயப்படும்.

இதுவரை கிடைக்கப்பெற்ற யாப்பு திருத்த பிரேரணைகள் மற்றும் 10.03.2015க்கு முன்னர் கிடைக்கப்பெறும் யாப்பு திருத்த பிரேரணைகள் யாப்பு திருத்த குழுவினரால் ஆராயப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படும் பிரேரணைகள் 21.03.2015 க்கு பின்னர் கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அனைவரது பார்வைக்காகவும் எடுத்து வரப்படும்.

யாப்பு திருத்த குழுவினரால் ஆராயப்பட்டு வெளியிடப்படவுள்ள யாப்பு திருத்த பிரேரணைகள் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அதனை எழுத்து மூலம் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்படும்.

ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு யாப்பு திருத்த குழுவினால் இறுதி முடிவு எடுக்கப்பட்டு எதிர்வரும் பொதுக்கூட்டத்தின் போது பொதுச்சபையின் வாக்கெடுப்பிற்கு சமர்ப்பிக்கப்படும்.

தயவு செய்து யாப்பு திருத்தம் தொடர்பாக தங்களது பிரேரணைகளை 10.03.2015க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

யாப்பு திருத்த குழுசார்பாக

கனடா-காரை கலாசார மன்றம் நிர்வாகம்